Tag Archives: p[oem

நல்ல பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி?

1pwgஒரு நல்ல பாஸ்வேர்டு எவராலும் யூகித்து அறிய முடியாததாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் உருவாக்கியவரால் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.இந்த இரண்டு குணாதிசயங்களும் கொண்ட பாஸ்வேர்டை உருவாக்குவது சவால் தான். ஆனால் சாத்தியமில்லாதது இல்லை.

பாதுகாப்பான பாஸ்வேர்டுக்கு பல அம்சங்களை சொல்கின்றனர்.தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்ததாக பாஸ்வேர்டு இருக்க கூடாது.அகராதி சொற்கள் கூடவே கூடாது.பொதுவாக பலரும் பயன்படுத்தும் பதங்களை சுத்தமாக‌ தவிர்த்துவிட வேண்டும்.இப்படி நிபந்தனை போன்ற பல அம்சங்கள் வலியுறுத்தப்படுகின்றன.

இவை போதாதென்று பாஸ்வேர்டில் எண்கள் இருக்க வேண்டும்,பெரிய எழுத்து சின்ன எழுத்து வேறுபாடு இருக்க வேண்டும் என்று அவற்றை சிக்கலானதாக மாற்றவும் வலியுறுத்துகின்றனர். பாஸ்வேர்டுகளை யூகித்தறிய முயலும் தாக்காளர்களிடம் இருந்து தப்பிக்க இவையெல்லாம் அவசியம்.

எல்லாம் சரி,ஆனால் இத்தகைய சிக்கலான பாஸ்வேர்டை நினைவில் கொள்வது எப்படி? பாஸ்வேர்டு ஆலோசனையில் அவற்றை காகிதத்தில் எழுதியும் வைத்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.இது மட்டுமா எல்லா இணைய சேவைகளுக்கும் ஒரே பாஸ்வேர்டு கூடாது,வெவ்வேறு பாஸ்வேர்டு தேவை என்று சொல்லப்படுவதும் ஏற்கக்கூடியதாகவே இருக்கிறது.ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட சிக்கலான பாஸ்வேர்டுகளை மனப்பாடம் செய்து கொள்வது என்றால் படிக்காத மாணவனுக்கு தேர்வை நினைத்து உண்டாகும் அச்சம் அல்லாவா ஏற்பட்டு விடுகிறது.

ஆனால் இந்த அலவுக்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பிற்காக அஞ்சி நடுங்க வேண்டியதில்லை. பாஸ்வேர்டையும் எளிமையாக்காமல் அதே நேரத்தில் அதன் பாதுகாப்பு அம்சத்தியும் நீர்த்து போகச்செய்யாமல் நல்ல பாஸ்வேர்டை அமைத்து கொள்ள எளிய வழி இருக்கிறது.

பாஸ்வேர்டை நேரடியாக தேர்வு செய்யாமல் அடிப்படையாக ஒரு சொல் அல்லது சொற்றடரை வைத்துக்கொண்டு அதன் மீது மாற்றங்களை செய்வதன் மூலம் பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளலாம். உதாரணத்திற்கு சாலிட் எனும் ஆங்கில சொல் அடிப்படை பாஸ்வேர்டு சொல் என  வைத்துக்கொள்வோம். இப்போது இதில் உள்ள ஆங்கில் எழுத்துக்களை எல்லாம் எண்களாக மாற்றி அதை பாஸ்வேர்டாக்கி கொள்ளலாம்.அல்லது முதல் மற்றும் கடைசி எழுத்தை எண்ணாக மாற்றலாம். அதே போல அந்த சொல்லை அப்படியே தலைக்கீழாக எழுதி வைத்துக்கொண்டால் அதுவும் நல்ல பாஸ்வேர்டாக இருக்கும்.

அடிப்படையான சொல் நினைவில் நிற்கும் என்பதால் அதில் செய்த மாற்றங்களை மட்டும் வைத்துக்கொண்டு பாஸ்வேர்டை மறக்காமல் இருக்கலாம். கொஞ்சம் கற்பனையை பயன்படுத்தி படைப்பாற்றலோடு மாற்றங்களை செய்தால் மற்றவர்களால யூகிக்க முடியாத பாஸ்வேர்டை எளிதாக அமைத்துக்கொள்ளலாம்.

இதே யுக்தியை இன்னும் ஒரு படி மேலே சென்று பயன்படுத்தலாம். அடிப்படை சொல்லுக்கு பதிலாக ஒரு சொற்றடரை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த சொற்றொடர் நீங்கள் உருவாக்கிய வாசக‌மாகவோ கவிதை வரியாக‌வோ இருக்கலாம். இந்த சொற்றொடரில் உள்ள சொற்களின் முதல் எழுத்தை மட்டும் ஒன்றாக சேர்த்தால் வலுவான பாஸ்வேர்டு தயாராகி விடும்.இந்த சொற்றொடரில் எண்கள் இடம்பெற்றால் இன்னும் விஷேசம்.

