அந்த காலத்தில் சாட்ஜிபிடி இருந்தது தெரியுமா?

சாட்ஜிபிடி பரபரப்புக்கு மத்தியில், பழைய தேடியந்திரம் ஆஸ்க் ஜீவ்ஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இப்போது மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. ஏனெனில் ஆஸ்க்.காம் அண்மையில் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கிறது.

ஆஸ்க்ஜீவ்ஸின் அடுத்த வடிவம் தான் ஆஸ்க்.காம் என்பதால் இதன் முடுவிழா இணைய வரலாற்றில் முக்கிய நிகழ்வு தான். இணைய தேடலில் ஒரு பெரும் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆஸ்க்.காம் மூடப்படுவது அத்தனை பெரிய விஷயமா என்று கேட்கலாம். ஆஸ்க்.காமின் மூல வடிவமான ஆஸ்க்ஜீவ்ஸ், இணையத்தில் கேள்வி பதில் வடிவில் தேடல் சேவையை வழங்கிய முதல் தேடியந்திரம் என்பதால், இது பெரிய விஷயம் தான்.

அல்டாவிஸ்டா, லைகோஸ், இன்போசீக், யாஹூ போன்ற தேடியந்திரங்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில், 1996 ல் ஆஸ்க்ஜீவ்ஸ் அறிமுகமானது.

கூகுள் அறிமுகமாக இன்னும் சில ஆண்டுகள் இருந்த காலத்தில் ஆஸ்க்ஜீவ்ஸ் முற்றிலும் புதுமையாக பயனாளிகள் கேள்வி கேட்டால் அதற்கு பொருத்தமாக பதில் அளிக்க முயன்றது. இப்போது இந்த திறனை என்.எல்பி என்கிறோம். என்.எல்பி எனும் இயற்கை மொழி செயலாக்கம் பெரிய அளவில் வளர்ந்திராத 1990 களில், ஆஸ்க்ஜீவ்ஸ் இந்த நுட்பம் கொண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சித்தது.

என்.எல்.பி நுட்பம் அதன் பிள்ளை பருவத்தில் இருந்ததால், ஆஸ்க்ஜீவ்ஸ் நிறுவனர்கள், புதுமையான வழியில் இதற்கு தீர்வு கண்டனர். இணையத்தில் பயனாளிகள் பொதுவாக தேடும் சொற்களை எல்லாம் சேகரித்து பட்டியலிட்டு, அவற்றுக்கு பொருத்தமான பதில்கள் கொண்ட இணையதளங்களை எல்லாம் பட்டியலிட்டனர். பயனாளிகள் தேடும் சொற்கள் பட்டியலில் இருந்து தொடர்புடைய கேள்விகளை அனுமானித்து அந்த கேள்விகள் வரும் போது, பொருத்தமான பதில் வர ஏற்பாடு செய்தனர்.

அறிமுகமான புதிதில், இந்த கேள்வி பதில் வசதி ஈர்த்தது. ஆனால் போகப்போக இந்த முறையின் போதாமை பயனாளிகளை பாதிதத்து. இதனிடையே கூகுள் அறிமுகமாகி தெளிவான தேடலால் சந்தையை வென்றது. அதன் பிறகு ஆஸ்க்ஜீவ்ஸ் காம், செல்வாக்கிழந்து, பின்னர் கைமாறி ஆஸ்க்.காமாக மாறியது. ஒரு கட்டத்தில் இது வெறும் கேள்வி பதில் பாணி கட்டுரைகளை கொண்டிருந்தது. பின்னர் அதுவும் மாறியது. 30 ஆண்டுகளுக்கு பின் அண்மையில் மூடப்பட்டது.

இதற்கான அறிவிப்பில், எந்த சிறந்த தேடலும் முடிவுக்கு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாடு போன்ற ஏஐ சாட்பாட்கள் கேள்வி பதிலில் அசத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் அந்த காலத்திலேயே இருந்த சாட்ஜிபிடி என ஆஸ்க்ஜீவ்ஸை குறிப்பிடலாம். அந்த வகையில் இது முன்னோடி தேடியந்திரம்.

அது மட்டும் அல்ல, ஆஸ்க்ஜீவ்ஸை விட இப்போது என்.எல்.பி நுட்பம் பெருமளவு மேம்பட்டிருந்தாலும், கேள்வி பதில் சேவையில் இருந்த பிரச்சனை இன்னமும் முழுவதும் தீர்க்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். எனவே சாட்ஜிபிடிகளை அப்படியே நம்பி விட வேண்டாம்.

ஆஸ்க்.காம் பற்றிய வீடியோ பதிவு:

தொடர்புடைய பதிவுகள்:

ஆஸ்க் ஜீவ்ஸ் இருந்தது:

ஆஸ்க் ஜீவ்ஸ் அளித்த நேரடி பதில்கள்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *