Tag Archives: www

இணையம் எங்கே போகிறது? சில கேள்விகள், சில கவலைகள்!

1000x-1நாம் அறிந்த இணையத்திற்கு 28 வயதாகிறது. 1989 ம் ஆண்டில் தான் ’டிம் பெர்னர்ஸ் லீ’, இணையத்தை பிரவுசர் மூலம் அணுக கூடிய ’வேர்ல்டு வைடு வெப்’ எனப்படும் வைய விரிவு வலைக்கான கருத்தாக்கத்தை முன் வைத்தார். லீயின் திட்டம் ஏற்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு மெல்ல பரவலாகி, இன்று இன்றியமையதாதாகவும் மாறிவிட்டது.

இணையத்திற்கும், வலைக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதும், வலை உருவாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே இணையம் எனும் மாபெரும் வலைப்பின்னலின் வலைப்பின்னல் உருவாகிவிட்டது என்பதை எல்லாம் கூட விட்டுவிடலாம். ஏனெனில், இணையம் என்றாலும் சரி, வலை என்றாலும் சரி நடைமுறையில் நாம் வலையையே புரிந்து கொள்கிறோம். இதில் தவறு ஏதும் இல்லை.

ஆனால், இந்த 28 ஆண்டுகளில் இணையம் எப்படி வளர்ந்திருக்கிறது என்பதும், இனி எப்படி இருக்கப்போகிறது என்பதும் தான் இப்போது முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஏனெனில் வலைவை உருவாக்கிய பிரம்மாவான டிம் பெர்னஸ் லீயே இது குறித்து கவலை தெரிவித்திருக்கிறார். அவரது உருவாக்கமான வலைக்கு 28 வயதாவதை முன்னிட்டு அளித்துள்ள பேட்டியில், டிம் பெர்னர்ஸ் லீ, ’ஏன் தான் வலையை கண்டுபிடித்தேனோ என்று நொந்துக்கொள்ளவில்லை என்றாலும், வலையின் எதிர்கால போக்கு குறித்து ஆதங்கம் தெரிவித்திருக்கிறார்.

ஃபேக் நியூஸ் எனப்படும் பொய்ச்செய்தி, சார்புத்தன்மை, பிரச்சார ஆயுதமாக பயன்படுவது போன்ற பிரச்சனைகளை இணையத்தை உலுக்கி வரும் நிலையில் வலையை உருவாக்கிய பிரம்மா லீயும் இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி இணையத்தின் எதிர்காலம் பற்றி கவலை தெரிவித்திருப்பதை நமக்கான எச்சரிக்கை மணி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இணையத்தில் அதிகம் பேசப்படும் ஏ.ஐ என குறிப்பிடப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்தும் அவர் கவலை தெரிவித்திருக்கிறார்.

அதற்கான இணையம் மீது லீ அவநம்பிக்கை கொண்டுவிடவில்லை. ’நான் இன்னமும் நம்பிக்கைவாதி தான், ஆனால், முகத்திற்கு நேராக கோரப்புயல் வீசிக்கொண்டிருக்கும் நிலையில் மலை உச்சியின் மீது வேலியை பிடித்து தொங்கி கொண்டிருக்கும் நம்பிக்கைவாதி’ என அவர் கூறியிருக்கிறார். ’ நாம் பல்லை கடித்துக்கொண்டு உறுதி காட்டி, வேலியில் தொங்கியபடி இருக்க வேண்டும் என்றும், இணையம் நமக்கு அற்புதமான விஷயங்களை கொண்டு வரும் என கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிடக்கூடாது’ என்றும் அவர் கூறியிருக்கிறார்.

’லீ’யை இப்படி பேச வைத்திருக்கும் பிரச்சனைகள் குறித்து இணைய வல்லுனர்களும், இணைய ஆர்வலர்களும் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். இவை நம்மையும் பாதிப்பவை என்பதால் நமக்கென்ன போச்சு என்று அலட்சியமாக இருப்பதற்கில்லை.

