Tag Archives: mp

இண்டெர்நெட்டின் முன்னோடி எம் பி

kennedyசமீபத்தில் மரணமடைந்த அமெரிக்க ‘எம் பி’ டெட் கென்னடிக்கு இணைய உலகின் சார்பில் வீரவண‌க்கம் செலுத்த வேண்டும்.காரணம் மனிதர் சாதரண எம் பி இல்லை .இண்டெர்நெட்டின் முன்னோடி எம் பி.

ஆம் இண்டெநெநெட்டில் தனக்கென இணையதள‌த்தை அமைத்துக்கொண்ட முதல் அமெரிக்க எம் பி இவர் தான். அநேகமாக உலகிலேயே முதல் எம் பியாகவும் இருக்க வேண்டும்.

ஒரு எம் பி சொந்தமாக இணையதளம் வைத்திருப்பது இன்று பெரிய விஷயமல்ல. அது மட்டுமல்ல அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் பிரதிநிதிகள் இணைய‌தள‌மில்லாம‌ல் இருந்தால் வாக்க‌ள‌ர்க‌ள் ம‌திக்க‌ மாட்டார்க‌ள். (இந்தியாவில் எத்த‌னை எம்பிக்க‌ள் இணைய‌த‌ள‌ம் வைத்துள்ள‌ன‌ர் என்று தெரிய‌விக்ல்லை)

தேர்ந்தெடுத்த‌ ம‌க்க‌ளோடு தொட‌ர்பு கொள்ள‌வும் அடுத்த‌ தேர்த‌லில் வாக்கு சேக‌ரிக்க‌வும் இணைய‌த‌ள‌ம் மிக‌வும் அவ‌சிய‌ம்.த‌ற்போதைய‌ எம்பிக்க‌ள் ஃபேஸ்புக் ப‌க்கம், டிவிட்ட‌ர் ப‌க்க‌ம் எல்லாம் வைத்துகொண்டு அச‌த்துகின்ற‌ன‌ர்.

ஆனால் இண்டெர்நெட் பிர‌ப‌ல‌மாக‌த்துவ‌ங்காத‌ கால‌த்தில், அதனை எப்ப‌டியெல்லாம் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம் என்ப‌து தெளிவாக‌ புரியாத‌ ஆர‌ம்ப‌ கால‌த்திலேயே கென்ன‌டி த‌ன‌க்கான‌ இணைய‌த‌ள‌த்தை அமைத்துக்கொன்டார் என்றால‌ பார்த்துக்கொள்ளுங்க‌ள்.

இண்டெர்நெட்டின் த‌ற்போதைய‌ வ‌டிவ‌மான‌ வைய விரிவு வ‌லை அறிமுக‌மான‌ 1993 ம் ஆண்டே கென்ன‌டி த‌ன‌க்கான‌ இணைய‌த‌ள‌த்தை உருவாக்கிகொண்டார்.அப்போது அமெரிக்க‌ நாடாளும‌ன்ற‌த்தின் எந்த‌ அலுவ‌ல‌க‌மும் இண்டெர்நெட்டில் இட‌ம்பெற‌வில்லை.

இத‌ன்மூல‌ம் டெட் கென்ன‌டி இண்டெர்நெட்டில் இட‌ம் பெற்ற‌ முத‌ல் அமெரிக்க‌ எம்பி என்னும் சிற‌ப்பை பெற்றார். அத‌ன்பிற‌கு இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌திலும் அவ‌ர் முன்னினியில் திக‌ழ்ந்தார்.

டிவிட்டரில் அரசியல் விவாத‌ம்

senateநீள‌மான அறிக்கைகளில் தாக்கி கொள்வது ;விஷயத்தை விட்டு வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவது இவற்றையெல்லாம் விட்டு விட்டு அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் விவாதித்தால் எப்படியிருக்கும்.

ஆர்லான் ஸ்பெக்டர் ம‌ற்றும் சக் கிராஸ்லே விவாதித்தது போல அருமையாக இருக்கும்.

இருவரும் அமெரிக்க எம் பி க்கள் .ஸ்பெக்டர் ஜனநாயக கட்சியைச்சேர்ந்தவர் .கிராஸ்லே குடியரசுக்கட்சியை சேர்ந்தவர்.

அமெரிக்க அரசு உத்தேசித்துள்ள சுகாதரத்துறை சீர்திருத்த திட்டம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு இருக்கிற‌து.

