வலை 3.0 – கொரோனா சூழலில் நல்ல செய்திகளால் ஈர்க்கும் இணையதளம்!

goodஉலகம் எப்போதெல்லாம்  நெருக்கடிக்கு உள்ளாகிறதோ, அப்போதெல்லாம் அந்த தளம் கூடுதலாக கவனத்தை ஈர்க்கும். ஆறுதல் தரும், ஊக்கம் அளிக்கும். நம்பிக்கை மின்னச்செய்யும். மற்ற நேரங்களிலும், அந்த தளம் மாறுவதில்லை. எப்போதும் அது நம்பிக்கை அளிக்கும் நல்ல செய்திகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. நல்ல செய்திகளுக்கான ’குட் நியூஸ் நெட்வொர்க்’ ( Good News Network ) தளம் தான் அது.

செய்திகளை தேர்வு செய்வதற்கும், வெளியிடுவதற்கும், வாசிப்பதற்கும் வழக்கமாக கொள்ளப்படும் விதிமுறைகளுக்கும், பழக்கங்களுக்கும் முற்றிலும் மாறுபட்ட முறையில் அமைந்திருக்கும் இணையதளம் இது. அதிகம் வாசிக்கப்படும் செய்திகளில் கவனம் செலுத்தாமல், அதிகம் வாசிக்கப்பட வேண்டும் என கருதப்படும் செய்திகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் செய்தி தளமாக செயல்பட்டு வருகிறது.

அதாவது, ஏதேனும் ஒரு விதத்தில் ஊக்கம் தரக்கூடிய நல்ல செய்திகளை வெளியிடுவதை முக்கிய நோக்கமாக கொண்டு ’குட் நியூஸ் நெட்வொர்க்’ தளம் செயல்பட்டு வருகிறது.

பொதுவாக, செய்தி உலகம் பரபரப்பின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறது. பரபரப்புக்கு தீனி போட்டும் சூடான செய்திகளே அதிகம் கவனத்தை ஈர்க்கின்றன. இந்த வகை செய்திகளே அதிகம் வெளியாகின்றன. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, பரபரப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் தாக்குதல், ஊழல், மோதல், சர்ச்சை போன்ற அம்சங்கள் கொண்ட செய்திகளே அதிகம் வெளியாகின்றன. இவ்வகை செய்திகளே அதிகம் வாசிக்கப்படுகின்றன.

நாளிதழ்களின் இந்த பாரம்பரித்தை செய்தி தளங்களும் தவறாமல் பின்பற்றுகின்றன. இணையத்தின் தாக்கம், செய்திகள் வெளியிடப்படும் விதத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தாலும், எது செய்தியாக கருதப்படும் எனும் ஆதார அம்சத்தில் எந்த மாற்றமும் இல்லை. பரபரப்பே இன்னும் கோலோச்சுகிறது.

இணைய போக்குவரத்தை அலசி ஆராய்ந்து, வாசகர்களால் அதிகம் விரும்பி படிக்கப்படும் செய்தி வகைகளை சுட்டிக்காட்டும் டிரெண்டிங் செய்தி உள்ளிட்ட குறிப்புகளும், அதிகம் நாடப்படும் செய்தி வகைகள் மேலும் புதிய செய்திகள் குவியவே வழி செய்கின்றன.

இந்த போக்கில் இருந்து மாறுபட்ட தளமாக குட் நியூஸ் நெட்வொர்க் இணையதளம் உருவானது.

அதிகம் நாடப்படும் செய்திகளுக்கு உரித்தான அம்சங்களில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, மனதுக்கு ஊக்கம் அளிக்கும் நல்ல செய்திகளை தேடிப்பிடித்து வெளியிடுவதை குட் நியூஸ் நெட்வொர்க் முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது.

செய்திகள் என்றாலே பரபரப்பும், எதிர்மறை அம்சங்களையும் தான் கொண்டிருக்க வேண்டுமா என்ன என்பது வாசக மனங்களில் இயல்பாக எழும் கேள்வி தான். உலகில் நல்ல விஷயங்களே நடப்பது இல்லையா. அத்தகைய செய்திகளை வெளியிட்டால் என்ன எனும் கேள்வியும் பலருக்கு எழுவது இயல்பு.

இதை ஊடகத்துறையினரும் அறியாமல் இல்லை. ஆனால் ’நல்ல செய்திகள் விற்பனையாவதில்லை’ எனும் கருத்தாக்கம் குரல் வலையை நெறிப்பதால், ஊடகங்கள் பெரும்பாலும் இரத்தக்களறி வகை செய்திகளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கின்றன.

எல்லோருமே இப்படி நினைத்தால் எப்படி என கேள்வி எழுப்பியவர் ஜெரி வியெஸ்- கார்ப்லே (Geri Weis-Corbley ). அமெரிக்க பத்திரிகையாளரான ஜெர் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, ஊக்கம் தரும் செய்திகளை வெளியிடும் வகையில், குட் நியுஸ் நெட்வொர்க் இணையதளத்தை, 1997 ல் துவக்கினார்.

மற்ற செய்தி தளங்கள் போல, பரபரப்பை கொண்டிருக்கும் அல்லது பரபரப்பை தூண்டும் செய்திகளை வெளியிடுவதற்கு பதில், நல்ல உணர்வுகளை தூண்டும் செய்திகளை இந்த தளத்தின் மூலம் அவர் வெளியிட்டு வந்தார். இணையத்தில் மற்ற தளங்களில் வெளியாகும் நல்ல செய்திகளையும் தேடி எடுத்து தனது தளத்தில் வெளியிட்டார்.