’லீ” சுட்டிக்காட்டும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பொய்ச்செய்தியின் தாக்கம். பொய்ச்செய்தி எப்படி பரவுகிறது என்பதை இணையவாசிகள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் அறிந்திருக்கலாம். ஆனால் வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகளை எல்லாம் விட்டுவிடுங்கள். அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, இணையத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொய்ச்செய்தியின் தோற்றமும், நோக்கமும், தாக்கமும் பற்றி மிக தீவிரமாக அலசிக்கொண்டிருக்கின்றனர். ஒரு பெரிய நாட்டின் தேர்தலிலேயே தலையிட்டு விளையாட முடியும் அளவுக்கு இருக்கிறது என்றால் பொய்ச்செய்தி எத்தனை பெரிய பிரச்சனை என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையும், விவாதமும் தீவிரமாகி வரும் நிலையில், இந்த செய்திகள் பரவுவதற்கான முக்கிய வாகனங்களாக இருந்த பேஸ்புக்கும், கூகுளும் இன்னும் பிற இணைய நிறுவனங்களும் இதற்கான மாற்று மருந்து முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த பிரச்சனையை புரிந்து கொள்ள இன்னும் நுட்பமான அலசல் தேவை. ஆனால் இப்போதைக்கு ‘லீ’ சொல்லும் முக்கியமான கருத்தை கவனிப்போம். இணையத்தை இயக்கி கொண்டிருக்கும் அமைப்பு தோற்று வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார். அமைப்பு என இங்கே அவர் குறிப்பிடுவது, இணைய நிறுவனங்களுக்கு லாபத்தை ஈட்டித்தரும் விளம்பர உத்திகளை தான். கீவேர்டு எனப்படும் குறிச்சொற்கள் மூலம் தூண்டிலிட்டு இணையவாசிகளை கவரும் விதத்தில் தகவல்களை முன்வைத்து கூகுளும், பேஸ்புக்கும் வருமானத்தை அள்ளுகின்றன. இந்த சூட்சமங்களை சராசரி இணையவாசிகள் அறியாமல் இருக்கும் நிலையில், விஷமிகளும், கில்லாடிகளும் இந்த போக்கை நன்றாக பயன்படுத்தி காசு பார்க்கின்றனர். பொய்ச்செய்தி விவகாரத்தில் இது தான் நடந்தது. எங்கோ ஐரோப்பாவில் மசிடோனியா எனும் நாட்டில் உள்ள கில்லாடிகள், அமெரிக்க தேர்தல் தொடர்பான பொய்ச்செய்திகளை உருவாக்கி உலாவவிட்டு, அவற்றை இணையவாசிகள் ஓயாமல் கிளிக் செய்து படித்து மேலும் பரவச்செய்த போது, கிளிக் வருமானத்தை குவித்தனர்.

இணைய விளம்பர உத்தி இப்படி செயல்படுவது உண்மையையும், ஜனநாயகத்தையும் முன்னிறுத்தும் மனிதகுலத்தின் நோக்கத்திற்கு உதவவில்லை என ‘லீ’ கூறியிருக்கிறார். இணையவாசிகளை குறி வைத்து வெளியிடப்படும் இருண்ட இலக்கு விளம்பரங்கள் நம்மை ஏமாற்றிவிட்டு பின் மறைந்துவிடுவது ஜனநாயகம் அல்ல என அவர் கூறியிருக்கிறார்.

யார் கவனம் பெறுகின்றனர் எனும் தேர்வை லாப நோக்கம் கொண்ட பெரிய நிறுவனங்களின் கைகளில் விடுவது சரியானது அல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார். கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இதை வேண்டுமென்றே செய்யவில்லை என்றாலும், வர்த்தக நோக்கத்திற்காக வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயல்பட்டுள்ளன என இதே விஷயம் தொடர்பாக அளித்துள்ள இன்னொரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

இந்த நிறுவனங்கள் விளைவுகள் பற்றி எல்லாம் யோசிக்காமல் உருவாக்கிய விளம்பர வருவாய் வழிகள் தான் இன்று முக்கிய பிரச்சனையாக உருவாகி இணையத்தின் நம்பகத்தன்மைக்கு வேட்டு வைத்திருப்பதாகவும் ’லீ’ ஆதங்கப்படுவதை அவரது பதில்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவு மூலம் வெளியிடப்படும் விளம்பரங்கள் மிக அழகாக இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து அவர்களை திசை திருப்பவதாகவும் அவர் ஆதங்கப்படுகிறார்.

’லீ’ சொல்வதை எல்லாம் பார்த்தால் இணையம் பயணிக்கும் திசை அத்தனை ஆரோக்கியமாக இல்லை என உணர்ந்து கொள்ளலாம். கூடவே இணையத்தின் எதிர்காலம் பற்றியும் கவலையாக இருக்கலாம். ஆனால், நிலைமை இப்போதும் கூட கை மீறிவிடவில்லை என்பதே அவரது கருத்தாக இருக்கிறது. இன்னும் கூட இந்த நிலையை மாற்றலாம் என்றாலும், அதற்கு முதலில் நாம் தற்போதைய நிலைக்கு சவால்விட வேண்டும் என்கிறார்.

இணையத்தில் மேற்கொள்ளப்படும் விளம்பர உத்தி போன்றவற்றையும், இணைய பழக்கங்களை கண்காணிப்பது, பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் போன்றவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்வதை விட இவற்றை கேள்வி கேட்க வேண்டும் என்கிறார். இணையம் இப்படி தான் இருக்கிறது என சமரசம் செய்து கொள்ளாமல், இணையம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டியது கட்டாயமாகி இருக்கிறது என்கிறார் ‘லீ”. அந்த பொறுப்பு நமக்கும் இருக்கிறது தானே!

 

டிம் பெர்னர்ஸ் லீ பேட்டி; 1. https://www.theguardian.com/technology/2017/nov/15/tim-berners-lee-world-wide-web-net-neutrality

  1. https://www.bloomberg.com/news/articles/2017-11-13/father-of-the-web-confronts-his-creation-in-the-era-of-fake-news

இண்டெர்நெட்டை கண்டுபடித்தது யார்?

