மார்கோவின் மந்திர கம்பளம் தெரியுமா?

மார்கோவ் ஈர்த்துக்கொண்டே இருக்கிறார். ஒன்று எதிர்பாராத இடங்களில் எல்லாம் அவரை எதிர்கொள்ள நேரிடுகிறது அல்லது அவரை அடிப்படையாக கொண்டு தேடினால் எதிர்பாராத புதிய ஒன்றை தெரிந்து கொள்ள நேர்கிறது. இப்படி தெரிந்து கொண்டது தான் மார்கோவ் கம்பளம்.

மார்கோவ் எனும் போது, ரஷ்ய கணித மேதையான ஆண்ட்ரி மார்க்வோ ( Andrei Andreyevich Markov) தான் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். நிகழ்தகழ்வு உள்ளிட்ட கணித நிகழ்வுகள் சார்ந்த கோட்பாடுகளுக்காக அறியப்படும் மார்கோவ் முன் வைத்த மார்கோவ் சங்கிலி, மார்கோவ் தொடர் உள்ளிட்ட கருத்தாக்கங்கள் தான் நவீன ஏஐ நுட்பத்திற்கான அடிப்படையாக அமைகின்றன.

மார்கோவ் சங்கில் தொடர்பாக ஏற்கனவே அறிமுக நோக்கில் எழுதியிருக்கிறேன். ஆனால், மார்கோவ் கோட்பாடுகளை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதையும் உணர்கிறேன்.

இந்நிலையில், தேடியந்திரம் தொடர்பான பழைய புத்தகம் ஒன்றில், மீண்டும் மார்கோவ் பெயரை பார்க்க நேர்ந்தது. அவரது மார்கோவ் சங்கிலி கருத்தாக்கம் தான், கூகுள் தேடல் நுட்பத்திற்கு வழிகாட்டும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய நிலைகளின் தாக்கம் இல்லாமல் தற்போதைய நிலையே, தோராயமாக அமையக்கூடிய எதிர்கால நிலையை தீர்மானிக்கும் எனும் மார்க்வோ சங்கிலியின் மைய கருத்து, இணைய பக்கத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்தை கிளிக் செய்து செல்வதற்கான பாதையை தீர்மானிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சர்ச் இஞ்சின் எனப்படும் தேடியந்திர நுட்பங்கள் தீர்க்கக்கப்பட்ட புதிர் என்று பரவலாக கருதப்படும் நிலையில், இணைய தேடலின் பின்னே இருப்பது மார்கோவ் சங்கிலி கோட்பாடு தான் என்பது வியக்க வைக்கிறது. அதோடு, கூகுளின் வெற்றி ரகசியமாக கருதப்படும் பேஜ் ரேங்க் முறைக்கும், மார்கோவ் சங்கிலி ஒரு முக்கிய காரணம் என அறிய முடிகிறது.

எனவே மார்கோவ் மீண்டும் முக்கியமாகிறார் என உணர்ந்து அவரது வாழ்க்கை பற்றி எழுதலாம் எனத்தேடினால், தற்செயலாக மார்கோவ் கம்பளம் (Markov blankets ) எனும் கருத்தாக்கம் கண்ணில் பட்டது.

மார்கோவ் சங்கிலி, தொடர், செயல்முறை போன்றவை பற்றி பலமுறை படித்திருந்தாலும், மார்கோவ் கம்பளம் என்பது புதிதாக இருந்தது. மேற்கொண்டு அறிய தொடர்புடைய ஆய்வுக்கட்டுரையை வாசித்துப்பார்த்தால், உயிரணு உள்ளிட்ட அமைப்புகளில், ஒன்றின் எல்லையை தீர்மானிக்கும் அம்சமாக மார்கோவ் கம்பளம் அமைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றில் இருந்து இன்னொன்றை வேறுபடுத்திக்காட்டும் வகையில், இன்னொன்று அல்ல என உணர்த்தும் எல்லையாக மார்கோவ் கம்பளம் அமைகிறது. பொதுவாக உள் மற்றும் வெளி செயல்பாடுகள் இதை தீர்மானிக்கின்றன. மனித உடலில் உயிரணுவின் எல்லையையும், தன்மையையும் இந்த கம்பளமே தீர்மானிக்கிறது. உயிரணுக்களுக்கு தாங்கள் உயிரணு என்று சொல்வதும், மற்ற உடல் பகுதிகளுடன் கலந்திருந்தாலும் தனித்திருக்கச் செய்வதும் மார்கோவ் கம்பளம் தான்.

மார்கோவ் கம்பளம் என்பது புள்ளியியல் சார்ந்த கோட்பாடு என்றாலும் உயிரனம் சார்ந்த செயல்பாட்டை புரிந்து கொள்ளவும் வழி செய்கிறது.

உண்மையில், மந்திர கம்பளம் என்பதை விட உயிர் கம்பளம் அல்லது புள்ளியல் கம்பளம் என்றே சொல்ல வேண்டும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *