நாமெல்லாம் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களுக்கு அடிமையாகி விட்டோம் என்று எச்சரிக்கும் அளவுக்கு, இவை நம் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ரெஸ்டாரட்டுக்கு சாப்பிட சென்று விட்டு, உடன் வந்த நண்பர் முகத்தை கூட பார்க்காமல், ஸ்மார்ட் போன் திரையை பார்த்துக்கொண்டிருப்பது அல்லது வேலைக்கு நடுவே திடிரென நினைத்துக்கொண்டு, போனில் நோட்டிபிகேஷன் வந்திருக்கிறதா என பார்ப்பது போன்றவை எல்லாம் இதன் அடையாளம் தான்.
இதை டிஜிட்டல் மோகம் அல்லது டிஜிட்டல் போதை என குறிப்பிடலாம் எனில், இதற்கு தீர்வாக தான் டிஜிட்டல் டீடாக்ஸ் முன்வைக்கப்படுகிறது. அதாவது டிஜிட்டல் விலக்கு என பொருள்.
நம் வாழ்வில் டிஜிட்டல் சாதனங்களின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில், இடையே அவ்வப்போது அவற்றை தற்காலிகமாக விலக்கி வைப்பதை தான் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். டீடாக்ஸ் என்பது மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் வார்த்தை. பொதுவாக உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் செயல்பாட்டை இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.
இதே போல, நம் வாழ்க்கையில் டிஜிட்டல் நச்சு ப்பழக்கங்களை நீக்குவதற்கான மருந்து தான், டிஜிட்டல் டீடாக்ஸ் எனும் டிஜிட்டல் விலக்கு. வாரம் அல்லது மாதத்தின் ஏதேனும் ஒரு நாளில் குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு போனை தள்ளி வைத்துவிட்டு, நிஜ வாழ்க்கை சமூக உறவில் கவனம் செலுத்துவதன் மூலம் இதை மேற்கொள்ளலாம். ஸ்மார்ட்போன் மட்டும் அல்லாமல், லேப்டாப், டிவி போன்றவற்றையும் இந்த விலக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஏதோ போனின்றி அமையாது உலகு என்பது போல நாம் ஸ்மார்ட்போன்களுக்கு பழகிவிட்டாலும், இந்த சாதனங்களில் மூழ்கி இருப்பதற்கு இடையிடையே ஓய்வு கொடுத்து, நிஜ வாழ்க்கையில் லயித்திருப்பதன் அவசியத்தை டிஜிட்டல் விலக்கு மூலம் வலியுறுத்துகின்றனர்.
மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை சமனை பெற இந்த டிஜிட்டல் விலக்கு உதவுகிறது.
டிஜிட்டல் டீடாக்ஸ் எனும் பெயரிலேயே ஒரு நிறுவனமும் இருக்கிறது. இது தவிர, டிஜிட்டல் டீடாக்ஸ் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரைகளும், இதற்கு வழிகாட்டும் கட்டுரைகளும் எழுதப்பட்டு வருகின்றன.
இவ்வளவு ஏன், பிளேக் ஸ்னோ என்பவர் இது தொடர்பாக ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். லாக் ஆப் அந்த புத்தகத்தில் (Log Off: How to Stay Connected after Disconnecting ) பிளேக், டிஜிட்டல் விலக்கை மேற்கொள்ள 5 வழிகளை சுட்டிக்காட்டுவதாக சைக்காலஜி டுடே கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.
இதில் ஒரு வழியாக, பிளேக் நான்கு பர்னர் கோட்பாட்டை கற்றுத்தருகிறார். அதாவது நாம் வாழ்க்கையை, குடும்பம், நண்பர்கள், ஆரோக்கியம் மற்றும் பணி என நான்கு பர்னர்களாக பிரித்துக்கொள்ள வேண்டும். இந்த நான்குக்கு தொடர்பில்லாத எந்த ஒரு செயலுக்கும் போனை தொடாமல் இருக்க வேண்டும் என்கிறார் பிளேக்.
மற்றொரு வழியாக, எப்போது போனை கையில் எடுத்தாலும், ஏன் எனும் கேள்வியை கேட்டுக்கொள்ளுங்கள் என்கிறார். போனை கையில் எடுக்காமல் பாக்கெட்டிலேயே வைத்திருப்பது தான் தீரமிகு செயல் என்கிறார் பிளேக். இதன் மூலம் கவனச்சிதறல் மற்றும் தேவையில்லாத பதற்றத்தை தவிர்த்து, நம் முன் இருக்கும் தருணத்தில் மூழ்கலாம் என்கிறார். சரி தானே!
–
டிஜிட்டல் டீடாக்ஸ் பற்றிய கட்டுரை: https://www.psychologytoday.com/intl/blog/click-here-happiness/201801/5-ways-do-digital-detox