Tag Archives: googe

கூகுள் ஸ்டிரீட் வியூ சர்ச்சை ஏன்? ஒரு அறிமுகம்

Googles-Street-View
கூகுள் ஸ்டிரீட் வீயூ என்றால் என்ன?

முன்னணி தேடியந்திரமான கூகுள் நிறுவனத்தின் துணை சேவைகளான கூகுள் வரைபடம் மற்றும் கூகுள் பூமி ஆகியவற்றில் உள்ள ஒரு தொழில்நுட்ப வசதி இது. கூகுள் ஸ்டீரீட் வியூ மூலம் நிலப்பரப்பு காட்சிகளை நம்மைச்சுற்றிலும் அனைத்து கோணத்திலும் பார்க்க உதவுகிறது. பனோரெமிக் வியூ என அழைக்கப்படுகிறது. உலகின் நகரங்களையும், நகரத்து தெருக்களையும், நினைவுச்சின்னங்களையும் இந்த தோற்றத்தில் பார்க்கலாம்.

எப்போது துவங்கியது?

கூகுள் ஸ்டிரீட் வியூ சேவை 2007 ல் அறிமுகமானது. கூகுள் நிறுவனர் லாரி பேஜ் படித்த ஸ்டான்போர்டு பல்கலை வளாகத்தில் முதலில் அறிமுகமானது. 2008 ல் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தனிநபர்களின் பாதுகாப்பு கருதி முகங்கள் துல்லியமாக தெரியாமல் மறக்கப்பட்டன.

எப்படி செயல்படுகிறது?

ஸ்டிரீட் வியூ இம்மர்சிவ் மீடியா எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது எப்படி செயல்படுகிறது என்றால், குறிப்பிட்ட இருப்பிடம் அதன் சகல திசைகளிலும் எண்ணற்ற கோணங்களில் புகைப்படும் எடுக்கப்படுகின்றன. பின்னர் அந்த புகைப்படங்கள் அனைத்தும் மென்பொருள் உதவியுடன் ஒன்றாக கோர்த்து தைக்கப்பட்டு முழு தோற்றமாக உருவாக்கப்படுகிறது. வழக்கமான புகைப்படத்தின் தட்டையான தன்மையுடன் அல்லாமல், ஒரு இடத்தை சுற்றிலும் பார்க்கும் அனுபவத்தை இது அளிக்கும். புகைப்படத்தை அங்கும் இங்கும் , மேலும் கீழும் இழுத்து பார்க்கலாம்.

என்ன சிறப்பு?

இருந்த இடத்தில் இருந்து புதிதாக இரு இடத்தை சுற்றிப்பார்த்தது போன்ற உணர்வை இந்த சேவை அளிக்கும். அந்த இடத்தில் நாம் இருப்பது போன்ற உணர்வை பெறலாம்.

ஸ்டிரீட்வியூ கார்!

இந்த வசதியை அளிக்க கூகுள் பிரத்யேகமான காரை பயன்படுத்துகிறது. அந்த காரில் சின்ன ரோபோ போன்ற காமிரா உண்டு. கார் வீதி வீதியாக காமிரா சுழன்று 360 கோணங்களிலும் படம் எடுக்கும். இந்த படங்கள் பின்னர் ஒன்றிணைக்கப்படும். கார்கள் செல்ல முடியாத இடங்களில் காமிராவை கையில் வைத்துச்செல்வதும் உண்டு. கடலுக்கடியிலும் கொண்டு சென்றுள்ளனர்.
Googles-Street-View

GoogleStreetViewCar_Subaru_Impreza_at_Google_Campus
என்ன பார்க்கலாம்?

கூகுள் ஸ்டிரீட் வியூ சேவை உலகின் 76 நாடுகளில் இருக்கிறது. இந்த நாடுகளில் உள்ள நகரத்து காட்சிகளை காணலாம். நகரங்கள் மட்டும் அல்ல, எகிப்து பிரமிடு உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள், அமேசான் மழைக்காடுகள், பனிக்கரடிகளின் துருவப்பகுதி, நெல்சன் மண்டேலா சிறைவாசம் அனுபவித்த சிறைச்சாலை என பல முக்கிய இடங்களையும் பார்க்கலாம்.

என்ன சர்ச்சை?

