ஏஐ சாட்பாட்களுக்கு எதிராக மேலும் ஒரு சிவப்புக்கொடி

சாட்ஜிபிடி உள்ளிட்ட எந்த ஆக்கத்திறன் ஏஐ சேவைகளும் வியக்க வைக்க கூடியதாக இருக்கும் அளவுக்கு நம்பிக்கை அளிக்க கூடியதாக இல்லை என்று தோன்றுகிறது. ஏஐ சாட்பாட்கள் மீதான அவநம்பிக்கைக்கான காரணம், அவை தணிக்கைக்கு உள்ளாகி கொண்டே இருக்கும் என்பது தான்.

இதற்கான அண்மை உதாரணம், துருக்கி நாட்டில் எக்ஸ் சேவையின் கிராக் சாட்பாட்டின் சில உள்ளடக்கம் முடக்கப்பட்டிருப்பது. துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் நவீன துருக்கி நிறுவனர் முஸ்தபா கமால் அடாடர்க் உள்ளிட்டோரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக துருக்கி நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஹிட்லரை புகழும் வகையில் கிராக் கருத்து தெரிவித்ததற்காக சர்ச்சைக்குளான நிலையில், துருக்கி இந்த ஏஐ சாட்பாட்டின் உள்ளடக்கத்திற்கு தடை விதித்துள்ளது. ஏற்கனவே போலந்து நாட்டில் கிராக் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏஐ சாட்பாட்கள் திறன் மிக்கவை என்றாலும், அவற்றிடம் சர்ச்சைக்குறிய கேள்விகள் கேட்கப்படும் போது அவை அளிக்க கூடிய பதில்கள் சிக்கலை ஏற்படுத்தலாம். இந்த பதில்கள் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்பதோடு, தவறானதாகவும் கருதப்படலாம். அதிலும் குறிப்பாக சர்வாதிகார தலைமை கொண்ட நாடுகளில் அதன் தலைமைக்கு எதிரான விமர்சன நோக்கிலான கருத்துகள் கூட தவறானதாக கருதப்படலாம்.

சர்வாதிகார நாடுகள் என்றில்லை, ஜனநாயக நாடுகள் என்று கருதப்படுகூடியவற்றில் கூட, அதன் அரசியல் தலைவர்கள் தொடர்பான எதிர்கருத்துகள் தவறானதாக கருதப்படலாம்.

ஏஐ சாட்பாட்கள் பெரும்பாலும் இணையத்தில் இருந்து திரட்டப்பட்ட தரவுகள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டதால், அவை அளிக்கும் பதில்கள் பிழைத்தகவல்கள், சர்ச்சை விவரங்களை கொண்டதாக இருக்கும் வாய்ப்புள்ளது. அதோடு, பயனாளிகள் விஷமத்தனமாக அணுகு ஏஐ சாட்பாட்களை சர்ச்சைக்குறிய பதில் சொல்லும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

அதிலும் ஒருவரது தீவிரவாதி இன்னொருவரின் போராளி என்று சொல்லக்கூடிய தருணங்களில் ஏஐ சாட்பாட்களின் பதில்கள் சர்ச்சைக்கும் சிக்கலுக்கும் உள்ளாவது எதிர்பார்க்க கூடியதே. இத்தகைய தருணங்களையும், சிக்கல்களையும் இன்னும் பெரிதாக பட்டியலிடலாம்.

இத்தகைய சர்ச்சைகளை தவிர்க்க ஏஐ சாட்பாட்கள் எச்சரிக்கையாக பதில் அளிக்க பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இத்தகைய பயிற்சி அடிப்படையில் ஏஐ சாட்பாட்கள் ஒரு சில சர்ச்சைக்குறிய கேள்விகளுக்கு நழுவல் பதில் அளிக்கலாம் அல்லது பதில் அளிக்க மறுக்கலாம்.

இப்போது துருக்கி அதிபர் தொடர்பான சாட்பாட் பதில்கள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளதால், எதிர்காலத்தில் இந்த பதில்கள் திருத்தப்படலாம். தணிக்குக்கும் உள்ளாகலாம்.

ஆக, ஏஐ சாட்பாட்கள் பதில்கள் வெவ்வேறு காரணங்களுக்காக கட்டுப்படுத்தல்களுக்கும், தணிக்கைக்கும் உள்ளாகலாம் என்பதால் அவற்றின் பதில் போதாமைகள் கொண்டதாகவே இருக்கும். எனவே தான் சாட்ஜிபிடி உள்ளிட்ட சேவைகளை நான் பயன்படுத்துவதில்லை.

கோட்சே பற்றி மகாத்மா காந்தி அளித்த பதில் என்ன?

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *