Tagged by: share

மித்ரன் செயலியும், இந்தியர்களின் நாட்டுப்பற்றும்.

ஒரு தொழில்நுட்ப சேவையை உருவாக்க நாட்டுப்பற்று தூண்டுதலாக அமையலாம். ஆனால், நாட்டுப்பற்றை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு சிறந்த தொழில்நுட்ப சேவையை உருவாக்கிவிட முடியுமா என்று தெரியவில்லை. அதிலும் நிச்சயமாக, நாட்டுப்பற்றை வர்த்தக நோக்கில் சாதகமாக்கி கொள்வதற்காக உருவாக்கப்படும் திடீர் சேவைகள் சிறந்ததாக இருக்க வாய்ப்பில்லை. இப்போது சீன செயலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் திடீர் இந்திய செயலிகளை வைத்தே இதை புரிந்து கொள்ளலாம். இந்திய சந்தையில் சீன ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. […]

ஒரு தொழில்நுட்ப சேவையை உருவாக்க நாட்டுப்பற்று தூண்டுதலாக அமையலாம். ஆனால், நாட்டுப்பற்றை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்...

Read More »

ஜூம் சந்திப்புகளின் பக்க விளைவுகளும், பின் விளைவுகளும்!.

நம்மவர்களை சும்மா சொல்லக்கூடாது, ஒரு சில மென்பொருள் சேவைகளை வெறித்தனத்துடன் தழுவிக்கொண்டு விடுகின்றனர். ’பேஸ்புக்’ இதற்கு நல்ல உதாரணம். பேஸ்புக் அறிமுகமான அமெரிக்காவில், இளம் தலைமுறையினர் இதை வயோதிகர்களின் கூடாரம் என ஒதுக்கி தள்ளி ’ஸ்னேப்சேட்’ போன்ற புதுயுக சேவைகளை நாடத்துவங்கிய போது, நாம் வலைப்பதிவுகளை கூட கிடப்பில் போட்டுவிட்டு, பேஸ்புக் டைம்லைனில் அடைக்கலம் ஆனோம். இதே போல ’வாட்ஸ் அப்’ சேவையையும் ஆரத்தழுவிக்கொண்டோம். இடையே ’டிக்டாக்’கையும் ஆராதிக்க துவங்கினோம். இந்த வரிசையில் இப்போது ’ஜூம்’ செயலியும் […]

நம்மவர்களை சும்மா சொல்லக்கூடாது, ஒரு சில மென்பொருள் சேவைகளை வெறித்தனத்துடன் தழுவிக்கொண்டு விடுகின்றனர். ’பேஸ்புக்’ இதற்க...

Read More »

குழந்தைகள் படத்தை சமூக ஊடகங்களில் பகிரும் உரிமை; சில முக்கிய கேள்விகள்

நெதர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக பிபிசியில் செய்தி வெளியாகி, அந்த செய்தியை ஆதாரமாக கொண்டு, புகைப்பட துறை சார்ந்த இரண்டு முக்கிய தளங்களில் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. எங்கோ வெளிநாட்டு நீதிமன்ற வழக்கு என்றாலும், இதில் வழங்கப்பட்ட தீர்ப்பு நிச்சயம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைப்பதாகவே இருக்கிறது. சமூக ஊடகத்தில் பாட்டி ஒருவர் பகிர்ந்த பேரக்குழந்தைகள் படத்தை நீக்க வேண்டும் என்பது தான் இந்த தீர்ப்பின் சாரம். குழந்தைகளின் அம்மா, அதாவது […]

நெதர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக பிபிசியில் செய்தி வெளியாகி, அந்த செய்தியை ஆதாரம...

Read More »

அசையும் படங்களை தேடுவதற்கான தேடியந்திரம்

எல்லாம் வல்ல கூகுள் என்று சொல்லப்படுவதை மீறி, ஒவ்வொரு வகையான தேடலுக்கும் அதற்கேற்ற தனி தேடியந்திரம் தேவை என நீங்கள் உணரும் தருணம் ஏற்படலாம். ஜிப்கள் என சொல்லப்படும் முடிவில்லா அசையும் படங்களை தேடும் நிலை ஏற்பட்டால் இதை உணரலாம். அப்போது நீங்கள் நாடக்கூடிய தேடியந்திரம் ‘ஜிஃபி’யாக தான் இருக்கும்.- https://giphy.com/ ஜிஃபி பற்றி பார்ப்பதற்கு முன் ஜிப்கள் பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம். அசையும் படங்கள் என அழைக்க கூடிய ஜிப்களை இணையத்தில் எல்லா இடங்களிலும் பார்க்கலாம். […]

எல்லாம் வல்ல கூகுள் என்று சொல்லப்படுவதை மீறி, ஒவ்வொரு வகையான தேடலுக்கும் அதற்கேற்ற தனி தேடியந்திரம் தேவை என நீங்கள் உணரு...

Read More »

புதிய மின்மடல் அறிமுகம் – இணைய மலர்

இது லாக்டவுன் கால இணையதளம்! கொரோனாவால் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழலில், பிள்ளைகள் பலரது மனதில் எழும் கேள்விக்கு பதிலாக உருவாக்கப்பட்டிருக்கும் இணையதளம் ’டாட் ஐயம் சோ போர்ட்’ (https://dadimsobored.com/ ). வீட்டிலேயே இருப்பதால், பொழுது போகாமல் அலுப்பாக இருக்கும் தானே. இது தொடர்பாக ஆங்கிலத்தில் பிள்ளைகள் அப்பாவிடம் முறையிடுவது போல இந்த தளத்தின் பெயர் அமைந்திருக்கிறது.- அப்பா, மிகவும் போரடிக்கிறது!. இந்த கேள்விக்கு பதில் அளிக்கு வகையில் தான் தளத்தின் உள்ளடக்கம் அமைந்திருக்கிறது. அதாவது, […]

இது லாக்டவுன் கால இணையதளம்! கொரோனாவால் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழலில், பிள்ளைகள் பலரது மனதில் எழும...

Read More »