Tag Archives: instgram

1date

காதலுக்காக ஒரு இணையதளம்

காதலுக்காக சிலர் எந்த அளவுக்கு செல்லத்தயராக இருக்கின்றனர் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்க வாலிபர் ஒருவர் காதலுக்காக என்றே இணையதளம் ஒன்றை அமைத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். – சரியாக சொல்வதானால் காதலியை தேடுவதற்காக தனி இணையதளம் அமைத்திருக்கிறார்.

டேட்டிங் கலாச்சாரமும் ,அதற்கு உதவும் இணையதளங்களும், இப்போது டிண்டர் போன்ற செயலிகளும் பிரபலமாக இருக்கும் ஒரு தேசத்தில் ஒருவர் காதலியை தேடிக்கொள்ள என்று தனியே இணையதளம் அமைப்பது இன்னும் விசித்திரமானது தான்!

ஆனால், ரென் யூ (Ren You) தனக்கு வேறு வழி இல்லை என்கிறார்.அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள பிர்மிங்காமில் வசிக்கும் இவர் தான் இப்படி காதலுக்காக இணையதளம் அமைத்திருப்பவர்.
ரென் ஒன்றும் சாதாரணமானவர் இல்லை. ஹார்வர்டில் எம்பிஏ பட்டம் பெற்றவர். வர்த்தக நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். ஆனால் டேட்டிங் தான் அவருக்கு கைகொடுக்கவில்லை. வேலைக்காக அலபாமா வந்த ஓராண்டில் எத்தனையோ டேட்டிங் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் எல்லாமே ஏமாற்றத்தில் முடிவடைந்ததால் , காதலியை தேட புதிய வழியை நாட தீர்மானித்தாதாக் ரென் சொல்கிறார்.
அந்த வழி தான், டேட்ரென் ( http://dateren.com/) இணையதளம்.

காதலியை தேடிக்கொள்வதற்காக இந்த தளத்தை அமைத்துள்ளதுடன் அவர் நின்றுவிடவில்லை. தனக்கு சரியான காதலியை பரிந்துரைக்கும் நபருக்கு 10,000 டாலர் பரிசு அளிக்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனால் ஒன்று பரிந்துரைக்கப்படும் பெண்மணி தன்னுடன் குறைந்தது ஆறு மாதமாவது டேடிங் செய்தாக வேண்டும் என நிபந்தை வித்திருக்கிறார். அதோடு பரிந்துரைப்பவருக்கு தான் பரிசேத்தவிர காதலிக்கு அல்ல என்றும் தெளிவு படுத்தியிருக்கிறார்.

விநோதமாக இருக்கிறதா? அப்படி எல்லம் இல்லை என்கிறார் ரென். தினமும் 12 மணி நேரம் வேலை செய்யும் நிலை இருந்தால் கைவசம் இருக்கும் 2-3 மணி நேரத்தில் டேட்டிங் முயற்சிக்காக பாரில் காத்திருப்பது சரியாகவா இருக்கும் என்று கேட்கும் ரென் அதைவிட இப்படி இணையதளம் மூலம் வலைவீசி பார்ப்பது பொருத்தமாக இருக்குமே என்கிறார்.

நான் தனியாக இருக்கிறேன் அதை மாற்ற வேண்டும் அதற்காக தான் இந்த தளம் என்றும் முகப்பு பக்கத்திலேயே தெம்பாக குறிப்பிட்டுள்ள ரென், தனது முயற்சி பற்றி சுருக்கமாக குறிப்பிட்டு தான் யார் என்பதையும் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார். ஏதோ வேலைக்கு விண்ணப்பிப்பவர் போல அவரது பயோடேட்டாவும் அசத்தலாக இருக்கிறது.