ஸ்டிரீட் வியூ சேவை ஆரம்பம் முதலே சர்ச்சைக்குறியதாக இருக்கிறது. பல நாடுகளில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பெங்களூருவில் முயற்சிக்கப்பட்ட போது அனுமதி மறுக்கப்பட்டு தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு மற்றும் தேசத்தின் பாதுகாப்பு ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக இருக்கின்றன.
நகரங்களின் கட்டிடங்கள் உள்ளிட்ட இருப்பிடங்களை அப்படியே முழுவதுமாக பார்க்க முடிவது பாதுகாப்பு நோக்கில் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இந்த படங்களின் விவரங்களை தீவிர்வாதிகள் தாக்குதல் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே இந்திய அரசும் அனுமதி மறுத்துள்ளது. மேலும் தனி நபர்கள் பார்வையில் பார்க்கும் போது அவர்கள் வீடுகள் படம் பிடிக்கப்பட்டு பொது வெளியில் இடம்பெறுவது ஏற்கதக்கதாக இல்லை.
கூகுள் பழைய காட்சிகளை பயன்படுத்துவதாகவும், முகங்களை மறைத்துவிடுவதாகவும் கூறினாலும் தனியுரிமை மீறல் தொடர்பான அச்சங்கள் நீடிக்கிறது. கூகுள் ஸ்டிரீட் வியூ காட்சியில் தற்செயலாக சிக்கிய காட்சிகள் தொடர்பாக பல விநோத கதைகள் உள்ளன.

பயன்பாடு

சர்ச்சைக்குறிய சேவை என்பதை மீறி இந்த சேவை சுவாரஸ்யமானதாகவும்,பயனுள்ளதாகவும் இருக்கிறது. நகரத்து காட்சிகள் தான் சர்ச்சைக்குறியதாக இருக்கின்றவே த்தவிர மழைக்காடுகளையும், நினைவுச்சின்னங்களையும் பார்த்து ரசிக்க ஏற்ற சேவை இது. எகிப்து பிரமிடுகள் முதல் பூட்டான் அரன்மணை வரை உலகின் பல பகுதிகளை பார்க்கலாம். இந்தியாவில் கூட தொல்பொருள் ஆய்வுத்துறையுடன் இணைந்து தாஜ்மகால் உள்ளிட்ட முக்கிய நினைவுச்சின்னங்கள் கூகுள் ஸ்டிரீட் வீயுவில் பார்க்கலாம்.

இணைப்புகள்: கூகுள் ஸ்டிரீட் வியூ பக்கம்: https://www.google.com/maps/streetview/understand/

முந்தைய முக்கிய பதிவுகள்: 1.கூகுள் ஸ்ட்ரீட்வியூவில் மண்டேலா சிறைச்சாலை; http://cybersimman.com/2015/05/08/google-83/

2. கூகிள் வரைபடத்தில் உலககோப்பை கால்பந்து அரங்குகள்!; http://cybersimman.com/2014/06/10/google-75/

3. கூகுள் மூலம் ஆழ்கடலில் உலாவுங்கள்! http://cybersimman.com/2015/06/11/google-84/

4. கூகுள் வரைபடத்தில் எவரெஸ்ட்டை சுற்றிப்பார்க்கலாம்.; http://cybersimman.com/2015/03/21/online-19/

_79507168_robotatcomputer

கூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை!

இணையத்தை மேலும் எளிதாக பயன்படுத்தும் வகையில் கூகிள் இணையவாசிகளுக்கான புதிய பரிசோதனை முறையை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் , இணையவாசிகள் தாங்கள் மனிதர்கள் தான் என்பது முன்போல எரிச்சலூட்டும் அனுபவமாக இருக்காது என கூகிள் கருதுகிறது.

கூகிள் அறிமுகம் செய்துள்ள இந்த பரிசோதனையின் பெயர் ரி-கேப்ட்சா. ( No-CAPTCHA ) . இந்த சோதனையின் முந்தைய வடிவமான கேப்ட்சாவை நீங்கள் பலமுறை எதிர்கொண்டிருக்கலாம். புதிய இணைய சேவைக்காக பதிவு செய்யப்படும் போது அல்லது இணைய ஷாப்பிங் போன்றவற்றில் ஈடுபடும் போது ஏதாவது ஒரு நிலையில் சின்ன கட்டத்தில் , ஜாங்கிரி போன்ற எழுத்துக்கள் தோன்றும். அந்த எழுத்துக்களை நீங்கள் சரியாக கண்டுபிடித்து டைப் செய்தால் உள்ளே நுழையும் அனுமதியை பெறலாம்.

