இணைய உலகம் ஐகிளவுட் புகைப்பட கசிவால் அமளிதுமளிக்கு இலக்காகி இருக்கிறது. ஐகிளவுட்டில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஹாலிவுட் நட்சத்திர நடிகைகளின் நிர்வான புகைப்படங்கள் வெளியானது சம்பந்தப்பட்ட பிரபலங்களை மட்டும் அல்லாமல் இணையவாசிகளையும் உலுக்கியிருக்கிறது. இந்த கசிவுக்கு யார் காரணம் ? இதை வெளியிட்டது தாக்காளா? அல்லது அவர் பின்னே ஒரு இணைய நிழல் உலகம் இருக்கிறதா ? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனிடையே இது போன்ற கசிவுகளையும், தாக்குதல்களையும் தவிர்ப்பது பற்றியும் தடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கசிவில் ஆப்பிளின் ஐகிளவுட் சேவையில் இருந்ததாக சொல்லப்படும் பாதுகாப்பு ஓட்டை எந்த அளவு காரணம் என்றும் கேட்கப்படுகிறது.
இந்த பின்னணியில், டிஜிபை (http://www.digify.com/ ) சேவையை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். பயனுள்ளதாக இருக்கும்.
டிஜிபை, கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான சேவை. கூடவே , பாதுக்காப்பான முறையில் என்பதை சேர்த்துக்கொண்டால் டிஜிபை அறிமுகத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். ஏனெனில் கோப்புகளை பகிர இணையத்தில் ஏற்கனவே பல வழிகளும் எண்ணற்ற சேவைகளும் இருக்கவே செய்கின்றன. டிராப்பாக்ஸ் உங்களுக்கு தெரியும். கூகுள் டிரைவும் தெரிந்திருக்கும். இன்னும் நிறைய இருக்கின்றன.
டிராப்பாக்ஸ் போன்ற சேவைகள் கோப்புகளை சுலபமாக பகிர வழி செய்கின்றன. ஆனால், டிஜிபை பாதுகாப்பாக பகிர வழி செய்வதாக கூறுகிறது. எப்படி? டிஜிபை மூலம் நீங்கள் அனுப்பும் எந்த ஒரு கோப்பும் அதை பெறுபவரிடம் நிரந்தரமாக தங்கிவிடாது. நீங்கள் குறிப்பிடும் காலத்திற்கு பின் நீக்கப்பட்டுவிடும். அதை இணைய வெளிதனில் பகிர்வதோ, சேமித்து வைப்பதோ முடியாத காரியம்.அந்த வகையில் இந்த சேவையை கோப்புகளுக்கான ஸ்னேப்சேட் என்று சொல்லலாம்.
ஸ்னேப்சேட் செவையில் எப்படி ஒருவர் பகிரும் புகைப்படம் மற்றும் வீடியோ அவர் பார்க்கப்பட்டவுடன் தானாக அழிகக்கப்படுவிடுகிறதோ அதோ போல டிஜிபையில் அனுப்பி வைக்கும் கோப்பு பார்க்கப்பட்டவுடன் அழிக்கப்பட்டுவிடும். அழிக்கப்படுவதற்கான கால அவகாசத்தையும் குறிப்பிட வழி இருக்கிறது. ஆக முக்கியமான கோப்புகள் மற்றும் படைப்பாற்றல் நிறைந்த விஷயங்களை இந்த முறையில் பகிர்ந்து கொள்ளலாம். எப்படியும் உங்கள் கோப்பு இன்னொருவரிடம் அதிக காலம் தங்கியிருக்க வேண்டாம் என கருதும் எவரும் இந்த சேவையை பயன்படுத்தலாம். இடைப்பட்ட காலத்தில் கோப்பை சேமிப்பதோ, ஸ்கிரின்ஷாட் எடுப்பதோ சாத்தியம் இல்லை என்கிறது டிஜிபை.
தேவையான சேவை தான்: http://www.digify.com/download/
———-
பி.கு: இந்த சேவையை பற்றி எழுதும் போது என்னுடைய முட்டாளத்தனத்தை நினைத்து கொள்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் இமெயிலும் இப்படி தானாக மறையும் செய்திகளை அனுப்பும் வசதியை தரும் இணையதளங்கள் பற்றி எழுதியிருக்கிறேன். அப்போதெல்லாம் எதற்கு இத்தகைய ரகசிய சேவை , இதன் பயன் என்ன என்று குழம்பியிருக்கிறேன். இதை குறிப்பிடவும் செய்துள்ளேன். ஆனால் இணையத்தில் எதுவுமே பாதுகாப்பிலை என்பது புரியத்துவங்கியிருக்கும் ஸ்ந்நொடனுக்கு பிந்தைய யுகத்தில் இது போன்ற பாதுகாப்பான சேவைகளின் அவசியம் புரிகிறது.
——
ரகசிய இமெயில் சேவைகள் பற்றிய பதிவுகள்: நாசா தொழில்நுட்பத்தில் இமெயில் அனுப்ப!