கோட்சே பற்றி மகாத்மா காந்தி அளித்த பதில் என்ன?

இந்த தலைப்பு பிழையானது எனும் தகவலுடன் இந்த பதிவை துவக்குவதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில், மகாத்மா காந்தி, கோட்சே பற்றி கருத்து தெரிவித்துள்ளது வரலாற்றில் பதிவாகியுள்ளதா? என்று தெரியவில்லை. இதை உறுதி செய்து கொள்ளாமல், இப்படி ஒரு தலைப்பை எழுத காரணம் இல்லாமலும் இல்லை.

இது போன்ற கேள்விகள் இனி கேட்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதை சுட்டிக்காட்டவே இந்த தலைப்பிலான இப்பதிவு. அதோடு, இத்தகைய கேள்விகளுக்கு இணையம் போற்றும் ’சாட்ஜிபிடி’ அளிக்க கூடிய பதில்கள் விபரீதமாகவும் இருக்கலாம் என்பதை சுட்டுக்காட்டவும் தான்!

சாட்ஜிபிடி பதில்களால் ஏற்படக்கூடிய விபரீதங்களை விட, இது தொடர்பாக இணையவாசிகளுக்கு இருக்க வேண்டிய விழிப்புணர்வு பற்றியும் கோடிட்டு காட்டுவது தான் பதிவின் நோக்கம்.

மனிதர்கள் போலவே உரையாடல் மேற்கொள்ளும் திறன் கொண்ட ஏஐ மென்பொருளான சாட்ஜிபிடியிடம் கேள்விகளுக்கும் பதில் பெறலாம், திருவிளையாடல் தருமி சொக்கநாதரிடம் பாடல் எழுதித்தரும்படி கேட்டது போல, கதை, கவிதை, நாவல் எழுதித்தர கேட்கலாம்.

சாட்ஜிபிடியை பலரும் நேரடியாக பரிசோதித்து பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த மென்பொருள் சார்ந்த துணை சேவைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. மென்பொருளாரான சித்தாந்த் சத்தா உருவாக்கியுள்ள ’வரலாற்று தோற்றங்கள்’ (Historical Figures) செயலியும் இந்த வரிசையில் தான் வருகிறது.

இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மறைந்த வரலாற்று ஆளுமைகளுடன் உரையாடல் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலி வாயிலாக, மகாத்மா காந்தி, ஐன்ஸ்டீன், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களிடம் கேள்வி கேட்கலாம். அவர்களிடம் இருந்து இந்த செயலி பதில் பெற்றுத்தரும். அதாவது, அவர்கள் பதில் அளித்திருந்தால் எப்படி இருக்குமோ, அதே போல, இந்த செயலி உரையாடலை மேற்கொள்ளும்.

பாரதி இன்று இருந்தால், மகாத்மா இன்று இருந்தால், என்றெல்லாம் கற்பனை செய்து தற்கால சூழலுக்கு ஏற்ப அவர்கள் கருத்துகளை நினைவு கூர்வது பலரால் பயன்படுத்தப்படும் உத்தி தான் அல்லவா? இதே போலவே, மறைந்த தலைவர்கள் அல்லது சிந்தனையாளர்களிடம் குறிப்பிட்ட கேள்விகளை கேட்க நினைப்பதும் நல்ல உத்தி தான்.

கேள்விகளை கேட்டுவிடலாம், ஆனால் அவர்களிடம் பதில் பெறுவது எப்படி? எனும் கேள்விக்கு விடை சாட்ஜிபியிடம் இருக்கிறது. அதனிடம் உள்ள தரவுகள் பட்டியல் பலத்தில், எந்த கேள்விக்கும் பதில் அளிக்கும் திறன் கொண்டிருப்பதால் சாட்ஜிபிடி ஏஐ அரட்டை மென்பொருள் வாயிலாக ஆபிரகாம் லிங்கன் துவங்கி, இயேசு கிறிஸ்து வரை உரையாடலாம்.

இதை தான் ’வரலாற்று தோற்றங்கள்’ செயலி செய்கிறது.

