ஒவ்வொருவருக்கும் ஒரு வானொலி

camp1வீட்டுக்கொரு வானொலி வசதியை ஏற்படுத்தித்தருவதுதான் கேம்ப் காஸ்டரின் நோக்கம் என்று சொன்னால் ஏதோ இலவச திட்டம் போல தோன்றும். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு வானொலி வசதியை வழங்குவது இந்த அமைப்பின் நோக்கம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
.
உண்மையில் ஒவ்வொருவருக்கும் ஒரு வானொலி அல்ல. அப்படியொரு சுலபதன்மையை வானொலியை நடத்துவதில் கொண்டு வருவது இந்த அமைப்பின் குறிக்கோளாக இருக்கிறது.

வானொலி என்று இங்கே குறிப்பிடப்படும் போது நிகழ்ச்சிகளை கேட்கும் வானொலி கருவியாக புரிந்து கொள்ள கூடாது. நிகழ்ச்சிகளை நடத்தக் கூடிய வானொலி நிலைய மாக எடுத்து கொள்ள வேண்டும்.

நல்ல நிகழ்ச்சிகளை மக்களுக்கு கொண்டு செல்ல விரும்பும் எவரும் தங்களுக்கான சொந்த வானொலி நிலையத்தை நடத்தி கொள்வதற்கான ஒருங்கிணைந்த சாப்ட்வேர் வசதியை கேம்ப்காஸ்டர் வழங்கி வருகிறது.

இன்டெர்நெட்டின் உதவியோடு யார் வேண்டுமானாலும் வானொலி நடத்தலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. அது உண்மையும் கூட. ஆனால் அதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், ஓரளவுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவம் இருந்தால் மட்டுமே, இப்படி சொந்த வானொலியை நடத்துவது சாத்தியமாகும்.

அது மட்டுமல்லாமல் ஓரளவுக்கு கணிசமாக செலவு செய்து தேவையான உபகரணங்களை வாங்கியாக வேண்டும். இந்த தொல்லைகள் எல்லாம் இல்லாமல் நினைத்ததும் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை மட்டுமே கொண்டு வானொலி நிலையத்தை துவக்கி நடத்துவதற்கான ஒருங் கிணைந்த சாப்ட்வேரை கேம்ப் காஸ்டர் அறிமுகம் செய்துள்ளது.

ஓபன்சோர்ஸ் கொள்கையின்படி எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் அறிமுகமாகியிருக்கும் இந்த சாப்ட்வேரை கொண்டு எளிதாக வானொலி நிகழ்ச்சிகளை இணையவாசிகளே ஒலிபரப்பலாம்.

நிகழ்ச்சிகளை தயாரிப்பது மட்டும் தான் அவர்களது வேலை. அதனை ஒளிபரப்ப தேவையான மற்ற தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தையும் இந்த சாப்ட்வேர் பார்த்து கொள்கிறது.

நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளை மற்ற வானொலி நிலையங்கள் போலவே சேமித்து வைத்து கொள்வது, செய்தி ஒலிபரப்புவது மற்றும் பேட்டிகளை ஒலிபரப்புவது ஆகியவையும் இதில் சாத்தியம்.

வானொலி நிலையத்திற்கென்று தனியே இணைய தளம் அமைத்து, ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்களையும் அதில் வழங்க முடியும்.

இது வீடியோ யுகமாக இருக்கலாம். ஆனால் இன்றளவும் வசதி குறைவான, பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்களிடையே செய்திகளை கொண்டு செல்ல வானொலியே சிறந்த வழியாக இருக்கிறது.

போர் மற்றும் பிற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு கருத்து சுதந்திரம் தள்ளாடி கொண்டிருக்கும் இடங்களில் வானொலியே சுதந்திரமான செய்திக்கான சிறந்த வழியாக திகழ்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் சுலபமாக வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பக்கூடிய கேம்ப் காஸ்டர் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை மீடியா டெவலப்மென்ட் லோன் பண்ட் என்னும் அமைப்பு உருவாக்கியுள்ளது.
இத்தகைய முயற்சியில் ஏற்கனவே பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தியுள்ள அமைப்பு இது, வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டர் மூலமே, வானொலி நிலையத்தை நடத்தி கொள்ள உதவி செய்யும் கேம்ப் காஸ்டர் சாப்ட்வேரின் சிறப்பு அம்சம் அது ஓபன்சோர்ஸ் தன்மையை கொண்டது என்பது தான்.

இந்த சாப்ட்வேரை உருவாக்கியது மீடியா டெவலப்மென்ட் லோன் பண்ட் அமைப்பின் ஆதாரநோக்கமும், ஓபன் சோர்ஸ் தன்மையை பரப்புவதுதான். இந்த சாப்ட்வேரின் சித்தாந்தத்தை பரவலாக்கி, மீடியாவை பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுதான் இந்த அமைப்பின் முக்கியமான நோக் கம். இதன் ஒரு பகுதியாகவே வானொலி நிகழ்ச்சிகளை ஒருங்கி ணைத்து தரும் சாப்ட்வேரை வடிவமைத்துள்ளது.

இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி கொண்டு, ஆப்பிரிக்க நாடான சியாராலியோனில் வானொலி ஒன்றை அமைத்துள்ளனர். நித்தமும் யுத்தகளமாக காட்சி தரும் அந்த நாட்டில், வானொலி அமைக்கப் பட்டிருப்பது பெரிய விஷயம் தான். இதற்கு கேம்ப் காஸ்டருக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

மீடியா டெவலப்மென்ட் லோன் பண்ட் அமைப்பு ஏற்கனவே இது போன்ற பல்வேறு புதுயுக சாப்ட் வேர்களை அறிமுகம் செய்துள்ளது. எல்லாமே மீடியாவின் செயல்பாடு களை சுலபமாக்கும் குறிக்கோளை கொண்டவை. இந்த அமைப்பு கேம்ப் வேர் என் னும் சாப்ட்வேரை உருவாக்கி உள்ளது.

இது பத்திரிகை களை நடத்துவதற் கான சாப்ட்வே ராகும். இதில் என்ன சிறப்பு அம்சம் என் றால் எந்த மொழி யில் பயன் படுத்தி னாலும் அதனை யூனிகோட் முறை யில் மாற்றி கொள்ள லாம். இதே போல நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளுக்கான கேம்ப் சைட் எனும் பதிப்பு சாப்ட் வேரை இது அறிமுகம் செய்துள்ளது.

பிரபல பத்திரிகை நிறுவனங்கள் ஆன்லைன் பதிப்புகளையும் நடத்தி வருகின்றன. சிறிய பத்திரிகைகளுக்கு இது கஷ்டமானதாகவே இருக்கிறது. அதனை போக்கும் வகையில் கேம்ப் சைட் சாப்ட்வேர் உருவாக்கப் பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் எளிதாக பயன் படுத்தக் கூடிய பல்வேறு விஷயங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. செய்திகளை பதிப்பிப்பது கட்டுரை களை வெளியிடுவது, சந்தாதாரர்களை நிர்வகிப்பது போன்றவை இதன் மூலம் சுலபமாகிவிடுகிறது.

ஆன்லைன் பதிப்பிற்கான வடி வமைப்பு வேலையையும் இந்த சாப்ட் வேரே பார்த்து கொண்டுவிடுகிறது. இந்த அமைப்பின் மற்றொரு சிறந்த சாப்ட்வேர் டிரீம் ஆகும். இதுவும் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேருக்கு இணையான வசதியை சிறிய நிறுவனங்களுக்கு தரும் நோக் கத்தை கொண்டது.

இந்த சாப்ட் வேரின் மூலம் பத்திரிகை நிறுவனங் கள் தங்களுடைய வாசகர் கள் மற்றும் சந்தாதாரர்களின் விவரங் களை எளிதாக சேகரித்து பத்திரிகை விற்ப னையை கண்காணித்து பயன் படுத்த முடியும்.

இதன் அடிப்படையில் விநியோ கத்தை விரிவுபடுத்துவது, மேம்படுத்து வது ஆகியவை சாத்தியமாகும். ஓபன் சோர்ஸ் சாப்ட்வேரை மைய மாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பு இதில் கொண்ட மற்ற தொழில்நுட்ப ஆர்வலர்களையும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறது. இந்த அமைப்போடு கைகோர்த்து அதன் சேவைகளை மேம்படுத்த உதவி செய்யலாம்.

அது மட்டுமல்ல இதில் பங்கேற்ப தன் மூலம் வருவாய் ஈட்டும் வழியும் உண்டு. எனவே தொழில் நுட்பத்தில் ஞானம் உள்ளவர்கள் இந்த அமைப்பு டன் இணைந்து புதிய சாப்ட்வேர் சேவைகளை உருவாக்குவதிலும் தங்கள் பங்களிப்பை செலுத்தலாம்.

அரசின் கட்டுப்பாடு காரணமாக மீடியா சுதந்திரமாக செயல்பட முடியாத பகுதிகளில் இந்த அமைப்பின் சாப்ட் வேர் சேவைகள் கருத்து சுதந்திரத் திற்காக போராடிக் கொண்டிருப்பவர் களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.

————–
link;
www.campware.org

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஒவ்வொருவருக்கும் ஒரு வானொலி

  1. Thank you very much for the post.

    Reply
  2. Suresh

    பயனுள்ள தகவல்களை kelvi.net இணைக்கலாம்,

    Reply

Leave a Comment to Suresh Cancel Reply

Your email address will not be published.