Tag Archives: countries

விசா பெற வழிகாட்டும் இணையதளம்

visaசுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள உதவுகிறது விசாடிபி இணையதளம்.
இந்த தளத்தை பயன்படுத்துவது எளிதானது. முதலில் எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பயணம் செய்வதற்கான காரணத்தை தேர்வு செய்துவிட்டு, செல்வதற்கான நாட்டை தேர்வு செய்தால், அந்த நாட்டிற்கான விசா நடைமுறை தொடர்பான தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஒன்று இந்த தகவல்கள் வழிகாட்டும் நோக்கத்திலானவை மட்டுமே. இவற்றை அடிப்படையாக கொண்டு, அதிகாரப்பூர்வ வழியில் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த தளம் இணையத்தில் உள்ள விசா தகவல்களை திரட்டித்தருகிறது. இந்த சேவையை வழங்கும் வேறு சில இணையதளங்கள் இருந்தாலும் இதன் இடைமுகம் எளிமையாக இருப்பது சிறப்பு.
இணைய முகவரி; http://visadb.io/index.html

செயலி புதிது : புதிய நண்பர்களை பெற உதவும் சேவை
புதிய நண்பர்களை அடையாளம் காண விரும்புகிறவர்களுக்கும், ஆர்வத்தின் அடிப்பையில் நட்பு வலை விரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் கைகொடுக்கும் வகையில் டூகதர் செயலி அமைந்துள்ளது.
சமூக வலைப்பின்னல் வகையை சேர்ந்த இந்த செயலி மூலம், பயனாளிகள் தங்கள் அருகாமையில் உள்ள ஒத்த கருத்துள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். இதற்கேற்ப தங்களுக்கு விருப்பமான செயல்களை பட்டியலிட்டு அதில் ஆர்வல் உள்ளவர்களை தேடி தொடர்பு கொள்ளலாம். இதே போல மற்றவர்கள் உருவாக்கியுள்ள விருப்ப பட்டியலிலும் இணைத்துக்கொள்ளலாம்.
புதிய நிகழ்ச்சிகளை கண்டறியவும் இந்த செயலியை பயன்படுத்தலாம். வார விடுமுறை நாட்களில் நிகழ்வுகளை திட்டமிடவும் இந்த செயலி உதவலாம். புதிய குழுக்களில் இணைந்து கொள்ளவும் இந்த செயலி வழிகாட்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் செயல்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு: https://www.letsdogether.com/

கண்டுபிடிப்பாளர்களின் பாதையில்…

பயண ஏற்பாட்டு இணையதளமான டிராவல்பேக், ’கண்டுபிடிப்பின் பாதையில்’ எனும் சுவாரஸ்யமான இணைய பக்கத்தை உருவாக்கி வரலாற்றில் பின்னோக்கி பயணிக்க வைத்துள்ளது.

,எளிமையாக வடிவமைக்கப்பட்ட இந்த பக்கத்தில் வரலாற்றின் ஆகச்சிறந்த கண்டிபிடிப்பாளராக கருதப்படும் கொல்ம்பசில் துவங்கி, வரலாற்று பயணியான மார்கோ போலோ வரை 13 முக்கிய கண்டுபிடிப்பாளர்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கண்டுபிடிப்பாளர்கள் பயணத்தை மேற்கொண்ட போது அதற்கு தேவைப்பட்ட காலமும், தற்போது நவீன போக்குவரத்து வசதிகள் உள்ள சூழலில் அந்த பயணத்தை நிறைவேற்றக்கூடிய கால அவகாசமும் ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பீட்டை கூகுள் வரைபடம் மூலமும் செய்து பார்க்கலாம். கண்டுபிடிப்பாளர்கள் மேற்கொண்ட சாகசப்பயணத்தின் வழித்தடத்தை கூகுள் வரைபடம் மீது பார்க்கலாம்.

அட்லாண்டிக் பெருங்கடலை விமானம் மூலம் கடந்த வீராங்கனை அமிலி எர்ஹார்ட், கேப்டன் குக் உள்ளிட்டோரது சாகப்பயணங்களையும் இப்படி வரைபடத்தில் ஒப்பிட்டு பார்க்கலாம்.

இணைய முகவரி: https://www.travelbag.co.uk/a-race-of-discovery/#

 

செயலி புதிது: இமோஜிகள் உங்கள் கைகளில்…

ஸ்மார்ட்போனில் வாழ்த்து செய்தி அனுப்புவதாக இருந்தாலும் சரி, சாதாரண வாட்ஸ் அப் செய்தி அனுப்புவதாக இருந்தாலும் சரி, இமோஜி எனப்படும் சித்திர எழுத்துக்களை நாடுவதே பலரது வழக்கமாக இருக்கிறது. தேவையான் இமோஜிகளை தேர்வு செய்யும் வசதி போன் விசைப்பலக்கையிலேயே இருக்கிறது என்றாலும், இதற்கென பிரத்யேக செயலிகளும் இல்லாமல் இல்லை. அந்த வகையில் டெக்ஸ்ட் டு இமோஜி செயலி, வார்த்தைகளை இமோஜிகளாக மாற்றித்தருகிறது.

இதில் உள்ள தேடல் கட்டத்தில் ஆங்கில வார்த்தைகளை டைப் செய்து அதற்கு பொருத்தமான இமோஜிகளை கண்டுபிடிக்கலாம். இது தவிர ஆயிரக்கணக்கான இமோஜிகளில் இருந்தும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இமோஜி வாசகங்களை விருப்பம் போல மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது. இவற்றை சமூக ஊடகங்களில் பகிரும் வசதியும் இருக்கிறது. இமோஜிகளை நகலெடுக்கும் வசதியும் இருக்கிறது. இமோஜி பிரியர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவமாக இந்த செயலி அமைந்துள்ளது.

 

மேலும் தகவல்களுக்கு: http://bit.ly/2tBl6vn

விசா பெற வழிகாட்டும் இணையதளம்

VisaDB-796x398சுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள உதவுகிறது விசாடிபி இணையதளம்.

இந்த தளத்தை பயன்படுத்துவது எளிதானது. முதலில் எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பயணம் செய்வதற்கான காரணத்தை தேர்வு செய்துவிட்டு, செல்வதற்கான நாட்டை தேர்வு செய்தால், அந்த நாட்டிற்கான விசா நடைமுறை தொடர்பான தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஒன்று இந்த தகவல்கள் வழிகாட்டும் நோக்கத்திலானவை மட்டுமே. இவற்றை அடிப்படையாக கொண்டு, அதிகாரப்பூர்வ வழியில் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த தளம் இணையத்தில் உள்ள விசா தகவல்களை திரட்டித்தருகிறது. இந்த சேவையை வழங்கும் வேறு சில இணையதளங்கள் இருந்தாலும் இதன் இடைமுகம் எளிமையாக இருப்பது சிறப்பு.

இணைய முகவரி; http://visadb.io/index.html

 

 

செயலி புதிது : புதிய நண்பர்களை பெற உதவும் சேவை

புதிய நண்பர்களை அடையாளம் காண விரும்புகிறவர்களுக்கும், ஆர்வத்தின் அடிப்பையில் நட்பு வலை விரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் கைகொடுக்கும் வகையில் டூகதர் செயலி அமைந்துள்ளது.

சமூக வலைப்பின்னல் வகையை சேர்ந்த இந்த செயலி மூலம், பயனாளிகள் தங்கள் அருகாமையில் உள்ள ஒத்த கருத்துள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். இதற்கேற்ப தங்களுக்கு விருப்பமான செயல்களை பட்டியலிட்டு அதில் ஆர்வல் உள்ளவர்களை தேடி தொடர்பு கொள்ளலாம். இதே போல மற்றவர்கள் உருவாக்கியுள்ள விருப்ப பட்டியலிலும் இணைத்துக்கொள்ளலாம்.

புதிய நிகழ்ச்சிகளை கண்டறியவும் இந்த செயலியை பயன்படுத்தலாம். வார விடுமுறை நாட்களில் நிகழ்வுகளை திட்டமிடவும் இந்த செயலி உதவலாம். புதிய குழுக்களில் இணைந்து கொள்ளவும் இந்த செயலி வழிகாட்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் செயல்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு: https://www.letsdogether.com/

ஐபோனே உன் விலை என்ன?

yஐபோன் விலை உயர்ந்தது என்பது அதை வாங்க விரும்புகிறவர்களுக்கும் தெரியும். அந்த காரணத்திற்காகவே அதை வாங்க நினைக்காதவர்களுக்கும் தெரியும். ஆகவே, இந்த கட்டுரையின் நோக்கம் ஐபோனையோ அல்லது அதன் விலையை விமர்சிப்பது அல்ல. ஆனால் ஐபோனின் உண்மையான விலை என்னத்தெரியுமா? எனும் கேள்வி தொடர்பாக சிந்திக்க வைப்பது தான் இதன் உண்மையான நோக்கம்.

