சினிமா வினாடிவினா நடத்தும் இணையதளம்

ஆங்கில படங்களில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? ஆங்கில படங்கள் பற்றிய விவரங்களும் அத்துபடி என உங்களால் சொல்ல முடியுமா? அப்படி என்றால் உங்கள் திறமைக்கு சவால்விடும் இணையதளம் ஒன்று இருக்கிறது.

ஸ்கிரின்பிளேகுவிஸ் என்னும் அந்த தளம் உங்கள் திரைப்பட அறிவை சோதிக்கும் வகையில் வினாடி வினா பாணியிலான கேள்விகளை கேட்டு பதில் சொல்ல சொல்கிறது.

மொத்தம் 5 வகையான வினாடி வினா இருக்கின்றன.எல்லாமே சுவாரஸ்யமானவை.

முதல் வினாடி வினாவுக்கு பிரேம் பை பிரேம் என்று பெயர்.குறிப்பிட்ட திரைப்படம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட பத்து பிரேம்கள்(காட்சிகள்) தேர்வு செய்யப்பட்டு கான்பிக்க‌ப்ப‌டுகிற‌து.அவ‌ற்றை பார்த்து ப‌ட‌த்தை சொல்ல‌ வேண்டும்.

அடுத்த‌ ப‌குதியில் பிரேமுக்கு ப‌திலாக‌ 5 நொடி ஒட‌க்கூடிய‌ காட்சிக‌ள் அடுத்த‌டுத்து தோன்றும். அவ‌ற்றைப்பார்த்து ப‌ட‌த்தை க‌ண்டு பிடிக்க‌ வேண்டும்.

மூன்றாவ‌து வ‌ழ‌க்க‌மான‌ கேள்வி ப‌தில் ப‌குதி.

அடுத்த‌ ப‌குதியில் திரைப்ப‌ட‌ங்களில் இருந்து பிர‌ப‌ல‌மான‌ வ‌ச‌ன‌ங்க‌ள் மேற்கோள் காட்ட‌ப்ப‌டும் .இந்த‌ ப‌ஞ்ச் ட‌ய‌லாக் மூல‌ம் ச‌ரியான் ப‌ட‌த்தை சொல்ல‌ வேண்டும்.

க‌டைசி ப‌குதி உண்மையிலேயே சுவையான‌து.குறிப்பிட்ட‌ ப‌ட‌ங்க‌ளீல் சேர்ந்து ந‌டித்த‌ ந‌டிக‌ர்க‌ளை கொண்டு அல்ல‌து ஒரே ந‌டிக‌ர் தொட‌ர்பான‌ ப‌ட‌ங்க‌ளை வைத்து ஒரு பிர‌மிடை உருவாக்கி காட்ட‌ வேண்டும்.

ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளை பார்த்து ர‌சித்த‌வ்ர்க‌ள் முய‌ற்சித்து பார்க்க‌லாம். அப்ப‌டியே யார‌வ‌து கோலிவுட் ப‌ட‌ங்க‌ளூக்காக‌ இது போன்ற‌ இணைய‌த‌ள‌த்தை உருவாக்க‌லாம்.

 ——-

http://www.screenplayquiz.com/frame/framehome.php

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *