ஒரு பகுதி இன்டெர்நெட்

sசர்ச்சைட் புதியதொரு தேடியந்திரம் என்றாலும் அதன் த‌ன்னம்பிக்கை என்ன‌வோ அதிகமாகவே இருக்கிறது. உலகம் இண்டெர்நெட்டை பார்க்கும் விதத்தை மாற்றக்கூடியாதாக இந்த தேடியந்திரம் த‌ன்னைத்தானே வர்ணித்துக்கொள்கிறது.

வர்ணனை இருக்கட்டும் தேடியந்திரத்தின் சிறப்பு என்னவென்று கேட்கிறீர்களா?

முழு இன்டெர்நெட்டையும் தேடித்தருவதாக கூகுல் உள்ளிட்ட தேடியந்திரங்கள் மார்தட்டிக் கொள்ளும் நிலையில் இந்த புதிய தேடியந்திரம் மிகவும் அடக்கமாக ஒரு பகுதி இன்டெர்நெட்டை மட்டுமே தேடித்தருவதாக தெரிவிக்கிறது.

அதாவது, இன்டெர் நெட்டின் சிறந்த பகுதியை மட்டுமே முன் வைப்பதாக வும் இதுவே தன்னுடைய தனித் தன்மை என்றும் சர்ச்சைட் கூறுகிறது.

இன்டெர் நெட்டில் தேட இது ஒரு புதிய வழி என்கிறது சர்ச்சைட்.

மற்ற தேடியந்திரங் களில் தேடுவது போல தான் இந்த தேடியந்திரத்திலும் தேடலாம். ஆனால் அதன் பிறகு, குறிப்பிட்ட துறை (அ) பிரிவு (அ) பகுதியை குறிப்பிட்டு தேடலை சருக்கி கொண்டு விடலாம். இதன் மூலம் தொடர்பில்லாத தேடல் முடிவுகளை பெற நேராமல் பொருத்தமான முடிவுகளை மட்டுமே பெறலாம் என்கிறது சர்ச்சைட்.

அதே போல், இணை தளத்தின் உரிமையாளர்கள் இந்த தேடியந்திரத்திடம் தங்கள் தளத்தை சமர்ப்பிக்கும் போது அதற்கான அறிமுக குறிப்புகளை அவர்களே எழுதி, அது எந்த பிரிவின் கீழ் பட்டியலிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கலாம்.

இவ்விதமாக ஒருவர் தனது தேடியந்திரம் எப்படி பட்டியலிடப்படுகிறது என்பதை தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். யோசித்து பார்த்தால், இணைய வாசிகளை விட, இணைய தள உரிமையாளர்களுக்கே இந்த சேவை சாதகமானதாக இருக்கும் போல் தோன்றுகிறது.

தேடல் வசதியோடு நாள்தோறும் புதிய தளங்களையும் தெரிந்துக்கொள்ள முடிகிறது.ஏற்கன‌வே அறிமுகமான தளங்கள் பற்றிய குறிப்புகளையும் பார்க்கலாம்.

——–

link;
http://searchsight.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஒரு பகுதி இன்டெர்நெட்

  1. எங்க தான் இந்த மாதிரி செய்திகளை பிடித்து போடுறீங்களோ !!

    Reply

Leave a Comment

Your email address will not be published.