இது கூகுள் அதிசயம் தெரியுமா?

பொதுவாக கூகுள் அநீதிகள் பற்றி தான் அதிகம் எழுதுகிறேன். அதாவது அதிருப்தியை ஏற்படுத்தும் கூகுள் தேடல் முடிவுகள். குறிப்பாக பொருத்தம் இல்லாத தளம் தேடல் பட்டியலில் முதல் தளமாக முன்னிறுத்தப்படுவது. ஆனால், கூகுள் வியக்க வைக்கும் தருணங்களும் உண்டு. லாராவெல் தொடர்பான இணைய தேடலில் நிகழ்ந்த கூகுள் அதிசயத்தை உதாரணமாக சொல்லலாம்.

லாராவெல் (Laravel) இணைய செயலிகளை எளிதாக உருவாக்குவதற்கான சேவை என அறிய முடிகிறது. இணையதளங்களை வடிவமைக்க பயன்படும் பி.எச்.பி (PHP) சார்ந்த பிரேம்வொர்க் என குறிப்பிடப்பட்டுள்ளது. லாராவெல் கொண்டு உருவாக்கப்பட்ட இணையதளம் எனும் இணைய குறிப்பை படித்த பிறகு, கூகுளில் லாராவெல் என்றால் என்ன என தேடிப்பார்த்த போது, இணைய செயலி உருவாக்க சேவையாக இது மிகவும் பிரபலமாக இருப்பதையும், இந்த சேவை சார்ந்த வலுவான இணைய சமூகம் இருப்பதையும் உணர முடிந்தது.

லாராவெல் தொடர்பாக பயிற்சி அளிக்க தனி இணையதளங்களும் இருக்கின்றன. லாராவெல் செய்திகளுக்கான இணையதளமும் இருக்கின்றன.

லாராவெல் செய்தி தளங்கள் வியக்க வைக்கவே, கூகுளில் செய்தி பகுதியை குறிப்பிட்டு தேட, லாராவெல் செய்திகளாக வந்து நின்றன. எல்லாமே லாராவெல் நியூஸ் எனும் செய்தி தளத்தின் முடிவுகள். லாராவெல் எனும் இணைய சேவை தொடர்பான செய்திகளை வழங்குவதற்கான பிரத்யேக தளம் என்பதே வியப்பாக செய்தி. அதிலும் கூகுளில் லாராவெல் செய்திகளை தேடிய போது, முதல் பக்க முடிவுகள் அனைத்தும் லாராவெல் நியூஸ் எனும் ஒரே தளம் சார்ந்ததாக இருப்பது இதுவரை கூகுள் செய்தி தேடலில் எதிர்கொள்ளாத அதிசயமாக தோன்றுகிறது.

லாராவெல் பற்றி இன்னமும் தெரிந்து கொள்வோம்: https://laravel-news.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *