ஒலிகளுக்கான நூலகமாக விளங்குகிறது ஆடியோஹிரோ இணையதளம். இந்த தளம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒலி கோப்புகளை கொண்டிருக்கிறது. இசை கோப்புகளும் இதில் அடங்கும். ஆடியோ பிரியர்கள் தங்கள் தேவைக்கேற்ப இதில் உள்ள ஒலிகளை தேடிப்பார்க்கலாம். கோப்புகளின் வகை, நீளம் என பலவித அம்சங்களை சுட்டிக்காட்டி தேடலாம். மனநிலைக்கேற்பவும் தேடலாம்.
ஆனால் இந்த ஒலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் எனில் கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றுவிதமான கட்டண திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் ஒலிக்குறிப்புகளை கேட்டுப்பார்க்க எந்த தடையும் இல்லை. தொழில்முறையிலான ஒலி க்கோப்புகளை நாடுபவர்களுக்கு இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து இதில் புதிய ஒலி கோப்புகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. சந்ததாரர்கள் தங்களுக்கான பிளேலிஸ்ட்டையும் உருவாக்கி கொள்ளும் வசதி இருக்கிறது.
இணையதள முகவரி: http://www.audiohero.com/index.html
தகவல் புதிது; இபேவில் தேடல் வசதி
இணைய ஏலத்திற்கான முன்னணி இணையதளமான இபே தனது செயலியில் ஒளிபடம் மூலமான தேடல் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இபே செயலியில், காமிரா பட்டனை அழுத்தி, ஒளிப்பட தேடல் வாய்ப்பை தேர்வு செய்வதன் மூலம் இந்த வசதியை பயன்படுத்தலாம். அதன் பிறகு காமிராவில் படம் எடுத்து அதே போன்ற பொருள் இபே தளத்தில் விற்பனைக்கு இருக்கிறதா என தேடலாம். இபே கேலரியில் உள்ள படங்களையும் இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். ஆண்ட்ராய்டு செயலியில் இருந்து, இந்த தேடலை பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். மிகவும் துல்லியமான வசதி என்று சொல்ல முடியாவிட்டாலும் பயனுள்ள வசதி எனும் வகையில் இது அமைந்திருப்பதாக பயனாளிகள் கருதுகின்றனர். ஒளிபடம் சார்ந்த தேடல் கைகொடுக்கும் என நினைக்கும் நேரங்களில் இதை முயன்று பார்க்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: http://anywhere.ebay.com/mobile/iphone/ebay/
வீடியோ புதிது; எளிய காமிரா நுணுக்கங்கள்
நேர்த்தியான ஒளிப்படங்களை எடுக்க லென்ஸ், வெளிச்சம் உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். விலை உயர்ந்த லென்ஸ் மற்றும் உயர்தர விளக்குகள் இல்லாவிட்டாலும் கூட கையில் உள்ள பொருட்களை கொண்டே தேவையான ஸ்பெஷல் எபெக்ட்களை உருவாக்கி கொள்ளலாம். இந்த வகையில் வெறும் அட்டைப்பெட்டிகளை மட்டும் வைத்துக்கொண்டு சிறப்பு காட்சி அமைப்புகளை உருவாக்கி கொள்வதற்கான வழிகளை விளக்குகிறது கூப் யூடியூப் சேனல். வீட்டிலேயே செய்யக்கூடிய எட்டு நுட்பங்களை வீடியோ மூலம் இந்த சேனல் விளக்குகிறது. ஒளிப்படக்கலை தொடர்பாக வேறு பல விளக்க வீடியோக்களும் இருக்கின்றன.
வீடியோவை காண: https://www.youtube.com/watch?v=Iky3DghsFGc