வீட்டுக்கு வரும் கூகுல் வானம்

google-sky-1கொல்லைப்புற வானவியல். பெயர் நன்றாக இருக்கிறதா? கூகுல் அறிமுகம் செய்திருக்கும் புதிய சேவை இதைத்தான் சாத்தியமாக்குகிறது.
கூகுல் தேடியந்திரம், கூகுல் மேப்ஸ் மற்றும் கூகுல் எர்த் என்னும் பெயரில் வரைபட சேவையை வழங்கி வருவது தெரிந்ததே.
கூகுல் மேப்ஸ், உலகின் வரை படங்களை வழங்குகிறது என்றால், கூகுல் எர்த் பூமியின் செயற்கைக் கோள் காட்சிகளை வழங்குகிறது.
கூகுல் எர்த் சேவையின் மூலம் விண்ணில் இருந்து பார்ப்பது போல பறவை பார்வையாக பூமியை காண முடியும்.
பின்னர் திரைப்படங்களில் ஜூம் செய்யப்படுவதை போல குளோசப் காட்சிக்கு மாறி, குறிப்பிட்ட பகுதியில் தெருக்களை கூட, ஏன் வீடுகளை கூட பெரிதாக்கி பார்க்க முடியும்.
கூகுலின் சேவை பலரை வீட்டில் இருந்தபடியே புவி முழுவதும் உலாவ வைத்திருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக இப்போது கூகுல், அனைவரையும் வீட்டில் இருந்தபடி வானத்தில் உலாவும் வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது.
அதாவது உங்கள் வீட்டுக்குள் ளேயே வானத்தை கூகுல் கொண்டு வந்திருக் கிறது. வீடு என்றால், உங்களிடம் உள்ள கம்ப்யூட்டரில் என்று பொருள்.
கூகுல் எர்த் சேவையின் ஒரு விரிவாக்கமாக “ஸ்கை’ என்னும் பெயரில் இந்த புதிய சேவை அறிமுகமாகியிருக்கிறது.
பெயரை போலவே இந்த சேவை வானத்தை, புகைப்பட காட்சியாக முன்வைக்கிறது. கூகுல் ஸ்கையை டவுன்லோடு செய்து கொண்டால் உங்கள் கம்ப்யூட்டருக்குள் வானம் அடங்கிவிடும் சாரி விரிவடைந்து விடும்.
அதன் பிறகு மவுஸ் நகர்த்தலில் வானத்தில் உள்ள கோடிக்கணக் கான நட்சத்திரங்களையும், லட்சக் கணக்கான பிரபஞ்சங்களையும் பார்த்து ரசிக்க முடியும்.
ஒரு காலத்தில் ஓய்வான மன நிலையில் இருக்கும் போது, வானத்தை அன்னாந்து பார்த்து ரசிக்கும் வழக்கம் பலருக்கு இருந் தது. மனதை லேசாக்கி ஒரு வித மகிழ்ச்சியை தரக்கூடிய அனுபவம் இது. இயற்கையோடு ஒரு புள்ளி யாக நாமும் கரைந்துவிடும் உணர்வை தரும் உன்னத அனுபவ மாக இதனை உணர்ந்தவர்கள் உண்டு.
ஆனால் நகரத்து நெரிசலிலும், நவீன வாழ்க்கையின் நெருக்கடியி லும் வானம் பார்ப்பதற்கு இடமும் இல்லை, நேரமும் இல்லை.
இந்த குறையை போக்கும் வகை யில் கூகுல் ஸ்கை கம்ப்யூட்டரில் வானத்தை பளிச்சிட வைத்திருக்கிறது.
வானவியல் சார்ந்த இணைய தளங்கள் பலவற்றில் வானத்தின் காட்சிகளையும், நட்சத்திரங்களின் புகைப்படங்களையும் காண முடியும். ஆனால் அவையெல்லாம் வெறும் புகைப்படங்கள்தான்.
கூகுல் ஸ்கை அவ்வாறு இல்லாமல், வானத்தை உண்மையா கவே பார்க்கக்கூடிய உணர்வை ஏற்படுத்தித் தரும் வகையில் வானத்தின் புகைப்படங்களை ஒன்றிணைத்து தருகிறது.
இதற்காக லட்சக்கணக்கான புகைப்படங்கள் ஒன்றாக வைத்து தைக்கப் பட்டிருக்கின்றன.
பராசக்தி படத்தில் வரும் வசனத்தை போல, இந்த சேவையால் கூகுலுக்கு என்ன பயன்? கூகுலுக்கு என்ன அக்கரை என்று கேட்க தோன்றலாம். கூகுலுக்கு இதனால் நேரடியான பலன் எதுவும் இல்லை.
நிறுவனமாக கூகுலிடம் ஒரு நல்ல பழக்க இருக்கிறது. ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் கூகுல், அவற்றில் மிக முக்கியமாக, ஊழியர்கள் 10 சதவிகித வேலை நேரத்தை தங்கள் சொந்த விருப்பம் சார்ந்த ஆய்வுப் பணிகளில் பயன் படுத்தி கொள்ள அனுமதிக்கிறது. இவ்வாறு ஆய்வில் ஈடுபட்ட கூகுல் பொறியாளர்கள் சிலர் இந்த திட்டத்தை முன்வைக்கவே கூகுல் அதனை ஏற்று கொண்டு முழு சேவையாக உரு வாக்கி, கூகுல் ஸ்கையை இணைய வாசிகளுக்கு வழங்கியிருக்கிறது.
இணையவாசிகளுக்கு புதிய வகை யான தகவல்களை கொண்டு செல்ல வேண்டும் என்னும் விருப்பத்தின் விளைவாக கூகுல் ஸ்கை அறிமுகம் செய்யப்பட்டி ருப்பதாக கூகுல் எர்த் திட்டத்தின் மேலாளர் ஒருவர் கூறுகிறார்.
கூகுல் வரைப்படங்களின் விசேஷ அம்சம் என்னவென்றால், அந்த வரை படத்தின் மீது இருப்பிடம் சார்ந்த தகவல்களை இணைய வாசிகள் ஒட்டவைத்து, முற்றிலும் புதிய சேவை களை உருவாக்கி கொள்ளலாம்.
கூகுல்ஸ்கையிலும், இதே போல இணையவாசிகள் தாங்கள் விரும் பும் தகவல்களை ஒட்டவைத்து முற்றிலும் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி கொள்ள முடியும்.
வானத்தை மட்டும் பார்த்து ரசிக்கா மல் அதில் உள்ள நட்சத்திரங்கள் பற்றிய விவரம் அல்லது நட்சத்திரம் வெடித்து சிதறுவதன் விவரிப்பு ஆகியவற்றை ஒட்டவைக்கலாம்.
இவ்விதமாக, புதிய வால் நட்சத்திரம் தென்படுகிறது என்றால், அதன் வருகையை கூகுல் ஸ்கையில் உணர்த்தலாம்.
இது போன்ற வாய்ப்புகளால் கூகுல் எர்த், வானவியலை உங்கள் வீட்டின் பின்புறத்திற்கே கொண்டு வந்துவிட வாய்ப்பு இருக்கிறது.
அதுதான் கொல்லைபுற வானவியல்.

=———–

link;
http://earth.google.com/sky/index.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.