இந்த சோதனை தான் கேப்ட்சா என்று சொல்லப்படுகிறது. இந்த சோதனையின் நோக்கம் இணையத்தை பயன்படுத்த முயற்சிப்பவர்கள் மனிதர்கள் தான் என்பதை உறுதி செய்வது தான் . அதாவது இந்த சோதனையை முன்வைக்கும் ஒவ்வொரு இணையதளமும் நீங்கள் மனிதர் தானா? என்ற கேள்வியை முன்வைத்து அதை உறுதி செய்து கொள்கின்றன.
இது அபத்தமாக தோன்றலாம்.
ஆனால், இந்த சோதனையை இணையவாசிகள் எதிர்கொள்ள நேர்ந்தாலும் உண்மையில் இது அவர்களுக்கான அல்ல; இணையத்தில் உலாவும் அல்லது உலாவவிடப்படும் பாட் என்பபடும் சாப்ட்வேர் படைப்புகள் அல்லது எந்திரங்களை தடுப்பதற்காக தான்.

ஸ்பேம் மெயில் அனுப்ப, பாஸ்வேர்டு திருட என்று பலவிதமான பாட்கள் உருவாக்கப்பட்டு உலாவ விடப்பட்டுள்ளன. இவற்றை தடுக்கும் பொருட்டே, இணையவாசிகளுக்கு கேப்ட்சா சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
கிளிக் செய்து உள்ளே உழைய மட்டுமே தயார் செய்யப்பட்ட ஸ்பேம் பாட்களால் , இந்த சோதனையில் வெற்றிபெற முடியாது என்பதால் அவை திருதிருவென்று முழித்து நிற்கும். அவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்படும்.

இப்படி தான் கேப்ட்சா முறை இணையசேக்கான பூட்டு சாவியாக செயல்படுகிறது. அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கிய முறை இது.
ஆனால், இந்த சோதனையை எதிர்கொள்வது எரிச்சலாக இருக்கும். சில நேரங்களில் மீண்டும் மீண்டும் எழுத்துக்களை டைப் செய்ய வேண்டியிருக்கும் போது எரிச்சல் பலமடங்கு அதிகமாகும்.
அதோடு, இப்போதெல்லாம் இந்த கேப்ட்சா சோதனைக்காக பதிலை அளிக்ககூடிய புத்திசாலித்தனமான பாட்களை உருவாக்கத்துவங்கிவிட்டனர். விளைவு பாட்கள் கேப்ட்சா சோதனையை கூடு உடைத்து உள்ளே நுழைந்துவிடுகின்றன.

இதற்கு மாற்று மருந்தாக தேடியந்திர நிறுவனமாக கூகிள் ,ரி-கேப்ட்சா எனும் புதிய முறையை முன்வைத்துள்ளது. இணைய பாட்களுக்கு கடுமையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய முறை இணையவாசிகளுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என கூகிள் சொல்கிறது. இணையவாசிகள் , நான் ரோபோ இல்லை எனும் கட்டத்தை கிளிக் செய்தால் மட்டும் போதுமானது. இந்த கிளிக்கை வைத்தே ரி-கேப்ட்சா சேவையை பயன்படுத்த இருப்பது இணையவாசியா அல்லது ரோபாவா என தீர்மானித்துவிடும்.
ரோபோக்களுக்கு சிக்கலானது, மனிதர்களுக்கு எளிதானது எனும் வர்ணணையோடு கூகிள் இந்த சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவையை மற்ற இணையதளங்களுக்கும் கூகிள் வழங்க இருக்கிறது. ஏற்கனவே வலைப்பதிவு சேவையான வேர்டுபிரஸ் போன்றவை இதை பயம்படுத்த முன்வந்துள்ளன,.
இந்த சேவை எளிதாக தோன்றினாலும் இதன் பின் பெரிய அளவிலான ஆய்வு மற்றும் சிக்கலான செயல்முறைகள் இருக்கின்றன என்று கூகிள் சொல்கிறது.

கடந்த காலங்களில் இணையவாசிகள் கேப்ட்சா சோதனையை எதிர்கொள்ளும் விதம் மற்றும் பாட்கள் அணுகும் வித்த்தை ஆழமாக கவனித்து அதன் அடிப்படையில் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. அட்வான்ஸ்ட் ரிஸ் அனாலசிஸ் என்று கூகிள் இதை சொல்கிறது.

