மாற்று இன்டெர்நெட்

netஇன்டெர்நெட் முகவரி தேவை யில்லை. வைரஸ் பயம் இல்லை. ஸ்பேம் தொல்லையும் கிடையாது. இப்படி சொல்லக்கூடிய மாற்று இன்டெர்நெட் அறிமுகமாகியிருக் கிறது. தற்போதைய இன்டெர்நெட்டின் வடிவமைப்பு மற்றும் அதனோடு சேர்ந்த அனைத்து வகையான தொல்லை களிலிருந்தும் விடுபட்ட இந்த புதிய இன்டெர்நெட்டை இந்திய நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்திருக்கிறது என்பதுதான் விசேஷமானது.
.
நெட் ஆல்டர் சாப்ட்வேர் லிமிடெட் நிறுவனம் நெட் ஆல்டர் என்னும் பெயரில் இந்த மாற்று இன்டெர்நெட் சேவையை முன்வைத்துள்ளது. பொதுவாக இன்டெர்நெட் சேவையை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கென தனியே இன்டெர்நெட் முகவரிகள் தேவை. இன்டெர்நெட் முகவரிகளை டைப் செய்தால் மட்டுமே எந்த ஒரு இணைய தளத்தையும் அணுக முடியும். ஆனால் நெட் ஆல்டர் சேவையில் இத்தகைய டொமைன் பெயர்களுக்கு இடமில்லை. இன்டெர்நெட்டில் இருப்பது போல இதில் பிரவுசர் மட்டுமே உண்டு. இந்த பிரவுசரை டவுன்லோடு செய்து பயன்படுத்த ஆரம்பித்தால் நெட் ஆல்டர் வழங்கும் மாற்று இன்டெர்நெட்டுக்குள் நாமும் நுழைந்து விடலாம்.

அதன் பிறகு இ-மெயில் அனுப்புவதி லிருந்து புதிய தகவல்களை பதிவேற்றுவது வரை அனைத்துக்கும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். விருப்பப்பட்டால் இந்த சேவைக்குள் நமக்கு என்று தனியே ஒரு வலைப் பின்னலையும் அமைத்துக் கொள்ளலாம். வர்த்தக நிறுவனங் களுக்கு இது பேருதவியாக இருக்கும். பியர் டு பியர் என்று சொல்லப்படும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுவதால் இந்த சேவைக்குள் வைரசோ வீணான இ-மெயில்களோ நுழைய வாய்ப்பில்லை என்று நெட் ஆல்டர் சொல்கிறது.

தற்போது புழக்கத்தில் இருக்கும் இன்டெர்நெட் பல்வேறு வகையான தாக்குதல்களுக்கும், வைரஸ்களுக் கும் இதர மோசடிகளுக்கும் இலக்காகி வருவதால் இத்தகைய மாற்று இன்டெர் நெட்டுக்கான தேவை உண்டாகியிருக்கிறது.
இன்டெர்நெட் பயன்படுத்தும் விதத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்கக்கூடிய வழி என்று நெட் ஆல்டர் இதனை வர்ணிக்கிறது. ஆனால் நடைமுறையில் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதை பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே தெரியும்.

————–

link;
http://www.netalter.com/Index.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “மாற்று இன்டெர்நெட்

  1. DURAI RAJ.N

    Sir,I want any ohter details and like it.Durai Raj,Star Studio,R.S.Mathur-621709,Ariyalur Dist,Tamilnadu,INDIA

    Reply
    1. cybersimman

      what kind of details,can you be specify pls

      Reply

Leave a Comment

Your email address will not be published.