ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பல்வேறு பிழை எண்ணங்களும், மிகை தோற்றங்களும் நிலவுகின்றன. செயற்கை நுண்ணறிவின் ஆற்றல் மற்றும் அதனால் சாத்தியமாக கூடியவை பற்றி பேசப்படும் அளவுக்கு, இதன் வரம்புகளும், சிக்கல்களும் பேசப்படுவதில்லை. செயற்கை நுண்ணறிவு சாதகமான பலன்களோடு, அதற்கே உண்டான பாதகங்களையும் கொண்டுள்ளது. முக்கியமான வரம்புகளை கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான சரியான புரிதலை பெறுவது அவசியம். அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் வருமாறு:
- செயற்கை நுண்ணறிவு அலை வீசுவதாக தோன்றினாலும், ஏஐ என்பது புதிய நுட்பம் அல்ல: ஏற்கனவே இருப்பது தான். ஏஐ அதிகாரப்பூர்வ வரலாறு 1956 ல் துவங்குகிறது. ஏஐ அதன் வரலாற்றில், குளிர் காலம், வசந்த காலம் ஆகிய சுழற்சிகளை கடந்து வந்த நிலையில், கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே பல துறைகளில் ஏஐ பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.
- ஏஐ மனித அறிவையும், ஆற்றலையும் மிஞ்சக்கூடியதாக சொல்லப்பட்டாலும், அதன் வரம்புகள் கொண்டது. நாம் கனவு காணும் வகையில் அல்லது அஞ்சும் வகையில் மனித அறிவை மிஞ்சக்கூடிய மேம்பட்ட செய்யறிவான மீயறிவு ஒரு காலத்திலும் சாத்தியம் இல்லை என்பதே ஏஐ வல்லுனர்களின் அடிப்படை கருத்து.
- ஏஐ எனும் போது, சராசரியான புரிதல் மனிதர்களை போல செயல்படும் இயந்திர அறிவு என்பதாக இருந்தாலும், ஏஐ எனும் சொல்லுக்கான விளக்கம் சிக்கலானது. உண்மையில் இந்த சொல், ஏஐ நுட்பத்தின் பல்வேறு உட்கூறுகளை உள்ளடக்கியது. ஏஐ நுட்பத்தில் பல போக்குகள் உள்ளன.
- ஏஐ சொல் போலவே அதற்கான விளக்கமும் வேறுபட்டது. ஒவ்வொரு விளக்கமும் விவாதிக்க கூடியதாகவே இருக்கிறது. ஏஐ எனும் சொல்லையே விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர். ஏஐ தொடர்ந்து உருமாறிக்கொண்டே வருகிறது.
- ஒரு காலத்தில் ஏஐ ஆக கருதப்பட்ட நுட்பம் காலப்போக்கில் சாதாரண நுட்பமாக கருதப்படுவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
- ஏஐ என இப்போது குறிப்பிடப்படும் நுட்பங்கள் பெரும்பாலும் இயந்திர கற்றல் சார்ந்தவை. இயந்திர கற்றல் எனும் போது, கம்ப்யூட்டர்களின் கல்வியறிவு தொடர்பாக ஏற்படக்கூடிய மயக்கத்தை மீறி, இது புள்ளியியலின் மிகைப்படுத்தப்பட்ட வடிவம் என்றே கூறுகின்றனர். புள்ளியியலும் பெருந்தரவுகளும், கம்ப்யூட்டர் அதிதிறனும் இணையும் போது இயந்திர கற்றல் சாத்தியமாகிறது. ஆனால், இயந்திரங்கள், தரவுகளின் பொது தன்மையை கண்டறிகின்றனவேத்தவிர எதையும் கற்பதில்லை.
- ஏஐ நுட்பத்தின் அண்மை வடிவான ஆக்கத்திறன் ஏஐ என்பது இயந்திர கற்றல் மற்றும் அதன் அங்கமான ஆழ்கற்றல் சார்ந்தது. கம்ப்யூட்டரின் படைப்பாற்றல் பற்றி வியக்க வைக்கும் இந்த நுட்பங்கள் உண்மையில், அவற்றின் கணிப்புத்திறன் அன்றி வேறில்லை.
- ஜெனரேட்டிவ் ஏஐ என சொல்லப்படும் ஆக்கத்திறன் ஏஐ மனிதர்கள் போலவே உருவாக்கும் திறன் கொண்டிருப்பதாக நம்ம வைக்கப்பட்டாலும், உண்மையில் அவற்றால் மனித தரவுகள் இல்லாமல் செயல்பட முடியாது. மூல ஆக்கத்தை உருவாக்க முடியாது.
- சாட்ஜிபிடி உள்ளிட்ட சாட்பாட்கள் புதிததல்ல. சாட்பாட்கள் பல வடிவங்கள் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளன. மனித ஆக்கங்களை திரட்டி, ஆழ் கற்றல் நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட பெரும் மொழி மாதிரிகள் நுட்பத்தால் சாட்ஜிபிடி எல்லாவற்றுக்கும் பதில் அளிப்பது போலத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அது பெருந்தரவு மூலம் செயல்படும் வாய்ப்பியல் கிளிப்பிள்ளை தான். அதற்கென சுய அறிவும் இல்லை, புரிதலும் கிடையாது.
–
செய்யறிவு தோற்றமும் வளர்ச்சியும் அறிய: ’ஏஐ ஒரு எளிய அறிமுகம்’ புத்தகம்.