இப்போதெல்லாம் குறிப்பெடுக்கும் வசதி ஸ்மார்ட்போனிலேயே இருக்கிறது. இதற்கென தனியே செயலிகளும் கூட உள்ளன. இருப்பினும், இணையத்தில் குறிப்பெடுக்க உதவும் நோட்பின் தளத்தை அதன் படு எளிமையான தன்மைக்காக முயன்று பார்க்கலாம்.
நோட்பின் தளத்தை பயன்படுத்து குறிப்புகளை எழுத, சேமிக்க, அதில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. தளத்தில் நுழைந்ததுமே, உங்களுக்கான குறிப்பேட்டை உருவாக்கி கொள்ளலாம். இதற்கு முகப்பு பக்கத்தில் மனதி உள்ள எண்ணங்களை டைப் செய்தாலே போதுமானது.
முதலில் குறிப்பேட்டிற்கான ஒரு இணைய முகவரி உருவாக்கி தரப்படும். அதை கொண்டு, புதிய குறிப்பேட்டை உருவாக்கி கொள்ளலாம். மீண்டும் தேவை எனில் அதே முகவரியை டைப் செய்து குறிப்புகளை அணுகலாம். பழைய குறிப்புகளில் திருத்தங்கள் செய்யலாம். புதிய குறிப்புகளை சேமிக்கலாம்.
குறிப்புகளுக்கு தலைப்பிடலாம். பழைய குறிப்புகளை தேடிப்பார்க்கலாம். இவற்றுடன் ஒலிக்குறிப்புகளை இணைக்கலாம். எளிமையான சேவைக்குள் இப்படி பல வசதிகள் இருக்கின்றன.
இணைய முகவரி: https://notepin.co/
—\
செயலி புதிது; பேசும் ஜிப்களை உருவாக்கும் செயலி
ஜிப் எனப்படும் புதுமையான அனிமேஷன் வகை படங்களை உருவாக்க வழி செய்யும் ஜிப்பி இணையதளம் ஜிப்பிசேஸ் எனும் காமிரா செயலியை ஐபோன்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலி மூலம் பயனாளிகள் ஜிப் படங்களில் வார்த்தைகளை இடம்பெற வைக்கலாம் அல்லது வீடியோ படங்களில் சப் டைட்டில்களை சேர்க்கலாம்.
இந்த செயலி மூலம் பயனாளிகள் வீடியோ கோப்பை உருவாக்கினால் போதும், அதன் ஒலி குறிப்புகளை வார்த்தைகளாக மாற்றி ஜிப்பாக உருவாக்கி தருகிறது. வார்த்தைகளின் வடிவத்தை விருப்பம் போல் மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இந்த ஜிப் படங்களை சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பகிர்ந்து கொள்ளலாம். சுவார்ஸயத்தை அளிக்கும் இந்த செயலியின் ஆண்ட்ராய்டு வடிவம் எப்போது அறிமுகம் ஆகும் என குறிப்பிடப்படவில்லை.
மேலும் தகவல்களுக்கு: goo.gl/0N5Pde