இணையத்தில் கோடிக்கணக்கான இணையதளங்கள் இருக்கின்றன. அவற்றை கண்டறிவதற்கான தேடியந்திரங்களும் பல இருக்கின்றன.அப்படியிருக்க இணையதளங்கள் இல்லாத இணையம் உண்டா? என கேட்பது குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
இந்த கேள்வியே அபத்தமானதோ என நினைக்கலாம். இணையதளங்கள் இல்லாத இணையம் எப்படி இருக்க முடியும் எனும் எதிர்கேள்வியும் கேட்கலாம்.
ஆனால், இந்த கேள்விக்கான எளிதான பதில், ஆரம்ப கால இணையம், இணையதளங்கள் இல்லாத வலைப்பின்னலாக இருந்தது, வேர்ல்டு வைடு வெப் என அறியப்படும் வலை அறிமுகமான பிறகே இணையதளங்கள் உருவாகத்துவங்கியது என்பது தான்.
இந்த இடத்தில் இணையம் என்பதும், வலை என்பதும் வேறு என்பதையும், இரண்டிற்குமான வித்தியாசத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆம், இணையமும், வலையும் ஒன்றல்ல.
இணையம் என்பது உள்கட்டமைப்பு. சாலை அல்லது நெடுஞ்சாலை போன்றது. வலை என்பது இணைய உள்கட்டமைப்பின் மீதான பிரதான சேவை. அதாவது சாலை மீது ஓடும் வாகனங்கள் போன்றது.
இணையம் வலைப்பின்னல்களின் வலைப்பின்னல் என்றால், வலை அதன் மீது உருவாக்கப்பட்ட சேவை.
வலை பற்றி இன்னும் விரிவாக சொல்லலாம். ஆனால் இணையம் இல்லாமல் வலை இல்லை, ஆனால் வலை இல்லாமல் இணையம் உண்டு என்று சொல்லலாம்.
வலை வந்த பிறகு தான் இணையதளங்கள் உருவாகின. (உண்மையில் வலை தளங்கள் அல்லது வலை மனைகள் என்று சொல்ல வேண்டும்).
வலை என்பது, பிரவுசர்கள் மூலம், தனி முகவரிகள் வாயிலாக அணுக கூடிய இணையதளங்கள் மற்றும் அவற்றை தாங்கி நிற்கும் சர்வர்களின் தொகுப்பு என புரிந்து கொள்ளலாம். ஹைபர் லிங்க் எனப்படும் இணைப்புகள் இதன் ஆதார் அம்சம்.
ஆக, இணையதளங்கள் இல்லாத இணையம் உண்டு. 1989 ல் வலைக்கான யோசனை முன்வைக்கப்பட்டு, 1991 ல்முதல் இணையதளம் அமைக்கப்படுவதற்கு முன், இணையதளங்கள் இல்லாத இணையமே நிதர்சனம். வலைக்கு முந்தைய இணையத்தில், இமெயில், எப்டிபி கோப்புகள் உள்ளிட்ட சேவைகள் பிரபலமாக இருந்தன. இவைத்தவிர, தகவல் பலகை மற்றும் யூஸ்நெட் உள்ளிட்ட சேவைகளும் இருந்தன.
இந்த வரலாற்று நினைவூட்டல் எதற்கு எனில், இணையம் மற்றும் வலைக்கான வேறுபாட்டை உணர்த்துவதற்காக தான்.ஏனெனில் இப்போதும் கூடபலரும் இணையம் பற்றி குறிப்பிடும் போது இணையதளத்தில் என குறிப்பிடுகின்றனர். ஊடகங்களில் கூடசில நேரங்களில் இவ்வாறு எழுதுகின்றனர். இணையம் என்பது பரந்த வலைப்பின்னல். இணையதளம் என்பது அதில் உள்ள கோடிக்கணக்கான புள்ளிகளில் ஒன்று. எனவே இணையம் என குறிப்பிடும் போது இணையதளம் என குறிப்பிடுவது சரியல்ல. ஏனெனில் இணையதளம் இல்லாமலும் இணையம் இருக்கிறது.
இணையதளங்கள் எண்ணிக்கையை அறிய உதவும் இணையதளம் தெரியுமா? இணையத்தின் முதல் இணையதளம் எது என அறிய விருப்பமா?