Geri-Weis-Corbley

இந்த தன்மைக்காகவே இந்த தளம் நல்ல செய்திகளை நாடுபவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. நல்ல செய்திகளில் மட்டுமே கவனம் செலுத்தும் தன்மையை சுட்டிக்காட்டி, மாறுபட்ட தளமாக ஊடகங்களும் அறிமுகம் செய்தன. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், இந்த தளத்தை நடத்தும் கார்ப்லேயை நல்ல செய்திகளின் ஆசான் என பாராட்டியது.

இணையம் வேகமாக வளரத்துவங்கிய காலத்தில், இப்படி ஒரு தளத்தை நடத்த முடியுமா எனும் வியப்பை கார்ப்லே ஏற்படுத்தினார். ஆனால், ஒன்று அதன் பிறகு இணையத்தில் எழுந்த எண்ணற்ற அலைகளில், இந்த தளம் தாக்குப்பிடித்து நிற்கிறது.

நல்ல செய்திகளில் கார்ப்லேவுக்கு உள்ள நம்பிக்கை தான் இதற்கான முதன்மை காரணம். சி.என்.என் தொலைக்காட்சியில் பணியாற்றிய அனுபவம் கொண்ட கார்ப்லே, நல்ல செய்திகளுக்கு இரண்டாம் வாழ்க்கை கொடுக்க விரும்புகிறேன் என ஒரு முறை கூறியிருக்கிறார். நல்ல செய்திகள் எல்லா காலத்திற்குமானது, அவை ஒரு போதும், நமுத்துப்போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதே நம்பிக்கையை கொண்ட இணையவாசிகள் காரணமாக, குட் நியூஸ் நெட்வொர்க் தொடர்ந்து இணையத்தில் இயங்கி வருகிறது. நல்ல செய்திகளை முன்னிறுத்தும் வகையில், பிற தளங்களில் வெளியாகும் ஊக்கம் அளிக்கும் செய்திகளை அடையாளம் காட்டுவதோடு, மூல செய்திகள், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது. இந்த தளத்தில் வெளியான நல்ல செய்திகளில் சிறந்தவை தொகுக்கப்பட்டு புத்தகமாகவும் வெளியாகி இருக்கிறது.

இந்த நல்ல செய்தி தளத்திற்கு உலகம் முழுவதும் அபிமானிகளும், ஆதரவாளர்கள் இருந்தாலும், சோதனை காலங்களிலேயே மற்ற வாசகர்கள் இந்த தளத்தை தேடி வருகின்றனர் என்பது சற்று முரணானது. ஆம், 2001 ல் அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு எங்கும், எதிர்மறை செய்திகள் கோலோச்சிய போது, பெரும்பாலான இணையவாசிகள், நல்ல செய்திகளை தேடி அலைப்பாய்ந்தனர். அவர்களில் பலர் நல்ல செய்திகளை கூகுளில் தேடிய போது, குட் நியூஸ் நெட்வொர்க் தளத்தை அடையாளம் கண்டு ஆசுவாசம் அடைந்தனர்.

அதே போல, 2008 ல் பொருளாதார தேக்க நிலையில் பெரும் சோர்வும், மன அழுத்தமும் உண்டான நிலையில் நல்ல செய்திக்கான தேடல் அதிகரித்த போதும் இந்த தளம் மேலெழுந்து ஆறுதல் அளித்தது.

தற்போது கொரோனா வைரஸ் கோரத்தாண்டவத்தால் உலகமே அதிர்ச்சியில் உரைந்திருக்கும் நிலையிலும், பலரும் கூகுளில் நல்ல செய்திகளை தேடும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த தேடலின் பலனாக குடு நியூஸ் நெட்வொர்க் தளத்தை கண்டறிபவர்களுக்கு ஏற்படக்கூடிய நிவாரணம் எப்படி இருக்கும் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே.

மன அழுத்தம் போக்குவதற்கான இயற்கை மாத்திரை, தனிமையில் இருக்கும் முதியோர்களுடன் பேசுவதற்கான தொலைபேசி இணைப்பை உருவாக்கிய இளைஞர்கள், புதிய லேசர் நுணக்கத்தால் உலோக பரப்புகள் கிருமிகளை கொல்லும் என்பது போன்ற ஊக்கம் அளிக்கும் செய்திகளை தளத்தின் முகப்பு பக்கத்தில் பார்க்க முடிகிறது. மேலும் பல பகுதிகளையும் கொண்டிருக்கிறது.

கொரோனா சூழலில், மற்ற செய்தி தளங்களிள் வெளியாகும் செய்திகளை படிப்பதைவிட, குட் நியூஸ் நெட்வொர்க் தளத்தில் உலாவும் போது கிடைக்க கூடிய உணர்வு நிகரில்லாதது என்பதை எவரும் உணரலாம். இதுவே இந்த தளத்தின் தனிச்சிறப்பு.

வலையின் ஆரம்ப காலத்தில் மாறுபட்ட தளமாக உருவான குட் நியூஸ் நெட்வொர்க், தொடர்ந்து செயல்பட்டு வருவதையே ஒரு ஆச்சர்யம் என்றும், அதிர்ஷ்டம் என்றும் தான் சொல்ல வேண்டும். இந்த தளத்தை செயலி வடிவிலும் அணுகலாம்.

பின்னாளில் உருவான, அப்வொர்த்தி போன்ற ஊக்கம் தரும் இணையதளங்களுக்கும் இந்த தளமே முன்னோடி. அந்த வகையில், இணைய செய்திகளின் முன்னோடிகளில் ஒருவராக இதன் நிறுவனர் கோர்ப்லேயை பாராட்டலாம்.

நல்ல செய்திகளுக்கு: https://www.goodnewsnetwork.org/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *