பழைய தேடியந்திரமான பிலாக்லே இன்னமும் செயல்பாட்டில் இருப்பது ஆச்சர்யம் தான். அதை கூகுள் விட்டு வைத்திருப்பது இன்னும் ஆச்சர்யம்.
பிலாக்லே உருவான நோக்கத்தை தெரிந்து கொண்டால் அதன் நீடித்த செயல்பாடு அளிக்கும் ஆச்சர்யத்தை புரிந்து கொள்ளலாம்.
பிலாக்லே, கூகுளுக்கு மாற்றாக உருவான தேடியந்திரம், ஆனால் மூல தேடியந்திரம் அல்ல, கூகுளின் நகல் தேடியந்திரம். அதாவது மேற் போர்வை தேடியந்திரம்.
பிலாக்லேவில் தேடும் போது கூகுள் தேடல் முடிவுகளே முன் வைக்கப்படுகின்றன. அதாவது பிலாக்லே வாயிலாக கூகுளில் தேடுகிறீர்கள்.
எதற்கு இப்படி பிலாக்லே மூலம் கூகுளில் தேட வேண்டும்? என்ற கேள்விக்கான பதில், பிலாக்லே கூகுள் முடிவுகளை அதன் வெள்ளை நிற பின்னணியில் வழங்காமல் கருப்பு பின்னணியில் வழங்குகிறது. இப்படி டார்க் மோடில் கூகுள் முடிவுகளை வழங்குவதன் மூலம் வெள்ளை வெளிச்சம் தருவதற்காக கம்யூட்டர் மானிட்டர் எடுத்துக்கொள்ளும் மின்சக்தியை மிச்சமாக்குவதாக பிலாக்லே சொல்கிறது.
இதன் மூலம் குறிப்பிட்ட அளவிலான மின்சக்தியை சேமிக்க முடியும் என்றும், அதிகமானோர் கூகுளுக்கு பதில் பிலாக்லேவை பயன்படுத்தினால் அந்த அளவு மின்சக்தியை மிச்சமாக்கலாம் என்றும் பிலாக்லே தரப்பில், 2007 ல் இதன் அறிமுகத்தின் போது தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆதாரமாக அமைந்த ஆய்வு சார்ந்த வலைப்பதிவு ஒன்றையும் குறிப்பிட்டது.
ஆக வெள்ளை கூகுளில் தேடாமல், கருப்பு கூகுளான பிலாக்லே மூலம் தேடினால், மின்சக்தியை மிச்சமாக்கி, சுற்றுச்சூழல் நலனுக்கு இயன்ற வரை உதவலாம் எனும் கருத்தை பிலாக்லே முன்வைத்தது. இந்த நோக்கத்துடன், வெளிச்சம் இல்லாத கருப்பு பின்னணியில் தேடல் முடிவுகள் தோன்றும் வகையில் கூகுள் தேடலுக்கான இடைமுகத்தை உண்டாக்கியது. இதன் மூலம் பிலாக்லேவில் இருந்து கூகுளில் தேடுவது சாத்தியமானது.
கூகுள் கொஞ்சம் பெரிய மனசுக்கார தேடியந்திரம். அதன் தேடியந்திர சேவையை மற்றவர்களும் பயன்படுத்திக்கொள்ள அது வழி செய்கிறது. இதற்கு கஸ்டம் சர்ச் என பெயர். இந்த வசதியை கொண்டு தான், பிலாக்லே உருவாக்கப்பட்டது.
கூகுள் தேடல் முடிவுகளை கருப்பு பின்னணியில் வழங்கியதாலும், இதற்கு சுற்றுச்சூழல் நோக்கிலான காரணத்தை முன்வைத்தாலும், பிலாக்லே கவனத்தை ஈர்த்து பெரிதாக பேசப்பட்டது. 2007 ல். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹைப் மீடியா எனும் இணைய நிறுவனம் இதை உருவாக்கியது.
கருப்பு கூகுள், பசுமைத் தேடல், கூகுளின் இருண்ட பக்கம் என பலவிதமாக பிலாக்லே வர்ணிக்கப்பட்டு, கவனத்தை ஈர்த்தது.
கூகுளில் நேராக தேடாமல், பசுமை நோக்கத்திற்காக பிலாக்லே மூலம் தேடலாம் எனும் அம்சம் புதுமையாக இருந்தது, பரபரப்பாக பேச வைத்தது. மற்றபடி பிலாக்லேவில் வேறு எந்த கூடுதல் அம்சங்களும் கிடையாது. ஆனாலும், கூகுளுக்கான மாற்று எனும் வகையில் கவனம் ஈர்த்தது.
கூகுள் இதை போட்டியாகவோ, வில்லங்கமாகவோ கருதாமல் விட்டு விட்டது.
இது பிலாக்லேவின் பழைய கதை.
இப்போது தற்செயலாக பார்த்தால், 2026 லும் பிலாக்லே இருப்பது தெரிகிறது. அதே பழைய கருப்பு பின்னணியில் கூகுள் தேடல் முடிவுகளை வழங்குகிறது. பிலாக்லே போன்ற உப சேவைகள் 20 ஆண்டுகளுக்கும் மேல் தாக்குபிடிப்பது பெரிய விஷயம். இடைப்பட்ட காலத்தில் இது போன்ற லட்சம் சேவைகள் உருவாகி காணாமல் போயிருக்கின்றன.
பிலாக்லே இன்று வரை தொடர்வதோடு, கம்ப்யூட்டர் திரையில் மின்சக்தியை மிச்சமாக்கும் டார்க் மோடு அல்லது கருப்பு பின்னணி வசதியை வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த இடத்தில் சின்ன பிளேஷ் பேக். பிலாக்லே அறிமுகமான போது கூகுள் இதை போட்டியாளராகவோ அல்லது தனது சேவையில் தலையிடுவதாகவோ நினைக்கவில்லை. அதன் ஆதார நோக்கத்தை அங்கீகரிப்பது போல, பிலாக்லே மீது எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை.
சரி அப்படி என்றால், கூகுளே இத்தகைய கருப்பு பின்னணி வசதியை அளித்திருக்கலாமே என்று கேட்கலாம். அப்படியும் செய்யவில்லை. ( 2021 ல் டார்க் மோடு வாய்ப்பு அறிமுகம் ஆனது).
பிலாக்லே பற்றி இப்போது சுட்டிக்காட்ட காரணம் இருக்கிறது. 2007 ம் ஆண்டில் பிலாக்லே அறிமுகமான போதே, கூகுள் இது தொடர்பாக தனது வலைப்பதிவில் விளக்கம் அளித்திருந்தது. அதில் கருப்பு நிற பின்னணி ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டி, இது பழைய வகை மானிட்டர்களுக்கு மட்டும் பொருந்தும், நவீன மானிட்டர்களில் கருப்பு பின்னணியால் மின்சக்தி மிச்சமாவது அற்ப சொற்பம் தான் என தெரிவித்திருந்தது.
எனவே, கருப்பு பின்னணிக்கு மாறுவது சுற்றுச்சூழல் நோக்கிலான தேவை அல்ல என்பது போல குறிப்பிட்டிருந்தது.
அப்படி என்றால், பிலாக்லே மின்சக்தி மிச்சம் என சொல்வது கட்டுக்கதை தானா? என கேட்கத் தோன்றலாம். இந்த கட்டுக்கதையை வைத்துக்கொண்டு தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறதா? என்றும் கேட்கலாம்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஏஐ திறனால் தேடல் வசதி மேம்பட்டுவிட்டதாக சொல்லப்படும் சூழலில், பிலாக்லே பற்றிய தேடல் முடிவுகளில், அதன் ஆதார நோக்கம் தவறென நிருபிக்கப்பட்டு விட்டது என தானாக சுட்டிக்காட்டப்படுவது ஏற்றதாக இருக்கும் அல்லவா என்றும் கேட்கத் தோன்றுகிறது.
கூகுள் ஏஐ வசதி, தேடலில் பலவிதங்களில் எட்டிப்பார்க்கும் போது, இத்தகைய தகவல் சரி பார்ப்பு நோக்கிலான அம்சமும் இருக்க வேண்டும் அல்லவா? ( இது தலையீடா அல்லது தணிக்கையா எனும் கேள்வியும் எழுகிறது.)
ஆனால் கூகுள் ஏஐ மோடு, பிலாக்லே தொடர்பாக இப்படி எந்த எச்சரிக்கையையும் தகவல் சரி பார்ப்பாக வழங்கவில்லை.
நிற்க, ஏஐ தேடியந்திரம் பெர்ப்லக்சிட்டியிடம், பிலாக்லே தொடர்பான தகவல் சரி பார்ப்பு என்ன என கேட்டால், அதன் நோக்கத்தை சுட்டிக்காட்டி விட்டு, ஆனால் கருப்பு பின்னணி மின்சக்தி சேமிப்பு ஆய்வு விவாத்திற்கு உரியது மற்றும் கலாவதி ஆனது என குறிப்பிட்டு விக்கிபீடியாவை மேற்கோள் காட்டுகிறது.
இதற்காக பெர்ப்லக்சிட்டிக்கு ஒரு சபாஷ் போடலாம் என்று பார்த்தால், பிலாக்லே அறிமுக பக்கத்திலும் இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டு அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, சின்ன சேமிப்பாக இருந்தாலும் தேவையானது தான் என்பதோடு, மின்சக்தி சேமிப்பு தேவை எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது உதவுகிறதே என குறிப்பிட்டுள்ளது.
ஆக, பிலாக்லே புத்திசாலித்தனமாக தனது விளக்கத்தை புதுப்பித்து மேம்படுத்தியிருக்கிறது. ஏஐ தேடியந்திர வசதி தான் அதற்கேற்ப மேம்படவில்லை.
இதே போல கருப்பு சாட்ஜிபிடி என தேடிப்பார்த்தால் வேறு ஒரு திசையில் புதிய கதை உருவாகிறது.
—