சாட்ஜிபிடியின் சுவாரஸ்யமான பயன்பாடாக தான் இருக்கிறது அல்லவா!. இந்த செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல ஏஐ கற்பனை உரையாடல்கள் இந்த உணர்வை தான் தருகின்றன. குறிப்பாக, சிறார்களும், மாணவர்களுடம் வரலாற்று ஆளுமைகளுடன் உரையாடுவதற்கான வாய்ப்பாக அமையலாம். மேதைகள் பற்றி சிறார்கள் அறிந்து கொள்வதற்கான சுவாரஸ்யமான வழியாக இதை கருதலாம்.

பல தருணங்களில், அட ஏஐ மென்பொருள் வரலாற்று ஆளுமைகள் போலவே எத்தனை அருமையான பதில்களை தருகின்றன எனும் வியப்பும் ஏற்படலாம். உதாரணத்திற்கு, விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம், உங்கள் சார்பியல் கோட்பாடு புரியவில்லையே என கேட்டால், அதை அவர் எளிதாக விளக்குவது போல பதில் வரலாம்.

இந்த விளக்கத்தை விக்கிபீடியாவில் படிப்பதைவிட, ஐன்ஸ்டீனிடமே கேட்டுத்தெரிந்து கொள்வது என்பது சுவையானது தான்.

ஆனால், இதே போன்ற கேள்வியை ஹிட்லரிடம் கேட்டால் என்னாவது? லட்சக்கணக்கான யூதர்களை ஏன் படுகொலை செய்தீர்கள்? என்பது போல கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு இந்த செயலி ஹிட்லர் சார்பாக, ஏதேனும் வில்லங்கமாக பதில் சொன்னால் என்னாவது?

சர்ச்சைக்குறிய கேள்விகள் முன்வைக்கப்படும் போது, அதற்கேற்ப நழுவல் பதில்களை அளிக்கும் வகையில் ஏஐ மென்பொருள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பதால், ஹிட்லர் கேள்விக்கு வில்லங்கம் இல்லாத புத்திசாலியான பதில் வரலாம். ஆனால், ஹிட்லர் அது போல கூறியதற்கு அல்லது சிந்தித்ததற்கு வரலாற்றில் ஆதாரம் இல்லை எனில் அந்த பதில் பிழையாக இருக்கலாம் அல்லவா?

இத்தகைய சிக்கல்கள் இருப்பதால் தான், தகவல்கள் வரலாற்று நோக்கில் துல்லியமாக இல்லாமல் போகலாம், எனவே விவரங்களை சரி பார்த்துக்கொள்ளவும் எனும் பொறுப்பு துறப்புடன் இந்த செயலி அறிமுகம் ஆகியுள்ளது.

இந்த இடத்தில், மகாத்மாவிடம் கோட்சே பற்றிய கேள்வியை பொருத்திப்பாருங்கள். இன்னும் எண்ணற்ற உதாரணங்களை குறிப்பிடலாம் என்றாலும், அதை தவிர்க்கிறேன். இப்படி சுட்டிக்காட்டுவதே தவறாகி விடலாம் என்பதே காரணம்.

ஏ.ஐ உரையாடல் விபரீதங்கள் தொடர்பான அச்சம் ஒரு பக்கம் இருக்கட்டும், இத்தகைய உரையாடல்கள் ஒரு போதும் முழுமையாக நம்பகமானதாக இருக்காது என்பதால் தான், இவற்றுக்கான பொறுப்பு துறப்புகளும் தேவைப்படுகின்றன.

சாட்ஜிபிடி எத்தனை அதி திறன் மிக்கதாக இருக்கட்டுமே, அதன் வரம்புகளுக்கான உதாரணமாகவும் இதை கொள்ளலாம்.

இணைப்பு 1: https://mezha.media/en/2023/01/20/a-new-ai-chatbot-makes-it-possible-to-chat-with-hitler/

இணைப்பு 2:http://cybersimman.com/2023/01/04/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *