நோபல் பரிசு வென்றவர்கள் உணர்ந்துள்ளனர்.கலைஞர்கள் உணர்ந்துள்ளனர்.தொழில்முனைவோர் உணர்ந்துள்ளனர்.மாணவ்ர்களும் போராளிகளும் கூட அத்னை உணர்ந்துள்ளனர்.
நீங்களும் கூட அதனை அனுபவித்திருப்பீர்கள்.நாம் எல்லோருமே அதனை உணர்கிறோம்.
அச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்

அது தீவிரமானது.வையம் தழுவியது.தனக்குள்ளே இழுத்துக்கொள்ளக்கூடியது.
எல்லோரும் ஏதாவது ஒரு கட்டத்தில் உணரக்கூடியதும் கோழைகள் தினந்தோறும் அனுபவித்துக்கொண்டிருக்கும் அச்சத்தை தான் இப்படி வர்ணிக்கிறது அச்சமில்லை என்று முழங்க வந்திருக்கும் இணையை இதழான ஃபியர்.லெஸ் ஸ்டோரிஸ்.
அச்சம் எல்லோருக்கும் வருவதால் அச்சமில்லாமல் வாழ்வது சாத்தியமில்லாதது இல்லை என்று நம்பிக்கையோடு சொல்லும் இந்த இதழ் பயமின்றி வாழ்வது நமது உரிமையாகும் என்று ஊக்கப்படுத்துகிறது. இது வெறும் பத்திரிகை மட்டுமல்ல. அச்சதை வெல்வதற்கான ஆயுத கிடங்கு என பியர்லெஸ் பெருமிதத்தோடு தெரிவிக்கிறது.
தன்னம்பிக்கை ஊட்டும் இதழ்களை போல இந்த இணைய பத்திரிகை பயத்தை போக்குவதற்காகவே துவக்கப்பட்டுள்ளது. பக்கத்துக்கு பக்கம் இதில் அச்சத்தை உதற உதவும் ஊக்கம் நிறைந்த கட்டுரைகளையும் கதைகலையும் பார்க்கலாம்.
எல்லாமே தொழில்முனைவோர்,கலைஞர்கள்,விஞ்ஞானிகள் மற்றும் அசாதரணமான ஆபத்துக்களில் சிக்கி தப்பியவர்களின் அச்சம் வென்ற அனுபவத்தை பேசும் கட்டுரைகள்.நமக்குள் மறைந்து கிடக்கும் அச்சத்தை வெல்லும் திறனை இந்த கதைகளும் கட்டுரைகளும் அடையாளம் காட்டுகின்றன.இந்த கதைகளை பகிர்ந்து கொள்பவர்கள் அனைவருமே தங்கள் சூழலை மன உறுதியோடும் எதிர்கொண்டவர்கள்.பயந்து ஓடாதவர்கள்.மனித ஆற்றலை உணர்த்தி நம்முடைய ஆற்றலை நம்மை அறீயாமலேயே தூண்டிவிடக்கூடியவர்கள்.
பெயர் தான் இணைய பத்திரிகையே தவிர இதன் வடிவமைப்பு முன்னணி பத்திரிகையின் நேர்த்தியோடு அமைந்துள்ளது.ஒவ்வொரு இதழையும் தனியே தரவிறக்கம் செய்தும் படிக்கலாம்.நமது உலாவிக்குள்ளேயே கிளிக் செய்தும் படிக்கலாம்.
பக்கங்களை திருப்புவது போல படிக்க படிக்க கிளிக் செய்து கொண்டே போகலாம்.படித்தவை பிடித்திருக்கிறதா? உடனே அதனை நண்பர்களூக்கு இமெயிலிலோ டிவிட்டரிலோ அனுப்பி வைக்கலாம்.பேஸ்புக்கிலும் பகிரலாம்.
கடந்த கால இதழ்களையும் புரட்டிப்பார்க்கலாம்.
உங்களிடம் அச்சத்தை வென்ற கதை இருந்தால் அதனையும் பகிர்ந்து கொள்ளலாம்.தனியே வலைப்பதிவு பக்கமும் இருக்கிறது.
எத்தனையோ இணைய இதழ்கள் இருந்தாலும் இந்த இதழ் மிகவும் விஷேசமாக உள்ளது.பயமின்றி வாழ வழிகாட்டும் இந்த இணைய இதழை புக்மார்க் செய்து கொண்டு அப்படியே நண்பர்களுக்கும் பரிந்துறையுங்கள்.
அச்சம் என்பது மனிதனின் இயல்பான நிலையில்லை என்று சொல்லும் மியான்மார் போராளி சான் சூ கியின் மன உறுதியை நாமும் பெறுவோம்.
——–

0 Comments on “அச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்”
Kumar
very good site, thanks for your info, i subscribed.. 🙂
winmani
அசத்தலான பதிவு ,
நன்றி நண்பரே….
Pingback: Tweets that mention அச்சத்தை போக்க ஒரு இணைய இதழ் « Cybersimman's Blog -- Topsy.com
Pingback: அச்சத்தை போக்க ஒரு இணைய இதழ் : வலைச்சரம்