பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமுக வலைப்பின்னல் தளங்களில் இணையதள முகவரிகளை எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும் இணைய முகவரி சுருக்க தளங்கள் எப்படி எல்லாம் விரிவடைந்திருக்கின்றன என்று பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அந்த அளவுக்கு விதவிதமான முகவரி சுருக்க தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் முகவரி சுருக்க சேவையை கூடுதல் பயனுள்ளதாக ஆக்குகின்றன.
இணைய முகவரி சுருக்க சேவையை பயன்படுத்தி வருபவர்கள் ஜக்ஸ்டாபோ.சே தளத்தை பார்த்தாலே அட நல்ல சேவையாக இருக்கிறதே என்று வியந்து போய் விடுவார்கள்.காரணம் இந்த தளம் ஒரே இணைப்பில் இரண்டு இணையதள முகவரிகளை ஒன்றாக சுருக்கி அனுப்ப உதவுகிறது.
இந்த தளத்தை பார்த்து வியப்பவர்கள் ஹைபர்யூஅரெல் தளத்தை பார்த்தால் சொக்கிப்போய் விடுவார்கள்.காரணம் இந்த தளம் ஒரே இணைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட இணையதள முகவரிகளை சுருக்கி தருகிறது.
ஜக்ஸ்டாபோ.சே தளத்தில் இரண்டு முகவரிகளை தான் ஒன்றாக சுருக்க முடியும்.இந்த தளத்திலோ ஒரே இணைப்பில் ஐந்து இணைய முகவரிகளை ஒன்றாக சுருக்கி விட முடியும்.அதாவது வரிசையாக ஐந்து இணையதள முகவரிகளை சமர்பித்து அவற்றை ஒரே இணைப்பாக சுருக்கி கொள்ளலாம்.
இத்தனைக்கும் இந்த தளம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிமையாக இருக்கிறது.முகப்பு பக்கத்தில் இணைய முகவரிகளை சம்பர்பிப்பதற்கான கட்டங்களும் அவற்றின் சுருக்கத்தை பெறுவதற்கான கட்டமும் மட்டுமே இருக்கின்றன.மற்றபடி வேறு எந்த வழிகாட்டுதலோ விளக்கமோ கிடையாது.
தோற்றத்தில் எளிமையாக இருந்தாலும் பயன்மிக்க சேவை .
பல நேரங்களில் பத்து பயனுள்ள இணையதளங்களின் பட்டியல் ,சுவையாம ஐந்து தளங்கள் ,என்றெல்லாம் கட்டுரைகளை பார்க்கின்றோம் அல்லவா? இந்த கட்டுரைகளில் வரிசையாக இணையதளங்கள் பட்டியலிடப்பட்டு அவற்றுக்கான அறிமுக குறிப்புகளும் இருக்கும்.
ஹைபர்யூஆரெல் சேவை மூலம் பயனுள்ள ஐந்து தளங்கள் அல்லது சிருக்க வைக்கும் ஐந்து அற்புத வீடியோக்கள் என்னும் ஒற்றை வரியில் அழகாக ஐந்து தளங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://hiperurl.com/
—————
ஹைபர்யூஆரெல் போலவே ஒன்றுக்கும் மேற்பட்ட இணையதள முகவரிகளை ஒரே இணைப்பில் சுருக்கி பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை கிரஞ்ச்.அஸ் தளமும் வழங்குகிறது.
ஆனால் இரண்டுக்கும் முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன.முதலில் தோற்றம்.ஹைபர்யூஆரெல் எளிமையின் வடிவமாக இருக்கிறது.ஆனால் கிரஞ்ச்.அஸ் தோற்றத்தில் கொஞ்சம் செறிவாக அதன் சேவையை விளக்கும் படிப்படியான விளக்க குறிப்புகளோடு முழு வீச்சிலான இணையதளம் போல காட்சி அளிக்கிறது.
கிரஞ்ச்.அஸ் சேவையின் தன்மையையும் அதனை பயன்படுத்தும் விதமும் புகைப்பட நகர்வாக (ஸ்லைடு ஷோ)விளக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சேவயும் கொஞ்சம் செறிவானதே.முதலில் இதில் எத்தனை இணையதள முகவரிகளை வேண்டுமானால் ஒரே இணைப்பாக சுருக்கி கொள்ளலாம்.அதாவது பத்து தளங்களையும் சுருக்கலாம்,நூறு தளங்களையும் சுருக்கலாம்.அது மட்டும் அல்ல இணைப்புகளில் உள்ள இணையதளங்கள் வரிசையாக ஸ்லைடு ஷோவாக தோன்றும்.
ஆனால் இந்த சேவையை பயன்படுத்த உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும்.ஆனால் பதிவு செய்வது என்றால் ஏதாவது பயனாளர் பெயரை தேர்வு செய்து கொண்டால் போதுமானது.அந்த இணைப்பை உங்கள் நண்பர்களோடு மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்பினால் அதற்கான பாஸ்வேர்டையும் உருவாக்கி கொள்ளல்லாம்.இல்லை என்றால் எல்லோருக்கும் பொதுவானபாஸ்வேர்டு தான்.
————–
ஆக இந்த இரண்டு தளங்களையும் பார்க்கும் போது ஒரு கொத்தாக இணையதளங்களை ஒரே இணைப்பாக சுருக்கி கொள்ளும் வசதியை தருகிறது என வர்ணிக்க தோன்றலாம்.
ஆனால் உண்மையில் இதே போல ஒரு கொத்தாக இணையதளங்களை சுருக்கி கொள்ள உதவும் சேவைகள் ஒரு கொத்தாகவே இருக்கின்றன.——————-
இணைய முகவரி சேவைகள் அதை மட்டும் தானா செய்ய வேண்டும்.கொஞ்சம் சிரிக்கவும் வைக்கலாம்.
‘ப.ட்’ அதை தான் செய்ய முயற்சிக்கிறது.வழக்கமான இணைய முகவரி சேவையை போல முகவரியை சுருக்கி தரும் இது அந்த இணைப்புகளை நகைசுவையான ஒலி கொண்டதாகவும் மாற்றித்தருகிறது.இதனால் சும்மா ஜாலியாக பகிந்து கொள்ளும் இணைப்புகளுக்கு இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் யூடியூப் வீடியோக்களுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இந்த சேவை இப்போது செயல்பாட்டில் உள்ளதா என்று தெரியவில்லை,ஆனால் இதன் அடிப்படை கருத்தாக்கம் மிகவும் சுவையாது.
இந்த தளம் போலவே ஷேடியூஆரெல் தளம் சுருக்கப்படும் இணைய முகவரியை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் மாற்றித்தருகிறது.அதாவது முதல் பார்வைக்கும் லேசான வியப்பையும் கூடவே திகிலையும் தரக்கூடிய வகையில் சிலவார்த்தைகளை சேர்த்து தருகிறது.இதனை பார்க்கும் போது கொஞ்சம் குழப்பமும் பயமும் உண்டாகுமே தவிர அதை கிளிக் செய்தால் சுருக்கப்பட்ட இணையதளத்தை தடையின்றி பார்க்கலாம்.
முகவரிகளை சுருக்குவதோடு கொஞ்சம் ஆச்சர்யத்தையும் அச்சத்தையும் அளியுங்கள் என்று அழைக்கிறது இந்த தளம்.
http://bu.tt/
http://www.shadyurl.com/
————————
ஒன்றுக்கும் மேற்ப்பட்ட இணையதளங்களை ஒரு கொத்தாக ஒரே இணைப்பாக சுருக்கி கொள்ள விரும்பினால் லிங்க்பஞ்ச் அதனை அழகாக செய்கிறது.
இதில் உள்ள கட்டத்தில் வரிசையாக இணைய முகவரிகளை சமர்பித்து கிளிக் செய்தால் அவற்றை ஒரே இணைப்பாக கொடுக்கிறது.மிகவும் எளிமையான சேவை.
ஆனால் இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இணைப்புகளை கிள்க் செய்யும் போது அதில் உள்ள தளங்கள் நேரடியாக தோன்றுவதில்லை மாறாக அவற்றின் இணைய முகவரிகள் மட்டுமே வரிசையாக தோன்றும்.ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.
இது ஒரு விதத்தில் பாதுகாப்பானது.இணையதளத்தை திறந்து பார்ப்பதற்கு முன் அவை நல்ல தளங்கள் தானா இல்லை,விளம்பட நோக்கில் பகிரப்பட்டவையா அல்லது வைரஸ் கொண்டவையா என தெரிந்து கொள்ளலாம்.
http://www.linkbun.ch/
—————–
இணைய முகவரிகளை சுருக்கினால் மட்டும் போதாது,அவற்றை பாதுகப்பானதாகவும் பகிர வேண்டும் என்று நினைத்தால் டிரிக்.லே அதை சாத்தியமாக்குகிறது.
வெரூம் இன்னொரு இணைய முகவரி சேவை இல்லை,இணைப்புகளோடு தற்காப்பு கவசத்தையும் சேர்த்து தருவதாக சொல்லும் இந்த தளம் ,மூன்று சுவாரஸ்யமான வழிகளில் இதனை நிறைவேற்றி தருகிறது.
அதாவது இணைய முகவரிக்கென ஒரு பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளலாம்.அந்த பாஸ்வேர்டை தெரிந்தவர்கள் மட்டுமே அந்த இணைப்பை பார்க்க முடியும்.பாஸ்வேர்டுக்கு பதிலாக கேள்வி பதில் அல்லது விடுகதையையும் கூட சேர்த்து கொள்ளலாம்.இனைப்பை பகிர்ந்து கொண்ட பின் இந்த ரகசியத்தையும் பகிர்ந்து கொண்டால் மட்டுமே அதனை பெறுபவர்கள் இணைப்பின் உள்ளே போக முடியும்.
நண்பர்களுக்கானது என நினைக்கும் தகவல்களை பாதுகாப்பாக பகிர விரும்புகிறவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.அலுவலக வேலை தொடர்பாக ரகசியமான தகவலை பகிரவும் பயன்படுத்தலாம்.
இணைய முகவரி சுருக்க சேவையில் தான் எத்தனை விதங்கள் இருக்கின்றன.
http://www.trick.ly/riddle/me/
————–
சேப்.லி சேவை தற்போது புழக்கத்தில் இல்லை,ஆனால் இதன் அடிப்படை கருத்தாக்கம் வலுவானது என்பதால் இதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இணைய முகவரி சுருக்கங்களுக்கு பின்னே உள்ள இணையதளங்கள் பாதுகாப்பானது தானா என்று சரி பார்த்து சொல்வதற்கென்றே சில தளங்கள் இருக்கின்றன.சுருக்கப்பட்ட முகவரிக்கு பின்னே வைரஸ் பாய்ந்த தளம் அல்லது விஷமத்தனமான தளம் இருக்கிறதா என கண்டறிய இவை உதவுகின்றன.
ஆனால் சேப்.லி தளமோ ஒரு இணைய முகவரியை சுருக்கும் போதே அது பாதுகாப்பானது தானா என சோதித்து பார்த்து அதன் பின்னர் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்கியது.
ஆக மிகுந்த நம்பிக்கையோடு முகவரிகளை பகிர்ந்து கொள்ளலாம்.இவற்றை பெறுபவர்களும் எந்த வித தயக்கமும் இல்லாமல் அவற்றை திறந்து பார்க்கலாம்.
இத்தகைய முன்னெச்சரிக்கையான சேவை மூடப்பட்டது ஏமாற்றம் தான்