இந்த கேள்வியும் கூட நான் எழுப்பவில்லை. பிலிப் ஸ்கிமிட் எனும் மென்பொருள் வல்லுனர் எழுப்பியிருக்கிறார். இந்த கேள்வியை அவர் எழுப்பியிருக்கும் விதம் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் அவரது கேள்வி சிந்திக்கவும் வைக்கிறது.

ஐபோனின் ஒவ்வொரு புதிய மாதிரி அறிமுகமாகும் போதும் அதைச்சுற்றி எழும் எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஆப்பிள் சாதனங்களுக்கே உரியது. புதிய ஐபோன் விற்பனைக்கு வரும் முதல் நாளில் ஆப்பிள் அபிமானிகள் அதை வாங்க வரிசைகட்டி காத்திருப்பதும் வழக்கமானது தான். தீவிர ஐபோன் அபிமானிகள் புதிய போனை வாங்குவதற்காகவே ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பறந்து சென்று வரிசையில் நின்ற விநோத கதைகள் எல்லாம் இருக்கின்றன.

ஐபோன் மீதான இந்த அபிமானத்திற்கான காரணங்களை தனியே ஆராயலாம். இப்போதைக்கு அதன் விலை அம்சத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். கட்டுரை துவக்கத்திலேயே குறிப்பிட்டபடி அது அதிகமானது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை மீறி தான் வாங்க விரும்புகின்றனர். நம் நாட்டைப்பொருத்தவரை ஐபோன் என்பது அந்தஸ்த்தின் அடையாளமாக கருதப்படுவதும் இதற்கான காரணமாக அமைகிறது.

எல்லாம் சரி, ஐபோனின் உண்மையான விலை என்ன தெரியுமா? இந்த கேள்வியை தான், மென்பொருள் வல்லுனர் பிலிப் தனது இணைய பக்கத்தின் மூலம் எழுப்பி அதற்கான பதிலை அவரவரே தெரிந்து கொள்ளவும் வைத்திருக்கிறார். கொஞ்சம் தகவல், கொஞ்சம் புள்ளிவிவரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பின்னணியில் கொஞ்சம் புரோகிராமிங் கலந்து இதை கச்சிதமாக செய்திருக்கிறார்.

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஐபோன் எக்ஸ் மாதிரியின் அமெரிக்க விலை 999 டாலர் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதை ஒவ்வொருவரும் தங்கள் நாட்டு பணத்தின் மதிப்பிற்கு மாற்றிப்பார்த்தால் அதன் விலையை உள்ளூர் மதிப்பில் தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் அது தங்களுக்கு கட்டுப்படியாகுமா? அல்லது எட்டாக்கனியா என்றும் முடிவு செய்யலாம். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால், பிலிப் இந்த எண்ணிக்கையை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வைத்திருக்கிறார்.

அவர் உருவாக்கியுள்ள இணைய பக்கத்தில் நுழைந்ததுமே, ஐபோனின் உண்மையான விலை எனும் வாசகம் கொட்டை எழுத்தில் கண்ணில் படுகிறது. அதன் கீழ், பயனாளிகள் தாங்கள் வசிக்கும் நாட்டின் பெயரை டைப் செய்தால், அவர்கள் ஐபோனை வாங்க எத்தனை நாட்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும் எனும் தகவல் காண்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டின் குறைந்த பட்ச ஊதியத்தின் அடிப்படையில் இந்த தகவல் முன்வைக்கப்படுகிறது. அதாவது, ஐபோன் விலையை டாலர் அல்லது வேறு பணத்தில் எடை போடாமல், அந்த அந்த நாட்டின் குறைந்த பட்ச ஊதியத்தின் அடிப்படையில், அதை வாங்க எத்தனை நாட்கள் உழைக்க வேண்டியிருக்கும் எனும் தகவல் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த கணக்கு படி பார்த்தால், இந்தியர்கள் புதிய ஐபோனை வாங்க வேண்டும் எனில் 416 நாட்கள் உழைக்க வேண்டியிருக்கும். அதாவது 416 நாட்கள் உழைத்தால் கிடைக்கும் தொகையை அதற்கான விலையாக கொடுக்க வேண்டும். இந்தியர்களின் குறைந்த பட்ச ஊதியம் படி பார்த்தால், புதிய ஐபோனை வாங்க ஒருவர் ஒரு ஆண்டுக்கு மேல் உழைக்க வேண்டியிருக்கும். இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் ஐபோனுக்கான விலை கணக்கிட்டு சொல்லப்படுகிறது. இது தான் ஐபோனின் உண்மையான விலை என இந்த இணைய பக்கம் மூலம் புரிய வைக்க பிலிப் முயற்சிக்கிறார்.