இது போன்ற இணையதளங்களில் நிகழக்கூடியது போல, விளம்பரம் தேடும் விளையாட்டு முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மீறி வாலிபர் ரென்னின் முயற்சி உண்மையாகவே தெரிகிறது. அமெரிக்க நாளிதழ்களுக்கு எல்லாம் பேட்டி கொடுத்து தனது முயற்சி பற்றி உற்சாகமாக பேசி வருகிறார்.
இந்த முயற்சிக்கு இதுவரை வரவேற்பும் நன்றாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
ஆனால் காதலி கிடைக்கிறாரோ இல்லையோ, கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

ரென் யூவின் காதல் இணையதளம்: http://dateren.com/

——
1pixta
தளம் புதிது; புகைப்பட வேட்டை

இணையத்தில் புகைப்படங்களை பார்த்து ரசிக்க இன்ஸ்டாகிராமும், பலரும் மறந்து விட்ட பிளிக்கரும் சிறந்த வழி.இவை தவிர, உங்கள் பேஸ்புக்கம் உட்பட இன்னும் பல வழிகள் இருக்கின்றன. இவற்றோடு இன்னும் ஒரு கூடுதல் வழி தேவை என நினைத்தால் பிக்ஸ்டாபிளேஸ் தளத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
பிக்ஸ்டாபிளேஸ் , இணையத்தில் வெளியாகும் புகைப்படங்களை தேடிப்பார்க்க உதவுகிறது. இதில் உள்ள தேடல் கட்டத்தில் நீங்கள் இருக்கும் நகரம் அல்லது, எந்த நகரத்து புகைப்படங்களை பார்க்க விரும்புகிறீர்களோ அந்த நகரின் பெயரை டைப் செய்தால் அந்நகரம் தொடபான புகைப்படங்கள் எல்லாம் தோன்றுகின்றன. இன்ஸ்டாகிராம், பிளிக்கர் உள்ளிட்ட சேவைகளில் பகிரப்பட்ட படங்கள் தொகுத்தளிக்கப்படுகின்றன. இவை தவிர வரைப்படம் மூலமும் தேடலாம்.
இந்த தளத்தில் சென்னை என டைப் செய்து பார்த்தால் வரும் புகைப்படங்கள் வியக்க வைக்கின்றன.

இணையதள முகவரி: http://www.pixtaplace.com/

—-
1app

செயலி புதிது; அரசு நாட்காட்டி

விடுமுறை நாட்களில் அரசு அலுவலங்களுக்கு சென்று ஏமாந்து திரும்பிய அனுபவம் உள்ளவரா நீங்கள்? இனி இப்படி ஒரு சங்கடத்தை எதிர்கொள்வதை தவிர்க்க உதவுகிறது அரசு நாட்காட்டி செயலியான Govt. of India Calendar 2015.
ஆண்ட்ராய்டு போனில் செயல்படக்கூடிய இந்த செயலில், 2015 ம் ஆண்டில் அரசு அலுவலகங்களை அடையாளம் காட்டுவதோடு அரசு நிகழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டுகிறது. இட்து பக்கம் அல்லது வலது பக்கம் தள்ளினால் மாதங்களை முன்னும் பின்னும் மாற்றிக்கொள்ளலாம். இவை தவிர பிரதமரின் குறும்பதிவுகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகள் ஆகியவற்றையும் காணலாம். அரசு இணையதளங்களின் பட்டியலும் இருக்கிறது. தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.davpcal.davpcalendar&hl=en


கீபோர்டு குறுக்குவழிகள்

கம்ப்யூட்டரில் செய்யக்கூடிய பல பணிகளை மவுசுக்கு பதில் கீபோர்டு குறுக்கு வழிகளை பயன்படுத்தலாம் என்பது பலரும் அறிந்தது தான். குறிப்பட்ட வாசகங்கள் அல்லது வார்த்தையை காபி செய்ய வேண்டும் என்றால் , அவற்றை செலெக்ட் செய்த பின் Ctrl + C அல்லது Ctrl + Insert விசையை பயன்படுத்தினால் போதுமானது. மாறாக அந்த தகவலை அப்படியே கட் செய்ய விரும்பினால் Ctrl + X. விசையை பயன்படுத்தவும். இதே போல Ctrl + V and Shift + Insert விசையை பயன்படுத்தினால்
காபி செய்தவற்றை பேஸ்ட் செய்யலாம்.

யாஹு மெயிலில் புதிய வசதி

யாஹு மெயில் பழையதாக இருக்கலாம் ஆனால் இன்னும் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது யாஹு மெயில் பயனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. யாஹூவில் இருந்து மெயில் அனுப்பும் போது அந்த மெயிலில் புகைப்படம்,வீடியோ மற்றும் ஜிப்க்ளை எளிதாக சேர்க்கும் வகையில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. மெயிலை உருவாக்கும் போது கம்போஸ் பெட்டிக்கு கீழே உள்ள + குறியை கிளிக் செய்தால் புகைப்பட ஆல்பம் போன்றவற்றை நேரடியாக பயன்படுத்தலாம். கோப்புகள் மற்றும் இணைப்புகளையும் இதன் மூலம் அணுகலாம். மேலும் பயனாளிகள் தாங்கள் அனுப்பிய அல்லது வரப்பெற்ற புகைப்படங்களை தேதி அடிப்படையில் பார்க்கவும் செய்யலாம். அதே போல் ஜிப்களை தேடிப்பார்த்து அனுப்பும் வசதியும் இருக்கிறது.

—–

1=s

டிவிட்டர் ஆண்களும் பேஸ்புக் இளைஞர்களும் ; ஒரு புகைப்பட கலைஞரின் புதுமை முயற்சி

சமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக்,டிவிட்டர் என ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான தளம் இருக்கும். இந்த தளங்களை ஒருவர் பயன்படுத்தும் விதமும் ,பகிர்ந்து கொள்ளும் தகவல்களும் கூட மாறுபடலாம். டிவிட்டர் குறும்பதிவும் , பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டும் வேறு வேறானவை. வேலைவாய்ப்பு சார்ந்த வலைப்பின்னலான லிங்க்டுஇன் தளத்தின் பகிர்வு இன்னும் மாறுபட்டு இருக்கும்.
எல்லாம் சரி, இந்த தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவாக சித்திரம் இருந்தால் எப்படி இருக்கும்? இது சாத்தியம் இல்லை என்றாலும் கூட, புகைப்பட கலைஞர் ஒருவர் சமூக வலைப்பின்னல் தளங்களுக்கு ஏற்ப அதன் பயனாளிகளை உருவகப்படுத்தி அழகான புகைப்படங்களாக்கி இருக்கிறார்.
ஆண்கள் சமூக வலைப்பின்னல்களாக இருந்தால் எப்படி இருக்கும்? எனும் கேள்வியுடன் இதற்கான திட்டத்தை அவர் முன்வைத்திருக்கிறார். அதாவது பேஸ்புக் ,டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்கள் ஆண்களாக இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து அதனடிப்படையில் மாடல்களை அலங்காரம் செய்து கொள்ள வைத்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்.
பிரபல பேஷன் புகைப்பட கலைஞரான விக்டோரியா பஷுடா (Viktorija Pashuta
) என்பவர் தான் இந்த புதுமையான புகைப்பட வரிசையை உருவாக்கி அளித்திருக்கிறார்.

fashionbrowsers1
சமூக வலைப்பின்னல்களின் தன்மைக்கு ஏற்ப மின்னும் இந்த புகைப்படங்கள் வியக்க வைக்கின்றன. சமூக வலைப்பின்னல் தளங்களின் லோகோ நிறத்தை அடிப்படையாக கொண்டு அவற்றின் சமூக பகிர்வு குணங்களை இணைத்து மாடல்களை அவர் போஸ் கொடுக்க வைத்திருக்கிறார்.
உதாரணத்திற்கு டிவிட்டர் ஆண், நீல நிற சட்டை மற்றும் ஷூவுடன் அசத்தலாக போஸ் தருகிறார். பேஸ்புக் ஆண், தலை வரை மூடிய அடர் நீல டி ஷர்ட் மற்றும் அதே வண்ண பேண்டுடன் கூலாக காட்சி அளிக்கிறார்.
புகைப்பட பகிர்வு சேவையான பிலிக்கர் ஆணின் தோற்றம் இன்னும் வண்ணமயமாக இருக்கிறது. லிங்க்டுஇன் ஆண் சும்மா நீல நிற கோடு சூட்டுடன் கம்பீரமாக தோன்றுகிறார்.

linkedin
இன்ஸ்டாகிராம்,கூகிள் பிளஸ் ஆண்களின் போஸ்களும் அசத்தலாக இருக்கிறது.
சமூக வலைப்பின்னல் யுகத்தில் அவற்றின் தாக்கம் தினசரி வாழ்க்கையில் நேரடியாக உணரப்படும் நிலையில் நாம் அவற்றை தகவல் தொடர்பு மற்றும் பகிர்வுக்கு பயன்படுத்தும் தேவை இருப்பதாக கூறும் பஷுடா, சமூக வலைப்பின்னல் மூலம் நண்பர்கள் ,சகாக்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளும் போது இந்த ஆன்லைன் மேடைகள் ஒருவிதத்தில் உயிர் பெற்று நிற்பதாகவும் சொல்கிறார். இந்த எண்ணமே பிரபலமான சமூக வலைப்பின்னல் சேவைகளை மனித முகம் கொள்ள வைத்தால் எப்படி இருக்கும் என தோன்றியதாகவும் அதன் விளைவே இந்த புகைப்பட திட்டம் உருவானதாக தனது இணையதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைப்பின்னல் தளங்களில் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் ஒன்று போன்றவை என்றாலும் ஒவ்வொரு சமூக வலைப்பின்னலுக்கும் ஒரு தனி குணம் இருப்பதாக சொல்லும் பஷுடா பேஸ்புக் கேஷுவலானது, டிவிட்டர் கிளாசிக்கானது, பிண்டிரெஸ்ட் படைப்பாற்றல் மிக்கது, பிலிக்கர் கலைநயம் மிக்கது என அடுக்கி கொண்டு போகிறார்.
இந்த தன்மையின் அடிப்படையில் அவற்றின் லோகோவின் காட்சி தன்மையை வழிகாட்டியாக கொண்டு சமூக வலைப்பின்னல் தளங்களை மனிதர்களாக உருவகப்படுத்தி புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக வலைப்பின்னல் தளங்களை மனிதர்களாக உருவகப்படுத்துவது எல்லாம் சரி தான், ஆனால் பேஸ்புக்கும் , டிவிட்டரும் ஏன் ஆண்களாக தான் இருக்க வேண்டும் என்று கேட்கத்தோன்றலாம். இதற்கான பதில் என்ன என்றால் ஏற்கனவே பஷுடா, இணையத்தில் பயன்படுத்தப்படும் பல வகை பிரவுசர்களை அழகான பெண்களாக உருவகப்படுத்தி , ‘What If Girls Were Internet Browsers’ எனும் புகைப்பட வரிசையை உருவாக்கி இருக்கிறார். பெண்கள் பல வித பிரவுசர்களாக கற்பனை செய்யப்பட்ட அந்த பட வரிசை இணைத்தாலும் வெகுவாக ரசிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தான் தற்போது, சமூக வலைப்பின்னல் தளங்களாக இருந்தா.? எனும் கேள்வி கேட்டு புகைப்படங்கள் மூலம் பதில் அளித்திருக்கிறார்.

புகைப்பட கலைஞரின் இணையதளம்: http://pashutaphotography.blogspot.in/2014/10/what-if-guys-were-social-networks.html