ரி-கேப்ட்சா சோதனையின் போது, அதற்கு முன்னர் மற்றும் பின்னர் இணையவாசியின் செயல்பாட்டை கவனித்து செயல்படும் ஆற்றல் இந்த முறையில் இருப்பதாக கூகிள் குழு சொல்கிறது. சில நேரங்களில், புகைப்படம் போன்றவை காண்பிக்கப்பட்டு அடையாளம் காட்ட கேட்கப்படலாம். இந்த சோதனை மனிதர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதோடு , புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்கும் வசதி, வரைபட சேவை மேம்பாடு ஆகியவற்றுக்கும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சரி கேப்ட்சா என்றால் என்ன என்று குழப்பமாக இருந்தால் , அதற்கான விரிவாக்கம் :Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart. கம்ப்யூட்டர் மற்றும் ரோப்போக்களை வேறுபடுத்துவத்ற்கான தானியங்கி டியுரிங் டெஸ்ட் என்று பொருள்.
கம்ப்யூட்டர் மேதையான ஆலன் டியூரிங் செயற்கை அறிவிற்காக முன்வைத்த சோதனை டியூரிங் டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

———-
ரிகேப்ட்சா பற்றி கூகிள் விளக்கம்: https://www.google.com/recaptcha/intro/index.html

—–

நெட்சத்திரங்கள் அப்டேட்;
மஹிர் காக்ரியை தெரியுமா என நேற்று கேட்டிருந்தேன். காக்ரி துருக்கி நாட்டவர். இணைய நட்சத்திரம். சொல்லப்போனால் இணையத்தின் முதல் நட்சத்திரம். யூடியூப் காலத்திற்கு வெகு முன்னரே, இமெயில் மூலம் இணைய வெளி முழுவதும் பிரபலமானவர். ஒரு சாமான்யர் பற்றி எல்லோரையும் பேச வைக்க முடியுமா என புத்தாயிரமாண்டில் வியக்க வைத்தவர்.
காக்ரி என்ன செய்தார் ? எப்படி பிரபலமானா? அதன் பிற்கு என்ன ஆனார் ? என்பது பற்றி எல்லாம் , நெட்சத்திரங்கள் புத்தக்த்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்.
மேலும் நெட்சத்திரங்கள் பற்றிய சுவாரஸ்ய்மான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன் சிம்மன்புத்தகம் பற்றிய விவரங்களுக்கு ;

புத்தகத்தின் விலை ரூ. 130 ( 176பக்கங்கள்).

விவரங்களுக்கு ; Vivek Enterprises,
No.2/3, 4th Street,
Gopalapuram,
Chennai – 600 086.
Ph: 044-28111506

அன்புடன் சிம்மன்.

கூகுலில் கவலையில்லாமல் தேட ஒரு தேடியந்திரம்!

startpagesகூகுல் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் சேமித்து வைப்பதால் கூகுல் அந்தரங்க ஊடுருவலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதற்கு மாற்றாக டக்டக்கோ போன்ற தேடியந்திரங்கள் முனவைக்கப்படுகின்றன.இந்த நிலையில் கூகுல் தேடல் முடிவுகளை கவலையில்லமல் தேடித்தருவதற்காக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிறது.
ஸ்டார்ட்பேஜ் எனும் அந்த தேடியந்திரம் தன்னை உலகின் அந்தரங்கமான தேடியந்திரம் என வர்ணித்து கொள்கிறது. இணைய மொழியில் பாதுகாப்பான தேடியந்திரம் என இதை புரிந்து கொள்ளலாம்.
ஸ்டார்ட்பேஜ் என்ன செய்கிறது என்றால் கூகுலில் நேரடியாக தேடாமல் தன் மூலமாக கூகுலுக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு ஸ்டார்ட்பேஜ் மூலம் கூகுலுக்கு செல்லும் போது வழக்கமாக கூகுலில் தேடும் போது நிகழும், ஐபி முகவரி சேகரித்தல், தேடல் முகவரி சேமிப்பு போன்றவை இல்லாமல் தேடிவிட்டு திரும்பலாம் என்கிறது. அதாவது தேடலில் சுவடு இல்லாமல் நிம்மதியாக தேடிக்கொள்ளலாம் என்கிறது.
கூகுல் உள்ளிட்ட தளங்கள் இணையவ்ச்சிகள் கம்யூட்டருக்குள் அனுப்பும் குகுகீஸ் சாப்ட்வேரையிம் தடுப்பதாக ஸ்டார்ட்பேஜ் சொல்கிறது.
கூகுல் சார்ந்த தேடிய‌ந்திரங்கள் பல‌ உண்டு. அவற்றில் இது சற்றே வித்தியாசமானது.
எந்த அளவு பயனுள்ளது என்று தெரியவில்லை,ஆனால் இணைய யுகத்தின் இப்போதைய மிகப்பெரிய பிரச்ச‌னையான இணையவாசிகள் பற்றிய தகவல் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கூடியது.

தேடியந்திர முகவரி: https://startpage.com/