இண்டெர்னெட் கால‌ அடிமைகள்

மற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான். மற்றவர்களுடைய புகைப்பட ஆல்பத்தை புரட்டிப்பார்ப்பதும் இதற்கு நிகரான சுவையான அனுபவமா என்பது தெரியவில்லை.
.
டைரியைப் போல் அல்லாமல் தங்களுடைய புகைப்பட ஆல்பத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க எல்லோ ரும் தயாராகவே இருக்கின்றனர். அதிலும், திருமணம் ஆன வீடு களுக்கு செல்லும்போது, கல்யாண ஆல்பத்தை வந்தவர்களுக்கு காண்பிப்பது என்பது உபசரிப்பின் ஒரு அம்சமாகவே அமைந்து விடுகிறது.

இன்னும் சிலர் யார் வந்தாலும் தங்கள் வீட்டில் இருக்கும் ஆல்பத்தை மிகுந்த ஈடுபாட்டோடு கையில் கொடுத்து பார்க்க கட்டாயப்படுத்துவது உண்டு. நாகரீகம் கருதி அதையும் சம்பிரதாய மாக புரட்டி பார்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

எல்லா புகைப்படங்களுமே பார்த்து ரசிக்கத்தக்கவை என்று சொல்வதற் கில்லை. ஆனால் முன்பின் தெரியாத வர்களின் புகைப்பட ஆல்பத்தை தினந்தோறும் ஈடுபாட்டோடு பார்த்து ரசிப்பவர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

இன்டெர்நெட் இந்த புதிய பழக் கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்டெர்நெட் மூலம் புகைப்படங் களை பகிர்ந்து கொள்வதை சுலபமாக வும், பிரபலமாகவும், ஏன் தவிர்க்க இயலாததாகவும் ஆக்கியிருக்கும் ‘ஃபிளிக்கர்’ இணையதளம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

இந்த தளம் புகைப்படங்களை பார்த்து ரசிப்பதை மட்டுமல்லாமல், எட்டிப்பார்க்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாதவர்கள் தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக அரங்கேற்றியிருக்கும் குடும்ப புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருப்பது பலருக்கு பிடித்த மான செயலாக அமைந்திருக்கிறது.

ஒருவருடைய திருமண ஆல்பம், சுற்றுப்பயண புகைப்படங்கள் போன்ற வற்றையெல்லாம் மணிக்கணக்காக பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். இத்தகைய தீவிர ‘ஃபிளிக்கர்’ ரசிகர் களின் பழக்கத் துக்கு போட்டோ லர்க்கிங் என்று புதிதாக பெயரும் கொடுத்திருக்கின் றனர்.

மற்றவர்களுடைய தனிப்பட்ட புகைப் படங்களை ஆர்வத் தோடு கண்டு களிக் கும் இந்த பழக்கம் பலரை அடிமைப் படுத்தியிருக்கிறது. இந்த போட்டோ லர்க்கிங் பற்றி ஆய்வு செய்யும் அளவுக்கு இது இணையவாசிகளை மிகவும் பாதிக்கும் நிகழ்வாக வும் மாறியிருக்கிறது. இதில் தீவிரமாக ஆய்வு செய்துள்ள பிரிட்டன் பல்கலையை சேர்ந்த காலித் மற்றும் ஆலண் டிக்ஸ் இதற்கான காரணங்க ளையும் விரிவாக விளக்கிக் கூறியுள்ளனர்.

ஒருவிதமான உணர்வு மயமான ஆறுதலை இந்த பழக்கம் தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றவர்களுடைய கல்யாண புகைப் படங்களை பார்க்கும்போது தங்களு டைய எதிர்கால வாழ்க்கை பற்றிய கற்பனையில் ஈடுபட முடிவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதேபோல மற்ற புகைப்படங்களை பார்க்கும்போதும் ஏதோ ஒரு விதத்தில் கற்பனையான லயிப்பில் ஈடுபட முடிவதாக அவர்கள் மேலும் கூறுகின்றனர். ‘ஃபிளிக்கர்’ தளமே கதி என கிடப்பவர்கள் இதனை கேள்வியின்றி ஒப்புக்கொள்ளலாம்.

‘ஃபிளிக்கர்’ மட்டுமல்ல, பிரபலமான கூகுல் உள்ளிட்ட தளங்களும் இது போன்ற விசேஷ பழக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. நவீன அடிமைகள் என்று சொல்லக் கூடிய வகையில் இணையவாசிகள் இந்த பழக்கத்துக்கு மீளமுடியாதபடி அடிமையாகி இருப்பதாக கூறப் படுகிறது.

இந்த நிகழ்வு பற்றி நியூ சயிண்ட் டிஸ்ட் பத்திரிகை விரிவான ஆய்வை செய்து சுவையான கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. நியூ சயிண்டிஸ்ட் இன்டெர்நெட் உண்டாக்கியிருக்கும் புதுவிதமான கெட்டப்பழக்கங்கள் பற்றிய கட்டுரையை படிக்கும்போது, இன்டெர்நெட் இத்தனை விதமான அடிமைகளை உருவாக்கியிருக்கிறதா என்னும் வியப்பு ஏற்படலாம்.

ஈகோசர்ப்பர், விக்கிபீடியாஹாலிக்ஸ், சீஸ்பாடர், கிராக்பெரி என இந்த பட்டியல் கொஞ்சம் நீளமாகவே இருக்கிறது. ஈகோசர்ப்பர் என்றால், இன்டெர் நெட்டில் சதா சர்வகாலம் தங்களு டைய பெயரை டைப் செய்து அதற்கு நிகராக எந்த விதமான தகவல்கள் பட்டியலிடப்படுகின்றன என்று பார்த்துக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவர்கள் உங்களில் பலரும் கூட இப்படி ஈகோ சர்ப்பராக இருக்கலாம்.

அதிலும் குறிப்பாக கூகுல் தளத்தை பயன்படுத்துபவர்கள் மத்தியில் இந்த பழக்கம் சற்று அதிகமாகவே இருக்கலாம். கூகுல் சார்ந்த மற்றொரு பழக்கம் சிறிய உடல் கோளாறு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் போவதற்கு பதிலாக முதலில் கூகுலில் தேடிப்பார்ப்பது.

அதாவது நோய்க்கான அறிகுறிகளை கூகுலில் டைப் செய்து அது தரும் முடிவுகளை அலசிப்பார்த்து தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்ன என்று அவர்களாகவே முடிவு செய்துகொள்ள இது உதவுகிறது.

பல நேரங்களில் இது இல்லாத நோயை இருப்பதாக நினைத்து அஞ்ச வைக்கும். அது மட்டுமல்லாமல், மருத்துவரை நேரில் பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னரும் அவர் சொன்னதை நம்பாமல் மீண்டும் கூகுலில் வந்து சரிதான என பரிட்சித்து பார்க்க வைக்கும்.
சில நேரங்களில் மருத்துவர் சொன்ன தற்கும் கூகுல் தெரிவிப்பதற்கும் நேர்மாறாக அமைந்து பிரச்சனையை ஏற்படுத்தலாம். பலர் இந்த புதுவித நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோல கூகுலில் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் ஆகியோரின் பெயரை டைப் செய்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கும் பழக்கமும் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதனை கூகுல் ஸ்டாக்கின் என்று அழைக்கின்றனர். கூகுல் மூலம் ஒருவரை விடாமல் பின் தொடர்வது என்று இதற்கு பொருள். இதை தவிர, கிடைக்கும் விவரங்களில் திருப்தி ஏற்படாமல் தொடர்ந்து விவரங்களை தேடிக் கொண்டே இருப்பதும் நடக்கிறது. இதற்கு இன்போர்னோ கிராபி என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இதேபோல மக்கள் கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவின் அபிமானியாக இருப்பவர்கள் பெரும்பாலான நேரத்தில் அந்த தளத்திலேயே செலவிடுபவர்களாக இருந்து விடுகின்றனர். யார் வேண்டுமானாலும் தகவல்களை இடம்பெறச் செய்து திருத்தக்கூடிய வாய்ப்பு கொண்ட இந்த தளத்தில் ஒரு சிலர் மட்டும் விடாமல் தகவல்களை திருத்தி புதிய தகவல்களை இடம்பெற வைத்துக்கொண்டே இருக்கின்றனர்.

இவர்களைத்தான் விக்கிபீடியா ஹாலிக்ஸ் என்று அழைக்கின்றனர். ஒருவர் விக்கிபீடியா அடிமையா என்று கண்டுபிடிப்பதற்காகவென்றே விக்கிபீடியா தளத்தில் ஒரு பரி சோதனையை வைத்திருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதேபோல, மைஸ்பேஸ் தளத்தில் தங்களுடை உண்மையான முகத்தை யும், உணர்வையும் மறைத்துக் கொண்டு இன்னொருவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் விவரங்களை அளிப்பவர் கள் பலர் இருக்கின்றனர்.

மைஸ்பேஸ் மூலம் மாறுவேடம் போடுபவர்களாக இவர்கள் கருதப் படுகின்றனர். பிரபலமான வீடியோ பகிர்வு தளமான யுடியூப்பும் தன் பங்குக்கு இதுபோன்ற ஒரு பழக்கத்தை உருவாக்கியிருக்கிறது.

தாங்கள் செய்யும் பார்த்து ரசிக்க ஆள் இருக்கும் என்ற நினைப்போடு அலுப் பூட்டக்கூடிய காட்சிகளையெல்லாம் வீடியோவில் பதிவு செய்து யூ டியூப்பில் பதிவேற்றி விடுபவர்கள் கணிசமா கவே உள்ளனர்.

————–

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இண்டெர்னெட் கால‌ அடிமைகள்

  1. எல்லா நல்ல பதிவுகளையும் படித்து அதற்கு கமெண்ட்ஸ்

    எழுதுவதை வழக்கமாக கொண்டவர்களை.

    “Commentsphobia” என்று எதுவும் இல்லாதவரை

    சந்தோஷமே…

    வாழ்த்துக்கள்

    Reply
  2. Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்
    http://www.focuslanka.com

    Reply

Leave a Comment

Your email address will not be published.