Tag Archives: obama

NM_16Ahmed10

அறிவியல் ஆர்வத்தால் கைதான மாணவருக்கு ஆதரவாக இணைய குரல் !

அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆனால் அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் அவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்படும் சூழலை உருவாக்கியது. இப்போது அகமதுவுக்காக இணையம் குரல் கொடுத்து வருவதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது.

மாணவர் அகமது நிச்சயம் கடிகாரத்தை உருவாக்கியதற்காக கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான் நடந்தது. அகமது முகமது அவரது முழுப்பெயர் .அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண புறநகர் பகுதியான இர்விங்கில் உள்ள மெக் ஆர்த்தர் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட அகமது நாசா அமைப்பின் சின்னம் பொறித்த டி-ஷர்ட்டை விரும்பி அணிபவர். புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலையில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற இலக்கு கொண்டவர்.கடந்த சில தினங்களுக்கு முன் அகமது, வீட்டிலேயே உருவாக்கி மின்னணு கடிகாரத்தை பள்ளிக்கு கொண்டு வந்து தனது வகுப்பு ஆசிரியரிடம் மிகுந்த ஆர்வத்துடன் காண்பித்திருக்கிறார்.இந்த தொழில்நுட்ப சாகசத்திற்காக ஆசிரியரின் பாராட்டு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும்.
ஆனால், ஒரு சின்ன சூட்கேசில் இருந்த அந்த அமைப்பை பார்த்ததும் பள்ளி ஆசிரியருக்கு சந்தேகம் தான் உண்டானது. இதற்குள் இன்னொரு ஆசிரியர் இது பற்றி பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அன்று மாலையே அகமது கைது செய்யப்பட்டார். பள்ளியில் இருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் வெடிகுண்டாக இருக்கலாம் எனும் சந்தேகமே இதற்கு காரணம். நிச்சயமாக இந்த சந்தேகத்தின் பின்னே அகமதுவின் பெயரும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
14 வயது பள்ளி மாணவர் அறிவியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியதற்காக பாராட்டி ஊக்குவிக்கப்படுவதற்கு பதில் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்பட்ட சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த சம்பவம் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

அகமNM_16Ahmed1து அவரது இஸ்லாமிய மத பின்னணி காரணமாகவே இந்த சந்தேகத்திற்கு இலக்காகி இருக்கிறார் என்பது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்லாமிய மத்த்தை சேர்ந்த எல்லோரையும் தீவிரவாத கண்ணோட்டத்தில் பார்க்கும் தட்டையான மனநிலையின் வெளிப்பாடாக இந்த சம்பவம் அமைந்திருப்பதாக பலரும் விமர்சித்தனர்.

இந்த கைது பற்றி நாளிதழ்களில் வெளியான செய்தி ,அமெரிக்காவில் நிலவும் சார்பு நிலை பற்றிய விவாதத்தை தீவிரமாக்கியது.
நடந்த சம்பவம் மாணவர் அகமதுவிற்கு அதர்சியாக இருந்திருக்கும். அவரது குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து ஆதங்கத்துடன் விளக்கம் அளித்தனர்.

ஆனால் இதற்குள் அகமதுவுக்கு ஆதரவு குவியத்துவங்கியது.இணையத்தில் பலரும் அகமதுவுக்கு நேர்ந்த கதி குறித்து அதிர்ச்சி தெரிவித்தனர். பள்ளி மாணவனின் ஆர்வத்தை பார்க்காமல் அவனது மத பின்னணியில் கவனம் செலுத்து சந்தேக்கிக்கும் போக்கை பலரும் கடுமையாக குறை கூறினர். இந்த நிலைக்கு இலக்கான அப்பாவி மாணவர் அகமதுவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் #IStandWithAhmed எனும் ஹாஷ்டேகை உருவாக்கி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.இணையவாசிகள் மட்டும் அல்லாமல் விஞ்ஞானிகள் உள்ளிட்டோரும் இந்த ஹாஷ்டேகுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இளம் கண்டுபிடிப்பாளராக அகமதுவை ஊக்குவிப்பதற்கு பதில் ஒரு பள்ளி மாணவரை தீவிரவாதியாக பார்ப்பது சரியா எனும் விதமாக பலரும் கேள்வி எழுப்பினர். வெள்ளை மாணவர் ஒருவர் இது போல செய்திருந்தால் பாராட்டி இருப்பீர்கள் அல்லவா என்பது போலவும் சிலர் ஆவேசமாக கேட்டிருந்தனர்.
டிவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்களில் இப்படி ஆதரவு குவிந்த நிலையில். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் மாணவர் அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஒபாமா தனது டிவிட்டர் பக்கத்தில் , அகமதுவின் கடிகார கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளதோடு வெள்ளை மாளிகைக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அதே போல பேஸ்புக் நிறுவனம் மார்க் ஜக்கர்பர்கும், மாணவர் அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக் நிறுவன தலைமையகத்தில அவரை வரவேற்க தயராக இருப்பதாக கூறியிருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் அக்மதுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆதரவு பெருகி வருகிறது.
இப்படி பெருகும் ஆதரவு மாணவர் அகமதுவை ஹிரோவாக்கி இருக்கிறது. நிச்சயம் இந்த ஆதரவையும் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் இணையம் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து புகழையும் தேடித்தந்திருக்கிறது.

அகமது குடும்பத்தினர் இந்த நிகழ்வு தொடர்பாக @IStandWithAhmed எனும் பெயரில் டிவிட்டர் கணக்கு துவங்கி இந்த நிகழ்வை பதிவு செய்து வருகின்றனர்.

நன்றி;விகடன்.காமில் எழுதியது

tweet23n-2-web

டிவிட்டரால் ஏற்பட்ட விபரீதம்

டிவிட்டரில் அதிக பாலோயர்கள் இருப்பதாக பெருமை பட்டுக்கொள்வதும் , பிரபலங்கள் பின் தொடர்வதை சொல்லி மகிழ்வதும் சமூக ஊடக யுகத்தில் இயல்பானது தான். ஆனால் அமெரிக்காவிலோ இளம் பெண் ஒருவர் அதிபர் ஒபாமா தனது டிவிட்டர் பாலோயர் என்று கூறியதற்காக உளவியல் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 8 நாட்கள் மனநல ஆலோசனைகளுக்கு உடபடுத்தப்பட்டவர் இப்போது அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறார்.

அமெரிக்காவின் லாங்க் ஐல்ண்ட் பகுதியை சேர்ந்த கமிலா பிரோக் எனும் அந்த பெண், கடந்த செப்டம்பர் மாதம் ஹார்லெம் பகுதியில் காரில் சென்ற போது போக்குவரத்து காவலர்களிடம் சிக்கியிருக்கிறார். போதை மருந்து பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அவரது காரில் எந்த போதப்பொருளும் இருக்கவில்லை என்று அவரது தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.

மறு நாள் காரை எடுத்துவர அவர் காவல் நிலையம் சென்ற போது அவர் வலுக்கட்டயமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மிகவும் கொந்தளிப்பான மனநிலையில் அவர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணர்ச்சியமயமான நிலையில் இருந்தது உண்மை தான் ஆனால் எந்தவிதத்திலும் மனச்சோர்வுடன் இருக்கவில்லை என்று பிரோக் மறுத்துள்ளார்.

tweet23n-1-webஹார்லெம் மருத்துவமனையில் டாக்டர்களிடம் அவர் தான் வங்கியில் வேலை பார்ப்பதாகவும், டிவிட்டரில் அதிபர் ஒபாமா தன்னை பின் தொடர்வதாகவும் கூறியிருக்கிறார். ஒபாமா மோசமானவர்களின் பாலோயராக இருப்பாரா? என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

டிவிட்டரில் ஒபாமா பாலோயராக இருக்கும் தகவலை சொன்னால் தன்னை நம்புவார்கள் என்று அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக அதனாலேயே டாக்டர்கள் அவர் மீது சந்தேகம் கொண்டு அவருக்கு மயக்க ஊசி போட்டு தொடர்ந்து உளவியல் ஆலோசனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த பெண் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார், ஒபாமா டிவிட்டரில் தன்னை பின் தொடரவில்லை என்று கூறுகிறார் என அவரைப்பற்றி மருத்துவமனை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒபாமா டிவிட்டர் பாலோயர் என கூறியதால் அவரது மனநிலை குறித்து டாக்டர்கள் மேலும் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.

