போட்டோஷாப் அறிந்தவர்களுக்கு புகைப்படங்களை எடிட் செய்வதெல்லாம் ஒரு விஷயமே அல்ல. புகைப்படங்களில் திருத்தங்களை செய்வதையோ,பின்னணியை மாற்றுவதையோ சுலபமாக செய்து விடுவார்கள்.உங்களுக்கு போட்டோஷாப் தெரியாவிட்டாலும் இது போன்ற சில டிஜிட்டல் மாயாஜாலங்களை நீங்களும் செய்து பார்க்கலாம்.
இதற்காக என்றே உள்ள இணையதளங்களில் கிளிப்பிங்மேஜிக் புகைப்படங்களில் உள்ள பின்னணியை நீக்க உதவுகிறது.
சில நேரங்களில் குறிப்பிட்ட புகைப்படத்தை அதன் பின்னணி இல்லாமல் பயன்படுத்தும் தேவையும் விருப்பமும் ஏற்படலாம்.அது போன்ற நேரங்களில் கிளிப்பிங்மேஜிக் தளத்திற்கு விஜயம் செய்தால் போதும் ஒரு சில கிளிக்குகளில் புகைப்படத்தை பின்னணியில் இருந்து பிரித்தெடுத்து விடலாம்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் புகைப்படத்தை அந்த தளத்தில் பதிவேற்றி விட்டு,எந்த பகுதி தேவையில்லை என்று வரைந்து காட்டுவது தான்.
புகைப்படத்தை பதிவேற்றுவது மிகவும் எளிது. குறிப்பிட்ட படத்தை அப்படியே கிளிக் செய்து தளத்தில் அதற்கென உள்ள கட்டத்தில் போட்டு விட வேண்டும்.அல்லது புகைப்படத்தை தேர்வு செய்க என அருகே உள்ள வச்தியை பயன்படுத்தி கம்ப்யூட்டர் போல்டரில் உள்ள புகைப்படத்தை தேர்வு செய்து கொள்லலாம்.
அடுத்த கட்டம் தேவையில்லாத பின்னணையை நீக்குவதற்காக சுட்டிக்காட்டுவது. எந்த பகுதி தேவையோ அதில் பச்சை நிறத்தில் மார்க் செய்ய வேண்டும். தேவையில்லாத பகுதியில் சிவப்பு நிறத்தில் மார்ல் செய்ய வேண்டும். அப்படியே கத்திரியால் புகைப்படத்தை கத்திரிப்பது போல் அதைச்சுற்றி இணைய பெனிசிலால் கோடும் வரையலாம்.
இப்போது புகைப்படத்தை சமர்பித்தால் பின்னணி நீக்கப்பட்டு மைய படம் மற்றும் காட்சி தரும்.இந்த படத்தை அப்படியே டவுண்லோடு செய்து கொள்லலாம்.
போட்டோஷாப்பில் கிடைக்ககூடிய துல்லியம் எல்லா படங்களிலும் சாத்தியம் என்று சொல்ல முடியாது ஆனால் நொடியில் புகைப்படத்தை விரும்பிய வகையில் திருத்திக்கொள்ளலாம்.
இணையதள முகவரி:http://clippingmagic.com/

2 Comments on “புகைப்படங்களை எளிதாக எடிட் செய்ய உதவும் இணையதளம்.”
cheenakay
அன்பின் சைபர் சிம்மன் – தகவல் பகிர்வினிற்கு நன்றி – பயன் படுத்துவோம் – நல் வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
நன்றி நண்பரே