ஆஸ்கர் தெரியும், ’வெப்பி’ அவார்ட்ஸ் தெரியுமா?

ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருது தெரியும். ஆண்டுதோறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்த விருது பற்றி தான் இப்போது எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். எல்லாம் சரி, ஆஸ்கர் விருது போல, ’வெப்பி’ அவார்ட்ஸ் தெரியுமா?

ஆஸ்கர் எப்படி ஆங்கில படங்களுக்கான பெருமை மிகு விருதோ அதே போல இணைய உலகின் பெருமைமிகு விருதாக வெப்பி அவார்ட்ஸ் (Webby Awards) விளங்குகிறது. அதற்கேற்ப இந்த விருது, இண்ட்நெட்டின் ஆஸ்கர் (“Oscars of the Internet” ) என்றே வர்ணிக்கப்படுகிறது.

இணைய உலகில் சிறந்த இணையதளங்கள் மற்றும் சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் வெப்பி அவார்ட்ஸ் வழங்கப்பட்டு வருகின்றன. சுருக்கமான வெப்பீஸ். ஆஸ்கர் விருது போலவே, இதற்கும் தேர்வு முறையும் உள்ளது.

இந்த ஆண்டு வழங்கப்பட்ட ஆஸ்கர் 98 வது விருது என்றால், வரும் ஏப்ரலில் 29 வது வெப்பி விருதுகள் வழங்கப்பட உள்ளன.

ஆஸ்கர் வரலாறு பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம். வெப்பீஸ் உருவான வரலாற்றை இப்போது பார்க்கலாம்.

வெப்பீஸ் வரலாறு

டிஜிட்டல் கலைகள் மற்றும் அறிவியலுக்கான சர்வதேச அகாடமி (International Academy of Digital Arts and Sciences) எனும் அமைப்பால் வழங்கப்பட்டாலும், இந்த விருது ஒரு தனிமனித கனவில் இருந்து துவங்கியது. அந்த தனிமனிதர் ஒரு பெண்மணி என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது.

டிபானே ஷாலைன் (Tiffany Shlain ) எனும் அமெரிக்க பெண்மணி தான் இணைய உலகிற்கான வெப்பி விருதை நிறுவியவர்.

1996 ம் ஆண்டு நிறுவப்பட்டு, 1997 ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் கலை –அறிவியல் அகாடமி இந்த விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்கிறது.

டிபானே இந்த விருதை உண்டாகியதன் பின்னணியில் சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது.

கூல் சைட்ஸ்

1996 ம் ஆண்டு, இண்டெர்நெட் வளர்ச்சி பாதையில் பயணிக்கத்துவங்கியிருந்தது. 1995 ல் தான் அமேசான் உள்ளிட்ட முன்னணி சேவைகள் அறிமுகமாகி இணையம் வர்த்தகமயமாகத்துவங்கியிருந்தது. தினமும் நூற்றுக்கணக்கில் புதிய மற்றும் புதுமையான இணையதளங்கள் உருவாக்கப்பட்டு வந்தன. இவற்றை கண்டறியவும் யாஹூ போன்ற சேவைகள் உருவாகியிருந்தன.

ஏற்கனவே இருந்த பாரம்பரிய நிறுவனங்களும் டிஜிட்டலுக்கு தாவிக்கொண்டிருந்தன. அந்த காலகட்டத்தில் இணையதளங்களை அங்கீகரிக்க கூல் சைட்ஸ் போன்ற தளங்கள் இருந்தன. மேலும், பல்வேறு ஊடகங்களும், சைட் ஆப் தி டே அல்லது சிறந்த நூறு தளங்கள் என்றெல்லாம் பட்டியல் போட்டு சிறந்த இணையதளங்களை அடையாளம் காட்டி வந்தன.

இந்நிலையில், புதிதாக தோன்றும் இணையதளங்களை ஆங்கீகரித்து கவுரவிப்பதற்காக என்று வெப்பி அவார்டை உருவாக்கும் எண்ணம் டிபானேவுக்கு உண்டானது.

சோவியத் நட்பு பாலம்

டிபானே அப்போது சான்பிரான்சிஸ் கோவில் வசித்துக்கொண்டிருந்தார். அவரை இணைய பைத்தியம் என்றும் சொல்லலாம். டிபானே தனது பதின் பருவத்திலேயே, இணையத்தை அறிமுகம் செய்து கொண்டிருந்தார். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது ஆப்பிளின் மேகிண்டாஷ் கம்ப்யூட்டர் மூலம், மோடம் வாயிலாக நூலகத்தை தொடர்ந்து கொண்டு உற்சாகம் அடைந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இணையம் ஏற்படுத்தக்கூடிய தொடர்பு ஆற்றலால் ஊக்கம் பெற்றவர், அமெரிக்க, ரஷ்யா மற்றும் ஈராண் மாணவர்கள் இணைந்து தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கான மென்பொருள் யோசனையை (“Uniting People in Telecommunications and Software” (UNITAS.)  ) முன் வைத்திருந்தார். இதன் பயனாக சோவியத் யூனியனுக்கும் சென்று வந்தார்.  ( தாத்தா 16 வது வயதில் சோவியத் யூனியனில் இருந்து அமெரிக்கா ஓடி வந்தவர்) அது மட்டும் அல்ல, கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் அவர் இணையத்தின் ஆற்றல் பற்றி பேசும் வழக்கம் கொண்டிருந்தார்.

அதன் பிறகு, பெர்க்லி பல்கலையில் படித்தவர் திரைப்பட இயக்கம் மற்றும் சிடிராம் பத்திரிகை உருவாக்கத்தில் கவனம் செலுத்தினார். இந்த காலகட்டத்தில் தான், யாரோ ஒருவர் அவரிடம் வலை (Web!)  என்று ஒன்று இருக்கிறது தெரியுமா? எனக்கேட்டு இணையதளம் என ஒன்று இருப்பதையும் அறிமுகம் செய்தார். அவ்வளவு தான், அவருக்கு வலையை பார்த்ததுமே பிடித்து விட்டது.

வெப்பி துவக்கம்

வானவியல் சிடிராம் தயாரிப்பு தொடர்பான வேலை பார்த்துக்கொண்டிருந்தவர், 1995 ல் இணையம் தொடர்பான பரபர்ப்புக்கு மத்தியில், ஐடிஜி எனும் இணைய பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பதிப்பாளர் மேசன் என்பவர், எங்களிடம் வெப்பி அவார்ட் எனும் பிராண்ட் பெயர் இருக்கிறது, ஆனால் இதற்கான பட்ஜெட் இல்லை, என்ன செய்யலாம் என கேட்டிருக்கிறார்.

டிபானேவுக்கு ஏற்கனவே திரைப்படங்களில் ஆர்வம் இருந்தது, வலையும் அவருக்கு பிடித்திருந்ததால், இரண்டையும் இணைத்து வெப்பி விருதுகளை நிறுவி நடத்தலாம் என கூறினார். இணையதளம் எனும் புதிய வடிவத்தை கொண்டாட இது பொருத்தமாக இருக்கும் என நம்பினார். 1996 ம் ஆண்டு வெப்பி நிறுவப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் வெப்பி விருது வழங்கப்பட்டது.

ஆஸ்கர் விருது போலவே, முதல் வெப்பி விருது கோலகலாமான விழாவை நடைபெற்றது. அரங்கு நிறைந்த விழாவாக முதல் வெப்பி பெரும் வெற்றி பெற்று வரவேற்பையும் பெற்றது.

1998 ல், சோதனையாக ஐடிஜி பத்திரிகை மூடப்பட்டது. எனினும் டிபானே அந்நிறுவனத்திடம் பேசி, வெப்பி விருதை தனி நிறுவனமாக நடத்தும் யோசனையை முன் வைத்து சம்மதமும் பெற்றார். ஏற்கனவே இருந்த தேர்வுக்குழுவை கொண்டு, டிஜிட்டல் கலை அகாடமி உருவாக்கப்பட்டது. அதன் பிறகு ஆண்டுதோறும் தொடர்ந்து வெப்பி விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஐஎம்டிபிக்கு அங்கீகாரம்

துவக்கத்தில் இணையதளங்கள் எனும் பிரிவில் மட்டும் விருது வழங்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் பல்வேறு புதிய பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. தேர்வுக்குழு வழங்கும் விருது தவிர, மக்கள் விருப்பம் (“People’s Voice” ) எனும் பிரிவும் உள்ளது. இது இணையவாசிகள் வாக்களித்து தேர்வு செய்யும் விருது.

வெப்பி விருது இணையதளத்தில், ஆண்டுதோறும் வழங்கப்பட்ட விருதுகள் பட்டியல் மற்றும் விவரங்களை பார்க்கலாம். விக்கிபீடியாவிலும் தனி பக்கம் இருக்கிறது.

முதல் ஆண்டு விருது பெற்ற இணையதளங்களில் பல இப்போது இல்லை. ஆனால், ஒரு சில இணையதளங்கள் இன்னமும் இருக்கின்றன. வயர்டு இணை பத்திரிகை சார்பில் நடத்தப்பட்ட சிட்டிசன்.காம், பேமலி பிளானட் (Family Planet) , சோனிக் நெட் (SonicNet,) , தி கிஸ்ட் (The Gist) போன்றவை காணாமல் போய்விட்டன.

ஆனால், சான்பிரான்சிஸ் கோ அருங்காட்சியகத்தின் டிஜிட்டல் வீடு (Exploratorium) மற்றும் இணைய பத்திரிகை சலோன்- Salon,போன்றவை இன்னமும் செயல்பாட்டில் உள்ளன.

1997 ல் விருது பெற்ற தளங்களில், திரைப்பட களஞ்சியமான ஐஎம்டிபி (The Internet Movie Database ) தளமும் ஒன்று. இணையத்தின் செல்வாக்கு மிக்க தளங்களில் ஒன்றான ஐஎம்டிபி தளத்தை முதலில் அங்கீகரித்த மேடைகளில் ஒன்றாகவும் வெப்பி விளங்குகிறது. செய்தி பிரிவில் NEWS.COM விருது பெற்றது. 2000 மாவது இசை பிரிவில், டிஜிட்டல் இசையை புரட்டிப்போட்ட நேப்ஸ்டர் (Napster) விருது பெற்றது. தொழில்நுட்ப சாதனைக்காக ’கூகுள்’ எனும் இளம் நிறுவனத்திற்கு விருது அளிக்கப்பட்டது. 2005 ல் ஜிமெயில் கவுரவ தேர்வாக இடம்பெற்றது.

கவிதைக்கு விருது

கவிதைக்கான போயட்ரி பவுண்டேஷன் 2007ல் சங்கங்கள் பிரிவில் விருது பெற்றதை பெருமையாக குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே வெப்பி விருதுகளுக்கான பிரிவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. 2025 விருதுக்கான பிரிவுகளே நீண்ட பட்டியலாக இருக்கிறது.

இந்திய தளங்கள்

இந்திய தளங்கள் பலவும் வெப்பி விருது பெற்றுள்ளன. 2007 ல் எல்.ஐ.சி தளம் வெப்பி விருது பெற்றுள்ளது. 2023 ல் பில்மாபியா (Filmapia) தளம் விருது பெற்றது.

வெப்பி விருது தொடர்பான இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் அதன் ஐந்து வார்த்தை ஏற்புரை. விருது பெறுபவர்கள் தங்கள் நன்றி தெரிவிக்கும் ஏற்புரையை ஐந்து வார்த்தைகளில் சொல்ல வேண்டும். இந்த ஐந்து வார்த்தை ஏற்புரை மிகவும் பிரபலம். இது ஹாலிவுட் நடிகர் கெவின் பேக்கனின் ஏற்புரை. –

புத்தாயிரமாண்டில் தொழில்நுட்ப சாதனை பிரிவில் கூகுளுக்கு அளிக்கப்பட்ட விருதை பெற்றுக்கொண்ட கூகுள் நிறுவனர்கள் லார் பேஜ், செர்ஜி பிரின் அளித்த ஏற்புரை இது: “Google gives great…search results.”

இன்ஸ்டா யுகத்திற்கு ஏற்ற தன்மை அல்லவா! – அது தான் வெப்பி அவார்ட்ஸ்.

இணையத்தின் அஸ்கர் விருதுகள்- வெப்பி அவார்ட்ஸ் – The Oscars of the Internet- History of Webby awards.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *