வணக்கம் ரோபோ டீச்சர்..

1-robotபாடம் நடத்தும் ரோபோ ஒன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இல்லை ரோபோ டீச்சரை அப்படியெல்லாம் ம‌ரியாதை இல்லாமல் சொல்லக்கூடாது.

எனவே ரோபோ மிஸ் அறிமுகமாகியிருக்கிறார் என்றே குறிப்பிடலாம்.

இந்த டீச்சரின் பெயர் சாயா.சாயாவை படைத்த பிரம்மா டோக்கியோ பல்கலையில் இருக்கிறார். அவரது பெயர் ஹிரோஷி கோபயாஷி.

ரோபோ ஆய்வில் நிபுணரான கோபயாஷி வியப்பு,பயம்,கோபம்,மகிழ்ச்சி,வருத்தம் ஆகிய ஆறு குணங்களை கொண்டவளாக இந்த டிச்சரை உருவாக்கியிருக்கிறார்.ஆகையால் ஏற்கனவே அறிமுகமான ஹோண்டாவின் அசிமோ ரோபோக்களை எல்லாம் விட இவர் சிற‌ந்தவர்.உணர்வுள்ள ரோபோவாயிற்றே.

கொழு கொழு தோற்றம் கொண்ட இளம் பெண்ணைப்போல இந்த ரோபோ ரப்பராலான முகத்தை கொண்டவர். இவருக்குள் மறைந்திருக்கும் நுண்ணிய மோட்டார்களில் தான் ரோபோவின் ஆறு குணங்களும் அடங்கியிருக்கிறது.

சமிபத்தில் டோக்கியோ பள்ளியில் சாயா மிஸ் அறிமுகமான போது மாணவர்க‌ள் அவரது வகுப்பை மிகவும் ரசித்து மகிழ்ந்திருக்கின்றனர்.
சாயா மற்ற மிஸ்களைப்போலவே அவ‌ர்களின் பெயரை கூப்பிட்டு வருகையை குறித்துக்கொண்டிருக்கிறார்.

மாணவர்கள் கூச்சல் போட்டபோது கோபத்தோடு வாயை மூடுங்கள் என்று அதட்டியிருக்கிறார்.

மொத்ததில் மாணவர்களுக்கு இந்த டீச்சரை முகவும் பிடித்துவிட்டது.

சாயா தொடர்ந்து பாடம் நடத்துவதற்கான வாய்ப்பு எப்படி என்று தெரியவில்லை. தற்போதுள்ள ரோபோக்களோடு ஒப்பிடும்போது சாயா மேம்பட்ட‌வர் என்றாலும் ஒரு நர்சரி ஆசிரியரோடு இவரை ஒப்பிட முடியாது. இவ்வளவு ஏன் எல்.கே.கி படிக்கும் குழ்ந்தையோடு கூட ஒப்பிடமுடியாது. அதிக பட்சமாக டீச்சரைப்போல நடிக்க மட்டுமே சாயாவால் முடியும். எதையும் கற்றுத்தர முடியாது.

ஆனால் எதிர்காலத்தில் சாத்தியமாகலாம். அந்த உத்தேசத்தோடு தான் சாயா உருவக்கப்பட்டிருக்கிறார்.

எல்லா ரோபோக்களுமே சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளைகள் தான். மனிதர்களைப்போலவே சிந்திக்கக்கூடிய ரோபோ தொலைதூர கணவு என்றாலும்
அந்த திசையில் விஞ்ஞானம் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வருகிறது.

இந்த முயற்சியில் ஜப்பான் முன்ன்னியில் இருக்கிறது. அங்கு வயதானவர்களை கவனித்துக்கொள்ள ரோபோ பயன்ப‌டுத்த்ப்பட்டு வருகிறது.தொழிற்சாலைகளிலும் பெரும்ளவில் பயன்படுகிறது.

2015 ல் எல்லா ஜப்பானிய இல்லங்களிலும் ரோபோ இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

நிற்க தற்போது ஆசிரியர் அவதார்ம் எடுத்திருக்கும் சாயா இதற்கு முன் வரேவேற்பாளாராக இருந்தவர். ஆம் 15 ஆண்டு உழைப்பிற்கு பிறகு சாரா வரவேற்பறையாளினியாக பேரசிரியர் கோபயாஷியால் உருவாக்கப்பட்டாள்.

வரேவேற்பரைகளில் கேட்கப்படக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்லி அவர்களுக்கு வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டவர் இப்போது ஆசிரியாகியிருக்கிறார்.

———–

link;
http://www.youtube.com/watch?v=mG13EZ4Xy9c

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “வணக்கம் ரோபோ டீச்சர்..

  1. உங்களின் இந்த பதிவு யூத் விகடன் இணையத்தில் வந்திருக்கிறது…வாழ்த்துக்கள்…

    Reply
  2. தனியாக டியூசன் எடுக்காதே ..??

    Reply
  3. sha

    நல்ல இணயதளம், அருமையான பதிவுகள்.
    //
    வியப்பு, பயம், கோபம், மகிழ்ச்சி, வருத்தம் ஆகிய ஆறு குணங்களை கொண்டவளாக இந்த டிச்சரை உருவாக்கியிருக்கிறார்.//
    ஐந்து தன் உல்லது சரிசெய்யவும்.

    Reply

Leave a Comment

Your email address will not be published.