Written by: "CyberSimman"

டிவிடி விலையை ஒப்பிட ஒரு இணையதளம்.

பிலிம் அவுட்லெட்! திரைப்படத்துறையின் எதிர்காலம் எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என உணர்த்தும் இன்னொரு தளம் இது.திரைப்பட டிவிடிக்களின் விலையை ஒப்பிட்டு பார்க்கும் சேவையை இந்த தளம் வழங்குகிறது. புதிய திரைப்படங்கள் கொஞ்ச நாட்களில் டிவிடிக்களாக வெளியாகி விடுவதும் அவற்றை இணைய கடைகள் மூலமே வாங்கலாம் என்பது தெரிந்த விஷயம் தான்.ஆனால் விலைகளை ஒப்பிட்டு பார்க்க கூடிய வகையில் அதிக இடங்களில் இருந்து டிவிடிக்கள் கிடைக்கின்றன என்பது உண்மையிலேயே வியப்பானது தான். எல்லோருக்கும் தெரிந்த அமேசானில் இருந்து,சென்ட் […]

பிலிம் அவுட்லெட்! திரைப்படத்துறையின் எதிர்காலம் எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என உணர்த்தும் இன்னொரு தளம் இது.திரை...

Read More »

பாட்டு கேட்டால் டிஷர்ட் தரும் இணையதளம்.

பாண்டேராவோ,லாஸ்ட்.எப் எம்மிலோ அல்லது ஸ்பாட்டிபையிலோ எதில் வேண்டுமானாலும் பாட்டு கேளுங்கள் அந்த தகவலை மட்டும் எங்களிடம் சொல்லுங்கள் உங்கள் அபிமான இசைக்குழுவின் ட் ஷர்ட்களை அனுப்பி வைக்கிறோம் என்று சொல்கிறது ஷர்டிபை இணையதளம். பாண்டோரா ,ஸ்பாட்டிபை போன்ற தளங்களை இணைய வானொலி என்றும் வர்ணிக்கலாம்.பாடல் பரிந்துரை தளங்கள் என்றும் சொல்லலாம்.பிடித்தமான மற்றும் புதிய பாடல்களை கேட்டு ரசிக்க உதவும் இந்த தளங்கள் இசை பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன. ஷர்டிபை இசை பிரியர்களை மனதில் கொண்டு துவக்கப்பட்டுள்ள […]

பாண்டேராவோ,லாஸ்ட்.எப் எம்மிலோ அல்லது ஸ்பாட்டிபையிலோ எதில் வேண்டுமானாலும் பாட்டு கேளுங்கள் அந்த தகவலை மட்டும் எங்களிடம் ச...

Read More »

மாநாடுகளுக்கான டிவிட்டர் சுவர்.

டிவிட்டர் யுகத்திலும் கூட இன்னும் பழைய பாணியிலேயே மாநாடுகளையும்,கருத்தரங்குகளையும் நடத்தி கொண்டிருந்தால் எப்படி? எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இன்னும் உயிரோட்டம் மிக்கதாக இருக்க வேண்டாம்?அதாவது பார்வையாளர்கள் வெறும் பார்வையாளராக மட்டுமே இல்லாமல் பங்கேற்பாளராக மாறி நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துபவர்களோடு கலந்துரையாடி அரங்கமே களைகட்ட வேண்டாம்?கேள்விகள்,பதில்கள்,விவாதங்கள் என பேச்சாளர்களும் பார்வையாளர்களும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் பயன் பெற்றால் தானே நிகழ்ச்சிக்கே பொருள் இருக்கும். இப்படி மாநாடுகளுக்கும்,கருத்தரங்குகளுக்கும்,பொது நிகழ்ச்சிகளுக்கும் கூடுதல் அர்த்தத்தை ஏற்படுத்தி தரும் நோக்கத்தோடு தான் டிவிட்டர் […]

டிவிட்டர் யுகத்திலும் கூட இன்னும் பழைய பாணியிலேயே மாநாடுகளையும்,கருத்தரங்குகளையும் நடத்தி கொண்டிருந்தால் எப்படி? எந்த நி...

Read More »

இமெயிலில் புத்தகம் படிக்க இன்னொரு இணையதளம்.

இமெயில் வாயிலாக புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் இணையதளம் பற்றி படிக்கும் போது டெயிலிட் தளம் பற்றியும் நினைவுக்கு வரலாம். டெய்லிலிட் தளமும் இமெயில் வாயிலாக தவணை முறையில் புத்தகம் படிக்க உதவும் தளம் தான்.உண்மையில் டெய்லிலிட் போல என்று டிப்ரீட் பற்றி தான் சொல்ல வேண்டும்.காரணம் டெய்லிலிட் இந்த பிரிவில் முதலில் தோன்றி முன்னோடி தளம். டெய்லிலிட் தளத்தின் உள்ளடக்கம் மற்றும் அது வழங்கும் அம்சங்களை பார்க்கும் போதும் முன்னோடி தளம் என்றெ சொல்லத்தோன்றும். எந்த […]

இமெயில் வாயிலாக புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் இணையதளம் பற்றி படிக்கும் போது டெயிலிட் தளம் பற்றியும் நினைவுக்கு வரலாம்....

Read More »

இமெயில் வழியே புத்தகம் படிக்க!

வாழைப்பழத்தை உரித்து ஊட்டியும் விடுவது போல புத்தகம் படிப்பதற்கு சுலபமான வழி காட்டுகிறது டிப்ரீட் இணையதளம். ஆசை ஆசையாக புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டு அதை படிக்க நேரம் இல்லாமல் அப்படியே அலமாரியில் வைத்திருக்கும் நபர்கள் இந்த தளத்தை நாடலாம்.அப்படி நாடினால் படிக்க நினைத்த புத்தகத்தை நிச்சயம் படித்து முடித்து விடலாம். ஆனால் உடனடியாக இல்லை.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கமாக!அது இந்த தளத்தின் சிறப்பு. படிக்க நினைத்தவர்கள் மறந்தாலும் சரி,இந்த தளம் புத்தகத்தை ஒவ்வொரு பக்கமான நினைவு படுத்தி […]

வாழைப்பழத்தை உரித்து ஊட்டியும் விடுவது போல புத்தகம் படிப்பதற்கு சுலபமான வழி காட்டுகிறது டிப்ரீட் இணையதளம். ஆசை ஆசையாக பு...

Read More »