200px-Algoretestifyingஇண்டெர்நெட் ஒரு தாயில்லா குழந்தை. அதாவது இண்டெர்நெட் எந்த ஒரு தனிநபராலோ , அல்லது எந்த ஒரு குழுவாலோ கண்டுபடிக்கப்படவில்லை. இண்டெர்நெட் கூட்டு முயற்சியின் பலன். ஆனால் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தது நான் தான் என்று அமெரிக்க அரசியல் தலைவர் ஒருவர் மார் தட்டி கொண்டது பற்றி உங்களுக்கு தெரியுமா? இதற்காக அவர் இணையத்தில் அவப்போது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது உங்களுக்கு தெரியுமா? இந்த இரண்டுமே தவறானது என்பது தெரியுமா?

இவற்றின் பின்னே உள்ள உண்மையை தெரிந்து கொள்வதன் மூலம் கொஞ்சம் இணைய வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

இண்டெர்நெட்டை கண்டுபிடித்ததாக சொந்தம் கொண்டாடியதாக சொல்லப்படும் அந்த அமெரிக்க தலைவர் முன்னாள் துணை அதிபர் அல்கோர். யாருமே கண்டுபிடித்திராத இண்டெர்நெட்டை நான் தான் கண்டுபிடித்தேன் என்று சொன்னால் கைகொட்டி சிரிக்க மாட்டார்களா? அதனால் தான் அல்கோர் இப்படி கூறியது  தொடர்பாக இணையத்தில் நிறைய நகைச்சுவை துணுக்குகள் உண்டு.

ஆனால் அல்கோர் அப்படி ஒருபோதும் கூறியது இல்லை . இண்டெர்நெட் உருவாக்கத்தில் தனது பங்களிப்பு பற்றி அவர் தெரிவித்த கருத்துக்களே இப்படி தவறுதலாக மேற்கோள் காட்டப்பட்டு மீண்டும் மீண்டும் தவறாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த தகவலை ஆண்ட்ரூ பிலம் தான் எழுதியுள்ள , புதிய புத்தகமான Tubes: A Journey to the Center of the Internet -ல் தெளிவு படுத்தியுள்ளார்.

அல்கோரை இண்டெர்நெட்டை கண்டுபிடிக்கவில்லை என்றாலும், தற்போது நான் பயன்படுத்தும் வகையில் இண்டெர்நெட் உருவானதில் அவருக்கு முக்கிய பங்குண்டு. 1991ல், அதாவது வைய விரிவு வலை உருவாக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு , இண்டெர்நெட்டை அதன் கல்வி நிறுவன வேர்களில் இருந்து விடுவித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான முக்கிய சட்ட மசோதாவை செனட் உறுப்பினராக இருந்த அல்கோர் கொண்டு வந்தார். இந்த மசோதா கோர் பில் என்றே குறிப்பிடப்பட்டது. இந்த மசோதா பற்றி அல்கோர் கூறிய கருத்துக்கள் தான் தவறான மேற்கோளின் விளைவாக , இண்டெர்நெட்டை கண்டுபிடித்ததாக கூறப்பட்டு விட்டது.

இதை தான் ஆண்ட்ரு பிலம் தனது புத்தகத்தில் தெளிவாக்கியுள்ளார்.51KAE1XsOwL._SY344_PJlook-inside-v2,TopRight,1,0_SH20_BO1,204,203,200_

ஆனால் உண்மையிலேயே அல்கோருக்கு இணையம் உருவாகிய விதத்தில் முக்கிய பங்குண்டு என்பதை வின்செண்ட் பெர்பே அங்கீகரித்துள்ளார். செர்ப் வேறு யாருமல்ல இண்டெர்நெட்டின் தந்தை என்று போற்றப்படுபவர். இண்டெர்நெட்டின் அடைப்படை கட்டுமானத்தை உருவாக்கியதற்காக இப்படி பாராட்டப்படுபவர் செர்ப்.” இண்டெர்நெட்டின் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு அதன் வளர்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உதவிய முதல் அரசியல் தலைவர்” என்று அல்கோரை செர்ப பாராட்டியுள்ளார். எங்களுக்கு தெரிந்த வரை வேறு எந்த அரசியல் தலைவரும் இணைய்த்தின் வளர்ச்சிக்கு இந்த அளவு பங்காற்றியதில்லை என்றும் அல்கோர் பற்றி அவர் கூறியுள்ளார்.

இண்டெர்நெட் வளர்ச்சிக்கும் ஆதரவு தெரிவித்ததோடு அது அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட வழி வகுத்ததாகவும் அல்கோர் பர்றி அவர் கூறியுள்ளார். செர்ப் பாராட்டுரையை இங்கே விரிவாக படிக்கலாம்.;
நிற்க ஸ்னோப்ஸ்.காம் என்று ஒரு இணையதளம் இருக்கிறது. இணையத்தில் உலாவுhttp://web.eecs.umich.edu/~fessler/misc/funny/gore,net.txtம் கட்டுகதைகளுக்கு பின்னே உள்ள உண்மைய விளக்கும் தளம் இது. பர