8 நாட்களுக்கு பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கான காரணமுன் கூறவில்லை என்கிறார் பிரோக். ஆனால் மருத்துவ கட்டணமாக 13,000 டாலர் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரோக் இந்த சம்பவத்தால் நொந்துப்போய் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்.
சமூக ஊடக பாதிப்பு தொடர்பான பலவித உதாரணங்க்ள் இருந்தாலும் பிரோக்கிறகு நேர்ந்த கதி மிகவும் விநோதமானதாக கருதப்படுகிறது.

பிரோக் கூறியபடி உண்மையில் அதிபர் ஒபாமா அவரது டிவிட்டர் பாலோயர் தான். ஆனால் இதில் வியப்பதற்கு எதுவுமில்லை. ஒபாமாவின் டிவிட்டர் கணக்கு நிர்வகிக்கப்படும் பக்கமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 6,40,000 பேரை ஒபாமாவின் டிவிட்டர் பக்கம் பின் தொடர்கிறது.

பிரோக்கின் டிவிட்டர் பக்கத்தை பார்த்திருந்தால் இதை எளிதாக உறுதி செய்து கொண்டிருக்கலாம். ஆனால் டாக்டர்களும் அதிகாரிகளும் அவ்வாறு செய்யாதது ஏன் என்று தெரியவில்லை என்று இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்தவர்கள் வியப்பாக கூறியுள்ளனர்.

சமூக ஊடக செல்வாக்கு பல நேரங்களில் புதிய வாய்ப்புகளையும் பெற்றுத்தரும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் டிவிட்டரில் அதிபர் பாலோயராக இருக்கிறார் என கூறியதற்காக ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

இந்த சம்பவம் தொடர்பாக நியாயம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் பிரோக், எல்லோரிடமும் வைக்கும் வேண்டுகோள், ஒபாமா போலவே நீங்களும் டிவிட்டரில் என்னை பின் தொடருங்கள் என்பது தான். எப்படி இருக்கிறது!

பிரோக்கின் டிவிட்டர் பக்கம்: https://twitter.com/akilahbrock/

அமெரிக்காவின் ஹாஷ்டேக் அரசியல்

BjrXApfCUAACHeQஹாஷ்டேக் மட்டும் போதுமா? உக்ரைன் மக்கள் பலரும் ஆவேசமாகவும் ஆற்றாமையுடனும் இப்படி தான் கேட்க நினைக்கின்றனர். காரணம் , சர்வதேச விவகாரங்களில் எல்லாம் சம்மன் இல்லாமல் மூக்கை நுழைந்து பஞ்சாயத்து செய்யும் உலகின் பெரியண்ணன் அமெரிக்கா , உக்ரைனின் கிரேமியா விவகாரத்தில் ஒரு ஹாஷ்டேகுடன் தனது பொறுப்பை கைகழுவ பார்த்திருப்பது தான்!

ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சேர்வதா அல்லது ஒரு காலத்து வல்லரசு ரஷ்யாவின் பக்கம் சாய்வதா எனும் பிரச்சனையில் உக்ரைன் பற்றி எரிந்து கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். உக்ரைன் மக்களில் பெரும்பாலானோர் வீதியில் இறங்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த போராட்டத்திற்கு டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் தான் உந்துசக்தியாக இருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க யுக்ரைனின் அங்கமான கிரேமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் சேர்த்து கொள்ள உள்ளது. இதற்காக நடத்தப்பட்ட் பொது வாக்கெடுப்பில் அப்பகுதி மக்கள் ரஷ்யாவுடன் இணைய சம்மதம் தெரிவித்தனர். ஆனால் இது மக்கள் விருப்பமா? ரஷ்யாவின் அரசியலா என்றெல்லாம் பல கேள்விகள் இருக்கின்றன. 

ரஷ்யா இப்போது கிரேமியாவை சேர்த்துக்கொள்ள ராணுவ ரீதியாக முயன்று வருகிறது. ரஷ்யாவின் இந்த முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை அனுமதி அளிக்கவில்லை. கிரேமியாவில் ரஷ்யா அத்துமீறி செயல்படுகிறதா ?எ நும் கேள்விக்கான பதில் இந்த பிரச்சனையில் ஒருவர் எந்த பக்கம் நிற்கிறார் என்பதை பொறுத்தே அமையும். எது எப்படியே ரஷ்யா இதில் உறுதியாக இருக்கிறது. கிரேமியாவுக்காக உக்ரைன் துடிக்கிறது.

இவை பிரச்சனியின் பின்னணியை கோட்டிட்டு காட்ட மட்டுமே . இனி விஷயத்துக்கு வருவோம். உலகில் ஒரு நாடு அத்துமீறி நடக்க முற்பட்டால் அதை தட்டிக்கேட்பது வல்லரசான அமெரிக்காவின் பொறுப்பு இல்லையா? எனவே இந்த பிரச்சனையில் அமெரிக்க என்ன செய்யும் என்று உலகம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தது. அமெரிக்கா இந்த பிரச்சனைக்கு ராஜாங்க ரீதியாக தீர்வு காண முயன்று வருகிறது. அமெரிக்க காங்கிரஸ் உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. 

அமெரிக்க ரஷ்யாவுக்கு வலுவான எச்சரிக்கை விடுக்கும் , இந்த பிரச்ச்னையில் உறுதியான நடவ்டிக்கையை அறிவிக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்க உக்ரைனுக்கு ஆதரவாக டிவிட்டரில் ஒரு பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.  நாங்கள் உக்ரைன் பக்கம் என்று உணர்த்துவதற்காக அமெரிக்கா யுனைடட் பார் உக்ரைன் ( #UnitedForUkraine,) எனும் ஹாஷ்டேகை உருவாக்கியுள்ளது. அமெரிக்க வெளியுறுத்துறை அமைச்சகம் சார்பில் இந்த ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. ]

இந்த ஹாஷ்டேக் மூலம் ஒன்றுபட்ட உகரைனுக்காக குரல் கொடுத்து டிவிட்டரில் அமெரிக்கா ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த பிராச்சாரத்தை துவக்கி வைக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை செய்தி தொடர்பாளர் ஜென் சகி , இந்த ஹாஷ்டேக் எழுதப்பட்ட அட்டையுடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்துடன் டிவிட்டர் செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் பல அரசு அதிகாரிகளும் இவ்வாறே செய்துள்ளனர்.

Bjr4PPZCIAADwfSஇந்த ஹாஷ்டேகிற்கு நல்ல பலன் என்று தான் சொல்ல வேண்டும். முதல் சில மணிநேரங்களிலேயே இந்த ஹாச்டேக் தாங்கி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குறும்பதிவுகள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து வெளியாக கூடும். உகரைன் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று இந்த ஹாஷ்டேக் வாயிலாக வலியுறுத்த

ஒபாமா வெற்றி;டிவிட்டரில் நன்றி தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக ஒபாமா இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்க தேர்தலுக்கே உரிய சிக்கலான தன்மையோடும் குழப்பத்தோடும் வாக்குகள் எண்ணப்பட்டு அத‌னிடையே மாநிலவாரியிலான தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் முக்கிய மாநிலமான ஓஹியொவில் வெற்றி கிடைக்கும் என்ற் சி என் என் தொலைக்காட்சியின் கணிப்பின் அடிப்படையில் ஒபாமா மீண்டும் அதிபராகி இருப்பதாக அறிவிக்கப்பட்டூள்ளது.

அதிகாரபூர்வ முடிவு எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒபாமா தனது மறு வெற்றிக்கு டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார்.

இது உங்களால் தான் சாத்தியமானது,மிக்க நன்றி ,மேலும் நான்கு வருடங்கள் என அவர் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

டிவி பேட்டி பத்திரிக்கை அறிக்கை போன்றவற்றுக்கு முன் ஒபாமா டிவிட்டரில் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அது மட்டும் அல்ல ஒபாமாவின் இந்த குறும்பதிவு முதல் சில நிமிடங்களிலேயே 88 ஆயிரம் முறைக்கு மேல் ரீடிவீட்டாக பகிரப்பட்டுள்ளது.

ஒபாவுக்கு வாழ்த்துக்கள் !

——-

https://twitter.com/BarackObama

எதிர்கட்சிகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலடி!

புதிய திட்டங்கள் அல்லது கொள்கை முடிவுகளுக்கு எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை போடும் போது மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்பது தான் அரசாங்கத்திற்கான சிறந்த வழி. இதற்காக பத்திரிகைகளில் பேட்டி கொடுக்கலாம்.அறிக்கை வெளியிடலாம்.அரசு தொலைக்காட்சி அல்லது வானொலியில் உரை நிகழத்தலாம்.

இந்த பட்டியலில் டிவிட்டரையும் சேர்த்து கொள்ளலாம்.சொல்லப்போனால் மற்ற வழிகளை விட டிவிட்டர் மூலம் மக்கள் மன்றத்தை அணுகுவதே சிறந்ததாக இருக்கும்.இதற்கான உதாரணம் தேவை என்றால் அமெரிக்காவில் வரிச்சலுகை தொடர்பான சர்ச்சையில் ஒபாமா அரசு டிவிட்டரை பயன்படுத்திய விதத்தை குறிப்பிடலாம்.

அமெரிக்கா சில ஆண்டுகளாகவே பொருளாதார பிரச்னைகளால் திணறிக்கொண்டிருக்கிறது.சரிந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முயலும் அதே நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிட ஒபாமா அரசு முயற்சித்து கொன்டிருக்கிறது.சாமான்ய மக்களுக்கு நிவாரணம் அளிக்க கூடிஅய் வகையிலான திட்டங்களையும் செயல்படுத்த முயன்று வருகிறது.

ஆனால் புதிய திட்டங்களை செயல்படுத்துவது அத்தனை எளிதாக இல்லை.பிரச்னைக்கான தீர்வாக இந்த திட்டங்கள் அமைந்திருப்பதாக எதிர்கட்சி ஒப்புக்கொண்டால் தான் அதற்கு செனெட் ஒப்புதல் கிடைக்கும்.இல்லை என்றால் திண்டாட்டம் தான்.

ஒபாமா அறிவித்த வரிச்சலுகை திட்டத்துக்கு இப்படி தான் பிரதான எதிர்கட்சியான குடியரசு கட்சி முட்டுக்கட்டை போட்டது.இந்த வரிச்சலுகை திட்டத்தின் படி அமெரிக்க ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு ஆயிரம் டாலர்கள் சேமிப்பாக அமையும்.ஆண்டுக்கு ஆயிரம் டாலர்கள் என்றால் வாரத்திற்கு 40 டாலர் சேமிப்பு என்று கணக்கு.வெறுத்ட்து போயிருக்கும் அமெரிக்கர்களுக்கு இந்த சேமிப்பு ஆறுதலையும் ஆசுவாசத்தையும் அளிக்கும் என்பது அரசின் நம்பிக்கை.

ஆனால் எதிர்ப்பாளர்களோ வெறும் 40 டாலர்களால் என்ன நிவாரணம் கிடைத்து விட முடியும் என்று இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எதிர்ப்பாளர்களோடு ஒபாமா நிர்வாகத்தினர் தீவிர விவாதம் நடத்தி வருகின்றர்.எதிர்கட்சிகளோடு மல்லுக்கட்டுவது ஒருபுறம் இருக்க இந்த விஷயத்தில் மக்கள் யார் பக்கம் என்பதை உணர்த்துவதே சரியான பதிலடியாக இருக்கும் என்று ஒபாமா ஆலோசகர்கள் நினைத்தனர்.

அதாவது வரிச்சலுகை பயன் தரும் என்று மக்கள் நம்புகின்றனரா என்பதை அறிந்து கொள்ளவும் அதனை எதிர் கட்சிகளுக்கு புரிய வைக்கவும் தீர்மானித்தனர்.

டிவிட்டர் மூலமே மக்களிடம் இந்த கேள்வியை கேட்கவும் முடிவு செய்தனர். உங்களை பொருத்தவரை 40 டாலரின் பொருள் என்ன? எனும் கேள்வியை வெள்ளை மாளிகை டிவிட்டர் கணக்கு மூலம் கேட்டனர்.40 டாலர்களால் என்ன வாங்க எல்லாம் வாங்க முடியும் அல்லது எந்த வகையான பயன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த கேள்வி வெள்ளை மாளிகையின் டிவிட்டர் பின் தொடர்பாளர்கள் முன் வைக்கப்பட்டது.

வெள்ளை மாளிகையின் சமூக ஊடக பொறுப்பாளர் மேகான் பிலிப் இதற்கான குறும்பதிவை வெளியிட்டார்.பின்னர் இதே குறும்பதிவு அதிபர் ஒபாமாவின் டிவிட்டர் கணக்கு மூலமும் வெளியிடப்பட்டது.

வெள்ளை மாளிகை டிவிட்டர் கணக்கிற்கு 26 லட்சம் பின்தொடர்பாளர்களும் ஒபாமா டிவிட்டர் கணக்கிற்கு ஒர் கோடிக்கும் மேல் பின்தொடர்பாளர்களும் இருக்கின்றனர்.

40 டாலரால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை பார்த்ததும் பலரும் அதற்கான தங்கள் பதிலை குறும்பதிவாக வெளியிடத்துவங்கினர்.

40 டாலர் என்பது எனது கணவ்ரின் இரண்டு வார கால மருந்து தேவையை பூர்த்தி செயும் என்று ஒருவர் பதில் அளித்திருந்தார்.இன்னொருவரோ 40 டால்ர் என்பது எங்கள் குடும்பத்துக்கான ஒரு வார கால பட்ஜெட் என்று தெரிவித்திருந்தார்.

மாணவர் ஒருவரோ 40 டாலர் கிடைத்தால் எனது கல்விக்கடனின் சுமைகொஞ்சம் குறையும் என்று எழுதியிருந்தார்.வயதான் பெண்மணி ஒருவர் 40 டாலர் என்பது தனது மாதந்திர மருத்துவ செலவு என தெரிவித்திருந்தார்.

மாதாந்திர மின் கட்டணத்தை செலுத்தலாம்,குழந்தைக்கு பால் பவுடர் வாங்கலாம் என்று நடுத்தர அமெரிக்கர்கள் 40 டாலரின் பயனை தங்கள் நிலையில் இருந்து குறும்பதிவாக வெளியிட்டனர்.

மணிக்கு 2 ஆயிரம் குறும்பதிவுகள் என்னும் வேகத்தில் குறும்பதிவுகள் வெளியாயின.விளைவு டிவிட்டரில் 40 டாலர் என்னும் பதம் பிரபலமாகி பலரது கவனத்தை ஈர்த்தது.அதாவது டிவிட்டர் பதிவுக்கடலில் இந்த பதிவுகள் மேலெழுந்து வந்தன.

நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் இந்த போக்கை கவனித்து இது பற்றி செய்தி வெளியிடவே இந்த விஷயம் மேலும் பிரபலமானது.

இதனிடையே அரசு தரப்பில் இந்த குறும்பதிவுகள் அனைத்தும் திரட்டப்பட்டு டிவிட்டர் போன்ற சேவைகளில் வெளியாகும் கருத்துக்களை திரட்டி வெளியிட பயன்படும் ஸ்டோரிபை தலத்தின் மூலம் ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டன.அந்த பதிவுகள் நடுத்தர மக்களின் குரலாக அமைந்திருந்தன.

40 டாலர் சராசரி அமெரிக்கர்கள் வாழ்கையில் என்ன தாக்கத்தை செலுத்தும் என உணர்த்திய அந்த குறும்பதிவுகள் வரிச்சலுகை விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டிற்கு வலு சேர்ப்பது போல அமைந்திருந்தன.

வரிச்சலுகை பிரச்ச்னையில் அரசுக்கு வெற்றி கிடைக்க இது எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை.ஆனால் எதிர்கட்சிக்கு எதிராக அரசுக்கு கிடைத்த தார்மீக வெற்றியாக கருத்தப்படுகிறது.

அதோடு டிவிட்டரை எப்படி எல்லாம் புதிய வழிகளில் பயன்படுத்தலாம் என்பதற்கான உதாரணமாகவும் கருதப்படுகிறது.

இணையதள முகவரி;http://storify.com/whitehouse/what-does-40dollars-mean-to-you