இது கொஞ்சம் புதுமையான முயற்சி தான் இல்லையா? ஆனால், பிலிப்பின் நோக்கம் ஐபோனின் உண்மையான விலையை உழைக்கும் மணித்துளிகளாக காட்சிப்படுத்தி பார்க்க வைப்பது மட்டும் அல்ல, அப்படியே உலகில் நிலவும் ஏற்றத்தாழுவு தொடர்பாகவும் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.

ஆம், இந்த இணைய பக்கத்தில் ஒவ்வொருவரும் தங்கள் நாட்டிற்கான ஐபோன் விலையை தெரிந்து கொள்வதோடு, உலகின் மற்ற நாடுகளில் அதன் விலை எப்படி இருக்கிறது என்றும் பார்க்கலாம். உதாரணத்த்திற்கு நெதர்லாந்து நாட்டில் 12 நாட்கள் வேலை செய்தால் ஐபோன் வாங்கிவிடலாம். ஸ்பெயினில் 23 நாட்கள் வேலை செய்தால் வாங்கிவிடலாம். ஆஸ்திரேலியாவில் 9 நாட்கள் வேலை செய்தால் வாங்கிவிடலாம். ஆனால் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 12487 நாட்கள் வேலை செய்தால் தான் ஐபோன் வாங்க முடியும். அதாவது கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் வேலை செய்தாக வேண்டும். இந்த ஏற்றத்தாழ்வு மலைக்க வைக்கிறது அல்லவா?

உண்மையில், உலகில் நிகழும் இந்த ஏற்றத்தாழ்வு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தனது நோக்கம் என்கிறார் பிலிப். ஆக, ஐபோன் விலையை ஒரு புள்ளியாக வைத்துக்கொண்டு, உலகில் நிகழும் ஏற்றத்தாழ்வு பற்றிய சிந்தனையை அவர் உண்டாக்கி விடுகிறார். இருக்கும் புள்ளிவிவரங்களை கொண்டு இதை அவர் எளிமையான இணையதளம் செய்திருக்கும் விதமும் பாராட்டுக்குறியது.

நல்ல இணையதளம் என்பது இப்படி தான் இருக்க வேண்டும் என இந்த தளம் சொல்லவும் வைக்கிறது.

ஐபோன் விலை அறியும் இணையதளம்: http://felipeschmitt.com/real-cost-of-an-iphone/

 

 

நன்றி; யுவர்ஸ்டோரி தமிழ் பதிப்பில் எழுதியது.

 

 

நாடுகளின் வரைபடங்களை ஒப்பிட்டு பார்க்க உதவும் இணையதளம்

red-inவரைபட சண்டை போட விருப்பமா? என்று கேட்பது போல் இருந்தாலும் மேப்பைட் இணையதளம் உண்மையில் செய்வது நாடுகளின் வரைபடங்களை ஒப்பட்டு பார்ப்பதை ! அதாவது எந்த இரண்டு நாடுகளையும் அவற்றின் வரைபடங்கள் வாயிலாக இந்த தளத்தில் ஒப்பிட்டு பார்க்கலாம்.

இதற்காக இரண்டு கட்டங்கள் இருக்கின்றன. இரண்டு கட்டங்களில்ம் வரிசையாக நாடுகளின் பட்டியல் இருக்கின்றன. நீங்கள் ஒப்பிட்டு பார்க்க விரும்பும் நாடுகளை இவற்றில் தேர்வு செய்து கொண்டு ஒப்பிடுக எனும் கட்டளையை கிளிக் செய்தால் அந்த இரண்டு நாடுகளின் ஒப்பீட்டு தோற்றம் தோன்றும். இந்த தோற்றத்தில் இரு நாடுகளின் வரைபடங்களும் ஒன்றன் மீது ஒன்று பொறுத்தப்பட்டிருக்கும். இந்த படத்தை பார்க்கும் போதே ஒரு நாடு மற்றொரு நாட்டை விட எந்த அளவு பெரியது அல்லது சிறியது என தெரிந்து கொள்ளலாம்.

