ஜீரோ வியூஸ் இணைய தளத்தின் பெயரைக் கேட்டதுமே என்ன பொருத்தம் இந்த பொருத்தம் என்று சொல்லத் தோன்றுகிறது. கூகுலுக்கு நிகரான எளிமையான வடிவமைப்பை கொண்டுள்ள இந்த தளத்தை பார்த்ததுமே பூஜ்ஜியம் பார்வைகள் என்று பொருள் தரக்கூடிய இதன் பெயர் சாலப்பொருத்தம் என்பது விளங்கி விடுகிறது.
பூஜ்ஜியம் பார்வை கொண்ட யூடியுப் வீடியோக்களை இணைய வாசிகளின் பார்வைக்காக தொகுத்து தருகிறது இந்த இணைய தளம். அதாவது யாருமே பார்க்காத யூடியுப் காட்சிகளை இந்த தளம் அரங்கேற்றி தருகிறது.
யூடியுப் சார்ந்த தளங்களில் தலைகீழ் மாற்றம் என்றுதான் இதனை சொல்ல வேண்டும்.
சூப்பர் ஹிட்டான படங்களை பார்க்க தியேட்டர்களில் கூட்டம் குவிவது போல வீடியோ பகிர்வு தளமான யூடியுப்பிலும் சூப்பர் ஹிட்டான வீடியோ கோப்புகளே எல்லோராலும் பார்க்க முடிகிறது. இப்படி பல்லாயிரக்கணக்கானோராலும், லட்சக்கணக்கானராலும் பார்க்கப்பட்ட வீடியோ தொகுப்புகள் அநேகம் இருக்கின்றன. இவற்றில் 6 கோடி முறை பார்க்கப்பட்ட “டேவிட் ஆப்டர் டென்டிஸ்ட்’ போன்ற சிகரத்தை தொட்ட வீடியோ கோப்புகளும் பல இருக்கின்றன.
சற்றேக்குரிய 200 முறை தினந்தோறும் யூடியுப் வீடியோக்கள் இணைய வாசிகளால் பார்க்கப்படுகின்றன. அதற்கேற்ப நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோ கோப்புகள் யூடியுப்பில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் என்று பார்வையாளர்களை பெறும் பாக்கியம் எல்லா கோப்புகளுக்கும் கிடைத்து விடுவதில்லை.
ஒரு சிலரது கவனத்தை ஈர்த்து பின்னர் பலரால் பரிந்துரைக்கப்பட்டு அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்படும் வாய்ப்பை பெறும் ஒரு சில வீடியோக்களே இந்த வாய்ப்பை பெறுகின்றன. இப்படி இணைய வாசிகளின் மத்தியில் சுற்றி வரும் வீடியோக்கள் வைரல் வீடியோ என்று குறிப்பிடப்படுகின்றன.
யூடியுப்பில் அவ்வப்போது பிரபலமாகும் வீடியோ கோப்புகளை சுலபமாக பார்க்க வழி செய்யும் யூடியுப் சார்ந்த இணைய தளங்களும் நிறையவே இருக்கின்றன. ஆனால் சூப்பர் ஹிட்டாகும் ஒவ்வொருவீடியோவுக்கும் ஈடாக ஆயிரக்கணக்கான வீடியோ கோப்புகள் யாராலும் பார்க்க படாமல் யூடியுப்பிலே முடங்கி கிடக்கின்றன. இவை அலுப்பூட்டக்கூடியவையாக, யாதொரு பயனும் இல்லாததாக இருக்கலாம். அல்லது கவனிக்கப்படாத பொக்கிஷமாகவும் இருக்கலாம்.
எது எப்படியோ யாருமே பார்க்காத வீடியோ காட்சிகளை தொகுத்து தருவதற்காகவே என்று உருவாக்கப்பட்டுள்ளதுதான் ஜீரோ வியூஸ் இணைய தளம். எல்லா தளங்களும் மிகச் சிறந்த வீடியோ காட்சிகளை தொகுத்து தருவதில் கவனம் செலுத்தும்போது இந்த தளம் மட்டும் ஒருமுறை கூட பார்க்கப்படாத யூடியுப் காட்சிகளை தொகுத்து தருகிறது.
யூடியுப் என்றில்லை பொதுவாகவே இணைய உலகில் டாப் 10, டாப் 25 என்று அதிக ஆதரவு பெற்ற செய்திகளும், தளங்களுக்குமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில் யூடியுப் வீடியோ கடலின் ஆழத்தில் மறைந்து கிடக்கும் வீடியோ காட்சிகளை தேடி தொகுத்து தருகிறது ஜீரோ வியூஸ். அந்த வகையில் யூடியுப் களத்தையே இது ஜனநாயகமயமாக்கி இருப்பதாக கொள்ளலாம்.
ஜீரோ வியூஸ் எனும் லோகோ கொட்டை எழுத்துக்களில் மின்னும் இந்த தளத்தில் வரிசையாக பார்க்கப்படாத வீடியோக்கள் இடம்பெறுகின்றன. மற்ற தளங்களில் அதிக பார்வைகளை பெறும் வீடியோ கோப்புகள் முன்னிலைப் படுத்தப்படும். இந்த தளத்திலோ அதிகம் பார்க்கப்படும் வீடியோ கோப்புகளை பின்னுக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும்.
அந்த இடத்தில் பார்க்கப்படாத புதிய கோப்புகள் வந்துகொண்டே இருக்கும் என்பதுதான் இதன் சிறப்பு.
இணை தள முகவரி : http://zeroviews.biz/

0 Comments on “ஒருவரும் பார்க்காத யூடியுப் வீடியோக்கள்”
inamul hasan
send internet web site தீதீதீ.த்ஞுணூணிதிடிஞுதீண்.ஞிணிட் i cant understand plz post web address in english
Bahrudeen
http://zeroviews.biz/
cybersimman
நன்றி நண்பரே.இப்போது முகவரி சரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
Sign
Useful tips
Nara Yanan
nice