இந்த ஒரு வாசகத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொரு இணைய சேவைக்கும் ஏற்ப சின்ன மாற்றத்தை செய்து வெவ்வேறு பாஸ்வேர்டை உ

பிடிக்காத சொற்களை பிலாக் செய்யும் சேவை.

கவிஞர் விக்கிரமாதித்யன் இண்டெர்நெட் மீதோ தொழில்நுட்பம் மீதோ அதிக ஆர்வம் கொண்டவர் இல்லை.ஆனால் கூகுல் குரோம் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியை பார்க்கும் போது அவர் தான் நினைவுக்கு வருகிறார்.அதாவது அவரது கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

‘அருவியை நீர்விழிச்சி என்று யாரேனும் சொல்லி விட்டால் மனம் பதறுகிறது’என்பது தான் அந்த கவிதை.விக்கிரமாதித்யனின் கவிதைகளில் தமிரபரணியின் சலசலப்பையும் குற்றாலத்தின் சாரலையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

அலங்கார பூச்சு இல்லாமல் அவர் பயன்படுத்தும் எளிய சொற்களில் கவிதையின் உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தி விடுவார்.இயற்கை மற்றும் மண் மனத்தின் தன்மைகளில் அவரது வரிகளில் காணலாம்.

அதனால் தான் அருவி என்று சொல்லும் போது கிடைக்க கூடிய அனுபவம் நீர்விழிச்சி என்று சொல்லும் போது கிடைக்காமல் போவதாக அவர் பதறுவதை உணரலாம்.

அருவி என்றால் குற்றாலம் தான்.குற்றாலத்தை அருவி என்று தான் சொல்ல வேண்டும்.

கவிஞர் என்றில்லை,எல்லோருக்குமே சொற்களின் பிரயோகத்திலும் பயன்பாட்டிலும் விறுப்பு வெறுப்பு உண்டு.

குறிப்பிட்ட சொற்களை பயன்படுத்துவதையோ ஏன் பார்ப்பதை கூட பலர் வெறுக்கலாம்.சில சொற்கள் உச்சரிக்கப்படும் விதம் அல்லது அவற்றுக்கான எழுத்துக்கள் எழுதப்படுவதை பார்த்து சிலர் ஆவேசப்படலாம்.உதாரண‌த்திற்கு ஆங்கிலத்தில் கலர் எனும் சொல்லை எழுதும் போது நடுவே வரவேண்டிய யு எழுத்தை விடப்படுவது ஆங்கில தூய்மை விரும்பிகளுக்கு அதிருப்தி தரலாம்.

இப்படி எண்ணற்ற உதாரணங்களை சொல்லலாம்.

இது போல எரிச்சல் தரும் சொற்களை இணையத்தில் உலாவும் போது கண்ணில் படக்கூடாது என நீங்கள் நினைத்தால் அத்தகைய சொற்களை அப்படியே தடுத்து நிறுத்தி அதற்கான மாற்றும் சொல்லை தோன்றச்செய்யும் வசதியை குரோம் பிரவுசர் மூலம் கூகுல் வழங்குகிறது.

இதற்காக இன் மை வேர்ட்ஸ் என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள பிரவுசர் நீட்சி வசதியை டவுண்லோடு செய்து கொண்டால் பார்க விரும்பாத சொற்களை அதில் குறிப்பிட்டு அவற்றை தடுக்க கேட்டுக்கொள்ளலாம்.அதன் பிறகு அந்த சொற்கள் எங்கே தோன்றினாலும் அவை மறைக்கப்பட்டு அதற்கு பதிலாக நீங்கள் குறிப்பிட்ட சொல்லே தோன்றும்.

எடுத்துகாட்டாக பேஸ்புக் என்ற சொல் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று வைத்து கொள்ளுங்கள் அதன் பிறகு பேஸ்புக் தொடர்பான கட்டுரை அல்லது செய்திகளில் அத‌ற்கு பதிலாக புக்பேஸ் என்ற வார்த்தை வருமாறு கூட செய்து கொள்ளலாம்.இவ்வளவு ஏன் கூகுல் பெயரை கூட மாற்றிக்கொள்ளலாம்.

ஆங்கில மொழிக்கான வசதி தான் என்றாலும் தமிழிலும் இது போன்ற வ‌சதி இருந்தால் நீர்விழிச்சி எல்லாம் அருவியாகட்டும்.

இணையதள முகவரி;https://chrome.google.com/webstore/detail/in-my-words/ifallpipodahhpbnemkhiddofdkhlekg