எந்த அளவு பெரியது என்பதை எண்ணிக்கையாகவும் மேலே கொடுக்கப்படுகிறது. உதார்ணத்திற்கு இந்தியாவையும் லத்வியாவயும் ஒப்பிட்டால் , லத்வியாவை விட இந்தியா 50,92 மடங்கு பெரியது என்ற தகவல் தரப்படுகிறது. வரைபடத்தின் பார்த்தால் லத்வியா இந்தியாவுக்கு ஒரு குட்டி மாநிலம் போல அடங்கி விடுகிறது. இரு நாடுக்ளின் பரப்பளவும் கொடுக்கப்பட்டுள்ளது. லத்வியா (64559 km² . இந்தியா
3287263 km² . லத்வியா பற்றி மேலும் தகவல் தேவை என்றால் அந்நாட்டின் பெயர் மீது கிளிக் செய்தால் விக்கிபீடியா பக்கத்துக்கு அழைத்து செல்லப்படுகிறது. இந்தியா பற்றியும் இவ்விதமே அறியலாம்.

இப்படியாக பல நாடுகளை ஒப்பிட்டு பார்க்கலாம். இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு போல இருக்கும். ஆனா. வெறும் விளையாட்டு அல்ல. பல நேரங்களில் இந்த ஒப்பீடு புரிதலுக்கு உதவும்.

உதாரனத்துக்கு ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் இந்தியாவை விட பெயர் தெரியாத சிறிய நாடெல்லாம் தங்கம் வாங்குகிறது என நாம் புலம்புவதுண்டு அல்லவா? இது போன்ற நேரங்களில் அந்த நாடுகளில் எவ்வளவு சிறியவை என்று தெரிந்து கொள்ளலாம். ஒலிம்பிக் பற்றி கட்டுரை எழுதும் போது இந்த விவரம் மற்றும் வரைபட உதாரனம் உதவியாக இருக்கும்.

இது போலவே எந்த ஒப்பீட்டுக்கும் இந்த வரைட சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இரு நாடுகளின் வளர்ச்சி , குற்றங்களின் பெருக்கம் போன்ற விஷய்ங்கள் குறித்து பேசும் போது இவ்வாறு அவற்றைன் பரப்பை ஒப்ப்ட்டி பார்ப்பது புரிதலை மேம்படுத்தும். பொதுவாக இது போன்ற ஒப்பீட்டை உருவாக்க புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு மெனக்கெட வேண்டும். ஆனால் இந்த தளம் அதை சுலமாக்கி தருகிறது. வலைப்பதிவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி : http://mapfight.appspot.com/

 

—————–

நேஷன் மாஸ்டர்.website

இந்த தளம் போலவே இரு நாடுகளை பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்க உதவு நேஷன் மாஸ்டர் எனும் இணையதளம் இருப்பது தெரியுமா? அந்த தளம் பற்றியும் அது உருவான விதம் பற்றியும் சைபர்சிம்மன் கையேடு-1 தொகுப்பு நூலில் விரிவாக எழுதியுள்ளேன் . இணையத்தின் பழைய தளம் இது. ஆனால் பயனுள்ளது. இது போன்ற ஒவ்வொரு துறையிலும் பயனுள்ள இணையதளங்கள் பற்றிய விரிவான அறிமுகத்தை சைபர்சிம்மன் கையேடு கொண்டுள்ளது. படித்து பார்த்து கருத்து சொல்லுங்கள்.

அன்புடன் சிம்மன்,

———

புத்தகம் கிடைக்கும் இடம்;

 

விவேக் எண்டர்பிரைசஸ் .( மதி நிலையம்)

 

2/3, 4வது தெரு

 

கோபாலபுரம்

சென்னை. -86

போன்; 044-28111506

 

விசா பெற வழிகாட்டும் இணையதளம்.

visa

visaவெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொறுத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது. குறிப்பிட்ட சில நாடுகள் சில நாடுகளுக்கு மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.

இந்த தகவல்களை எல்லாம் இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் ( http://www.visamapper.com/) இணையதளம் அமைந்துள்ளது. எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமால் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவல்களை இந்த தளம் தருகிறது. அதுவும் எப்படி, அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைப்படத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது. இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இண்ட வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளீர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞசள் வண்ணம் என்றால் அன்லைனில் விண்ணபிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.

ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிறகான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம் , நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது  இந்த தளத்தில் நுழைந்ததுமே ,பயனாளி எந்த நாட்டின் குடிமகன் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது. உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது ,இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?

அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, ’நான் இந்த நாட்டு குடிமகன்’ என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த