Tag Archives: sound

புத்தகங்களை தெரிந்து கொள்ள புதிய வழி

tumblr_onp12eUadT1qaouh8o1_500புதிதாக படிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பெஸ்ட் செல்லர் பட்டியல், வல்லுனர்களின் பரிந்துரை என நீளும் இந்த வழிகளில் கொஞ்சம் சுவாரஸ்யமான புதிய வழியாக கவர்ஸ்பை தளம் அறிமுகமாகியுள்ளது.

டம்ப்ளர் வலைப்பதிவு சேவையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் வாயிலாக புதிய புத்தகங்களை அவற்றின் முகப்பு பக்கங்களாக அறிமுகம் செய்து கொள்ளலாம். இந்த புத்தகங்கள் எல்லாம் எப்படி தேர்வு செய்யப்படுகின்றன தெரியுமா? எல்லாமே புத்தக புழுக்கள் பொது இடங்களில் கையில் வைத்திருக்கும் புத்தகங்கள்.  ஆம், பொது போக்குவரத்து மற்றும் பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் புத்தக புழுக்கள் கையில் வைத்திருக்கும் புத்தகங்களை கண்டறிந்து அவற்றின் முகப்பு படம் இந்த தளத்தில் வெளியிடப்படுகிறது.

புத்தக அட்டைப்படம் மற்றும் அவை கண்டெடுக்கப்பட்ட இடம் மட்டுமே இடம்பெறுகிறது. புத்தகம் தொடர்பான விமர்சன குறிப்புகள் எல்லாம் கிடையாது.

ஆக, ஒருவிதத்தில் வாசகர்கள் படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களை தெரிந்து கொள்ளலாம். இவை இயல்பான பரிந்துரையாகவும் அமையும்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துவங்கி மற்ற நகரங்களுக்கும் விரிவாகி இருக்கிறது. இந்த வரிசையில் தில்லியும், மும்பையும், நம்ம சென்னையும் இடம்பெறும் வாய்ப்புள்ளதா என தெரியவில்லை.

இணை முகவரி: http://coverspy.tumblr.com/

 

செயலி புதிது; ஒலிகளை கேட்க உதவும் செயலி

இசை கேட்பது மன அமைதிக்கு உதவுவது போலவே, விரும்பமான ஒலிகளை பின்னணில் கேட்டுக்கொண்டிருப்பதும் மனநிலை மேம்பட உதவும். மழை பெய்து கொண்டிருக்கும் ஓசை, காற்று வீசும் ஒலி ஆகியவற்றை பின்னணியில் கேட்டுக்கொண்டிருந்தால் மன ஒரு நிலைப்படும். பணியில் கவனச்சிதறலை தவிர்ப்பதில் துவங்கி, இரவு தூக்கம் வரவைத்துக்கொள்வது வரை பலவற்றுக்கு இப்படி பின்னணி ஒலிகளை பயன்படுத்தலாம்.

இத்தகைய ஒலிகளை கேட்டு ரசிக்க வழி செய்யும் இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன. இந்த வரிசையில் ஏ சாப்ட் மர்மர் செயிலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் மழை, இடியோசை, காபி ஷாப் சத்தம், பறவைகள் கீதம் என பலவித ஒலிகளை கேட்கும் வகையில் அமைத்துக்கொள்ளலாம். ஒலிகளை கலந்து கேட்கும் வசதியும் இருக்கிறது. ஒலிகளுக்கான நேரத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். ஒலிகளை சமூக ஊடகம் மூலம் நட்பு வட்டத்தில் பகிரவும் செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு: http://asoftmurmur.com/

 

——-

இசை கேட்கும் இணையதளம்

indexஇணையத்தில் உலாவும் போதும் சரி, கம்ப்யூட்டரில் பணியில் ஆழ்ந்திருக்கும் போதும் சரி, பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் இசையை கேட்டக்கொண்டே இருப்பது இனிமையான அனுபவம் தான். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால், ஃபோகஸ்மியூசிக்.எப்.எம் இணையதளம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
ஏனெனில் இது இசை கேட்கும் இணைதளமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் உள்ள மியூசிக் பிளேயரை கிளிக் செய்தால் போதும் மேற்கத்திய இசை பாடல் ஒலிக்கத்துவங்கும். வரிசையாக பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். நாமும் கேட்டு ரசித்தபடி நமது வேலையில் மூழ்கி இருக்கலாம். எப்போதாவது வேறு பாடல் தேவை எனில், அடுத்த பாடலுக்கான பட்டனை கிளிக் செய்து கொள்ளலாம்.

பாடல்களையோ அதன் வகைகளையோ தேர்வு செய்யும் அவசியம் இல்லாமல் தொடர்ந்து இசை மழையில் நனைய இந்த தளம் வழி செய்கிறது.

இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள பாடல்கள் அனைத்தும், பணியின் போது கவனத்தை அதிகரித்து செயல்திறனை மேம்படுத்தக்கூடிய ரகத்தை சேர்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சேவையின் எளிமை கவர்ந்திழுக்கிறது. ஒரு கிளிக்கில் இசையமான சூழலில் ஆழ்ந்துவிடலாம்.
focus
பாப் இசையில் ஆர்வம் என்றால் இதே போல இன்னும் சில அருமையான இணையதளங்கள் இருக்கின்றன. கன்சோல்.எப்.எப் இணையதளம் மனதுக்கு ஆறுதல் அளிக்க கூடிய பாடல்களை வரிசையாக கேட்கச்செய்கிறது. இதன் முகப்பு பக்கத்தில் வரிசையாக பாடல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்த பாடலை வேண்டுமானாலும் கிளிக் செய்து கேட்டு ரசிக்கலாம். அருகிலேயே பிளேயர் இருப்பதால் கிளிக் செய்தவுடன் பாடல் ஒலிக்கத்துவங்கி விடுகிறது. பாடல்கள் அனைத்தும் சவுண்ட் கிளவுட் சேவையில் இருந்து தேர்வு செய்யப்படுபவை.

பிரைன்.எப்.எம் தளமும் இப்படி இதம் அளிக்கும் பாடல்களை கேட்க வழி செய்கிறது. செயற்கை அறிவு மூலம் தேர்வு செய்யப்பட்ட பாடல்களை வழங்குவதாக இந்த தளம் தெரிவிக்கிறது. பத்து நிமிடம் கேட்டால் போதும் உங்கள் மனச்சோர்வு எல்லாம் மாயமாகிவிடும் என்கிறது இந்த தளம். பாடல்கள் தேர்வு செய்யப்படும் விதம் பற்றி விரிவான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி:http://focusmusic.fm/

2.http://console.fm/
3.https://www.brain.fm/

பாட்டு (போட்டி) போட வா?அழைக்கும் இணையதளம்!


எதையும் வெளியிடுவதை இணையம் எளிதாக்கி இருக்கிறது.கதை கவிதையாகட்டும்,ஆடல் பாடலாகட்டும் இணையத்தில் அவற்றை வெளியிட எண்ணற்ற வழிகள் இருக்கின்றன.அதற்கான தளங்கள் இருக்கின்றன,வலைப்பின்னல்கள் இருக்கின்றன!

யூசவுன்ட் தளமும் இந்த வகையை சேர்ந்தது தான்.பாடுவதில் ஆர்வமும் திறனும் கொண்டவர்கள் தங்கள் படைப்புகளை அதாவது பாடல்களை வெளியிட்டு தாங்களும் பாடகர்களாக இந்த தளம் உதவுகிறது.

யார் வேண்டுமானாலும் இந்த தளத்தின் மூலம் பாடகர்களாக உலகின் முன் அறிமுகமாகலாம் என்றாலும் இந்த தளத்தில் என்ன சிறப்பு என்றால் இதில் அரங்கேற்றம் காண்பதற்கு முன் போட்டியில் பங்கேற்று ஜெயித்தாக வேண்டும்.

ஆம் பாடகர்கள் முதலில் இந்த தளத்தில் தங்கள் பாடல்களை சமர்பித்த பிறகு இணையவாசிகள் அந்த பாடல் மீது வாக்களிப்பார்கள்.எந்த பாடகருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவரது பாடல் இந்த தளத்தின் வாயிலாக வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்படும்.

இசைத்தட்டு நிறுவனம் வெளியிடுவது போலவே இந்த தளமும் புதிய பாடகர்களின் பாடலை வெளியிட்டு அறிமுகம் செய்கிறது.ஆனால் வெளியீட்டு வாய்ப்பை பெற இசைத்தட்டு நிறுவனத்தின் தயவோ கடைக்கண் பார்வையோ தேவையில்லை,இணையவாசிகளின் ஆதரவு இருந்தால் போதும்.

அந்த வகையில் இளம் பாடகர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி கொள்ளும் வாய்ப்பை பெறுவதோடு அந்த திறமையை சீர் தூக்கி பார்த்து கொள்ளும் வாய்ப்பையும் பெறுகின்ற‌னர்.

இசைத்த‌ட்டுக்கள் வெளியிடப்படும் முறையையே தலைகீழாக பிரட்டி போடுவதாக இந்த தளம் பெருமை பட்டு கொள்கிற‌து.ஒரு விதத்தில் இது உணமை தான்.பாடல் வெளியிடும் வாய்ப்பை திறமை சார்ந்ததாக மாற்றி அனைவருக்கும் இசை உலகின் கதவுகளை திற‌ந்து விட்டுள்ளது இந்த தளம்.

பாடல்களை சவுன்ட் கிலவுட் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.இங்கு வெளியிட்ட பிறகு பேஸ்புக்,டிவிட்டர் மூலமும் பகிர்ந்து கொண்டு ஆதரவு திரட்டலாம்.

இணையதள முகவரி;http://www.yousound.dj/