கூகுல் பூகம்பம் அறிமுகம்

googleeearthquakeதேடல் அனுபவத்தை மேம்படுத்துவதில் கூகுலுக்கு இருக்கும் ஈடுபாடும் திறமையும் தனியானது தான். தேடல் கலையை பட்டை தீட்டுவதில் கூகுலுக்கு
உள்ள அக்கறையும் விசேஷமானது.

தேடல் முடிவுகளை தொகுத்து தருவதோடு தனது கடமை முடிந்து விட்டதாக கூகுல் எப்போதும் நினைத்ததில்லை. தேடல் முடிவுகளை பட்டியலிடுவதைவிட பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்றும் கூகுல் நினைத்ததில்லை.

மாறாக கூகுல் இணையவாசிகளின் தேடல் அனுபவத்தை மேலும் சிறக்க வைப்பதற்கான வழிகளை தேடிக்கொண்டே இருக்கிறது.கூகுல் அவப்போது அறிமுகம் செய்யும் சின்ன சின்ன தேடல் அம்சங்கள் எல்லாம் இதன் விளைவு தான்.

அந்த வகையில் கூகுல் இப்போது நடுங்க வைக்கும் தேடல் சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதாவது பூகம்பங்கள் பற்றிய பொருத்தமான தகவக்களை தேடும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

பொதுவாக கூகுலிலோ வேறு தேடியந்திரத்திலோ பூகம்பங்கள் என்று தேடினால் பூகம்பம் ஏற்படுவது எப்படி? பூகம்பத்தின் வரலாறு, ஆகிய தகவல்களை த‌ரும் முடிவுகளே வந்து நிற்கும்.

ஆனால் இப்போதோ கூகுலில் பூகம்பங்கள் என்று டைப் செய்தால் வரும் முடிவுகளோ மிகவும் வித்தியாசமாக இருக்கும். மிகவும் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பங்கள் ப‌ற்றிய தகவல்கள் முதலில் வந்து நிற்பதோடு , பூகோளரீதியாக அருகாமையில் நிகழ்ந்த பூகம்பங்கள் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

இதை தவிர இடத்தின் பெயரையோ. பூகம்பத்தின் மைய பகுதியையோ குறிப்பிட்டும் தேடிக்கொள்ளலாம்.

பூகம்பம் போன்ற நிகழ்வுகளில் அன்மைக்கால தகவல்கள் எத்தனை பொருத்தமாக இருக்கும் என்பதை உணர்ந்தே கூகுல் இதனை அறிமுகம் செய்துள்ளது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுல் பூகம்பம் அறிமுகம்

  1. ஆகா, இந்த சேவை எனக்கு மிகவும் தேவை. உங்களின் தகவலுக்கு மிக்க நன்றி. மேலும் இனிவரும் காலங்களில் பூகம்பங்கள் அதிகமாக வாய்ப்புகள் அதிகம். எங்களுடைய ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவைக்கு http://www.iibc.in/itws/ இந்த தகவல் மிக்க பேருதவியாக இருக்கும். நன்றி.

    with care and love,

    Muhammad Ismail .H, PHD,

    Reply

Leave a Comment

Your email address will not be published.