அமெரிக்காவில் இந்த திட்டம் நாடு தழுவிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பெக்ட‌ர் இந்த‌ திட்ட‌த்தை தீவிர‌மாக‌ ஆத‌ரிப்ப‌வ‌ர். கிராஸ்லே அதே தீவிர‌த்தோடு எதிர்ப்ப‌வ‌ர்.

இந்த திட்ட‌த்தின் கீழ் த‌னியார் இன்சூர‌ன்ஸ் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு இனையாக‌ அர‌சு இன்சூர‌ன்ஸ் வ‌ழ‌ங்க‌ இருப்ப‌து ச‌ர்ச்சைக்கு உள்ளாகி உள்ள‌து.இத‌னால் ம‌ருத்துவ‌ சேவை பாதிக்க‌ப்ப‌டும் என்று எதிர்ப்பாளர்க‌ள் க‌ருதுகின்ற‌ன‌ர்.
இவ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ ஐயோவா எப் பி கிராஸ்லே,இந்த‌ திட்ட‌ம் வயாதா‌ன‌வ‌ர்க‌ளை அர‌சு க‌ருணைக்கொலை செய்ய‌ வைத்து விடும் என்று ஒரு க‌ருத்தை கொளுத்திப்போட்டு நாடு முழுவ‌தும் ப‌ர‌ப‌ர்ப்பை ஏற்ப‌டுத்திவிட்டார்.

இந்த‌நிலையில் இந்த‌ திட்ட‌த்தை ஆத‌ரிப்ப‌வ‌ரான‌ பெனிசில்வேனியா எம் பி ஸ்பெக்டர், கிராஸ்லே கூறும் க‌ருத்துக்க‌ள் த‌வ‌றான‌வை என‌ அவ‌ரோடு விவாதிக்க‌ முற்ப‌ட்டார்.

இதற்காக அவ‌ர் தேர்வு செய்த‌ வ‌ழி தான் டிவிட்ட‌ர்.அமெரிக்காவில் டிவிட்ட‌ர் செய்யும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளில் அவ‌ரும் ஒருவ‌ர். கிராஸ்லேவின் க‌ருத்துக்க‌ள் வெளியான‌ நிலையில் ஸ்பெக்ட‌ர் த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தில் ,சுகாதார‌ திட்ட‌ம் தொட‌ர்பாக‌ பொய்யான‌ த‌க‌வ‌ல்களை ப‌ர‌ப்புவ‌தை நிறுத்திக்கொள்ளுமாறு கூற‌ எம் பி கிறாஸ்லேவை தொட‌ர்பு கொண்டேன் , ஆனால் முடிய‌வில்லை , எப்ப‌டியும் விரைவில் இது ப‌ற்றி விவாதிப்பேன் என‌ குறிப்பிட்டிருந்தார்.

அர‌சு திட்ட‌ம் ப‌ற்றி க‌ருத்து தெரிவிப்ப‌து த‌வ‌ற‌ல்ல‌ ஆனால் இற‌க்கும் த‌ருவாயில் ம‌ருத்துவ‌திட்ட‌ம் ப‌ற்றி பேசி அச்சுறுத்த‌ யாருக்கும் உரிமையில்லை என்று அடுத்த‌ டிவிட்ட‌ர் ப‌திவில் க‌டுமையாகவே அவ‌ர் தெரிவித்தார்.

இவ்வாறு க‌ராச்லேவின் நிலைப்பாட்டை மிக‌ அழ‌காக‌ த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌திவில் அவ‌ர் விம‌ர்சித்திருந்தார்.கூட‌வே த‌ன‌து நிலையையும் தெளிவு ப‌டுத்தியிருந்தார்.

இந்த‌ டிவிட்ட‌ர் ப‌திவுக‌ள் க‌வ‌ன‌த்தை ஈர்த்த‌ நிலையில் கிராஸ்லேவும் த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தில் இது ப‌ற்றி க‌ருத்து தெரிவித்தார்.அதாவ‌து ஸ்பெக்ட‌ர் க‌ருத்துக்கு ப‌தில் அளித்து த‌ன‌து நிலையை தெளிவுப‌டுத்தினார்.

இந்த‌ விவாத‌ம் இப்போதைக்கு இத்தோடு நிற்கிற‌து.

கொஞ்ச‌ம் யோசித்துப்பாருங்க‌ள் இதே போல‌ ம‌க்க‌ள் பிர‌திநிதிகள் டிவிட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்தி விவாதித்தால் எப்ப‌டி இருக்கும். அது தொட‌ர் விவாத‌மாக‌ அமிந்தால் மேலும் ப‌ய‌னுல்ள‌தாக‌ இருக்கும்.