டிவிட்டர் அறுவை சிகிச்சை

artsurgeonscnnநீதிமன்ற அறையிலிருந்து டிவிட்டர் செய்யப்பட்டிருக்கிறது. திரைப்பட ஷýட்டிங்களிலிருந்து டிவிட்டர் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் விட ஆச்சர்யப்படும் வகையில் ஆப்பரேஷன் தியேட்டரில் இருந்து டிவிட்டர் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி போர்டு மருத்துவமனை அறுவை சிகிச்சையை நேரடியாக டிவிட்டர் செய்த முதல் மருத்துவமனை என்னும் பெருமையை பெற்றிருக்கிறது.
டிவிட்டருக்கு எத்தனையோ பெருமைகள். அதைவிட அதிகமான பலன்கள். இவற்றில் அறுவை சிகிச்சை குறிப்புகளை பதிவு செய்வதும் சேர்ந்திருக்கிறது.
உயிர் காப்பதற்கான அறுவை சிகிச்சையை டிவிட்டர் செய்தது எப்படி என்று அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் ஏற்படும்.
நேரடி ஒளிபரப்பிற்கு நிகரான உடனடித்தன்மை டிவிட்டரில் உண்டு. இந்த உடனடி பகிர்வு தான் டிவிட்டரின் தனித்தன்மையும் கூட.
இந்த தன்மையே அறுவை சிகிச்சையை டிவிட்டர் செய்ய வைத்திருக்கிறது. அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரின் ஹென்றி போர்டு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் குழு சார்பில் அங்கு நடைபெற்ற புற்றுநோய் அறுவை சிகிச்சையை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
டிவிட்டரின் பயன்பாட்டு எல்லை மேலும் மேலும் விரிந்து கொண்டே வரும் நிலையில் அறுவை சிகிச்சையின்போது டிவிட்டர் செய்வது என்பது அதனளவிலான புதுமையை கொண்டிருப்பதோடு, அதற்குரிய பயனையும் பெற்றிருக்கிறது.
இந்த புதுமையையும் அறுவை சிகிச்சை நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கமும் தான் போர்டு மருத்துவமனையின் முயற்சிக்கு உந்து சக்தியாக அமைந்திருக்கிறது.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கட்டியை அகற்ற ரோபோ உதவியுடன் அந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
இளம் டாக்டர்களுக்கும், மருத்துவ துறையினருக்கும் பாடமாக இருக்கக்கூடிய சிக்கலான அறுவை சிகிச்சை என்பதால் அப்போது லஸ்வேகாஸ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருந்த மருத்துவ மாநாட்டில் பங்கேற்ற மருத்துவ பிரதிநிதிகளை பார்வையாளராக கொண்டு அறுவை சிகிச்சையின்போது பின்பற்றப்பட்ட நுட்பங்கள் டிவிட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டன. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு டாக்டர்கள் டாக்டர் லவுங்கனி, டாக்டர் பீபாடி ஆகியோர் குறிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.
தகவல் தொடர்புக்கு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் ஹென்றி போர்டு மருத்துவமனைக்கு ஏற்கனவே நல்ல பரிட்சயம் இருக்கிறது. மருத்துவமனை செயல்பாடுகள் மற்றும் சிகிச்சை முறைகள் வீடியோ பகிர்வு தளமான யூடியூப் மூலமும் பாட் காஸ்டிங் மூலமும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனை சார்பில் ஒரு வலைப்பதிவும் இருக்கிறது.
இவற்றோடு வலையிடும் தளங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 2007-ம் ஆண்டிலேயே டிவிட்டர் முகவரி கணக்கும் மருத்துவமனை சார்பில் பெறப்பட்டது. நிறைய விவாதம் மற்றும் ஆய்வுக்குப் பிறகு 2008ல் டிவிட்டர் கணக்கு இயக்கப்பட்டு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. முதலில் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்புகளும் செய்திகளும் மட்டுமே டிவிட்டர் செய்யப்பட்டன.
பின்னர் செய்தி வெளியீட்டை கடந்து டிவிட்டரை பயன்படுத்த முடியாதா என யோசித்து, ஆலோசித்ததன் விளைவாக ரோபோ மூலமான புற்றுநோய் அறுவை சிகிச்சை டிவிட்டர் செய்யப்பட்ட முடிவு செய்தனர்.
மற்ற நிகழ்வுகளை டிவிட்டர் செய்வதை விட, இது கொஞ்சம் தீவிரமானது. மருத்துவ மாநாட்டிற்கு வருகை தந்தவர்களுக்கு பயிற்சி நோக்கில், டிவிட்டர் மூலம் பகிரப்படட அறுவை சிகிச்சை குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்பட்டது.
உங்களை ஒரு மருத்துவ மாணவராக நினைத்துக்கொண்டு, இந்த அறுவை சிகிச்சை கற்பனை செய்து கொண்டீர்கள் என்றால், இதன் முக்கியத்துவத்தை நீங்களும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
அறுவை சிகிச்சையின் முக்கிய கடடங்கள் சார்ந்த நுட்பங்கள் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும்போது செய்முறை விளக்கத்துடன் கூடிய பாடமாக அது மேலான கல்வி அனுபவத்தை தர வல்லது.
அரசு மற்றும் சம்பந்தப்படட நோயாளியின் அனுமதி பெற்றே இது நிகழ்ந்துள்ளது.
இந்த அறுவை சிகிச்சையை தொடர்ந்து, டாக்டர்கள் டிவிட்டரை நாடுவது வாடிக்கையாகுமா என்பது தெரியவில்லை. ஆனால் அறுவை சிகிச்சையை டிவிட்டர் செய்வது பல விதங்களில் பயன் தரக்கூடும்.
மருத்துவ துறையினருக்கான பயிற்சியாக அமைவதோடு, குறிப்பிட்ட அந்த சிகிச்சை முறைக்கு இலக்காக உள்ள சக நோயாளிகளுக்கும் பயன்தரக்கூடியதாக அமையும். சிகிச்சை முறைகளை தெரிந்துகொள்வது, அவர்களின் பயத்தை குறைக்க உதவும். அதிலும் டிவிட்டர் குறிப்புகளோடு வீடியோ கோப்புகளை இணைத்தல் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
டிவிட்டர் மூலம் மருத்துவர்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய குறிப்புகள், நோய் மற்றும் சிகிச்சை தொடர்பான மூடு திரையை விளக்குவதோடு டாக்டர் -நோயாளிகள் இடையிலான புரிதலையும் அதிகரிக்கும்.
டாக்டர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வலைப்பதிவை பயன்படுத்தலாம் தான்! ஆனால் எத்தனை மருத்துவர்களால் வலைப்பதிவிற்காக நேரம் ஒதுக்க முடியும். வலைப்பதிவு செய்வதை விட நோயாளியின் உயிர் காக்க நேரத்தை ஒதுக்குவது முக்கியம் அல்லவா?
ஆனால் 140 எழுத்துக்கள் மட்டுமே கொண்ட டிவிட்டர் மருத்துவ துறைக்கு மிகவும் ஏற்றது. அதோடு டிவிட்டரின் நேரடித்தன்மை டாக்டர்களுக்கும் சரி, நோயாளிகளுக்கும் சரி பயனுள்ளதாகவே இருக்கும்.

]
——————
link;
http://www.cnn.com/2009/TECH/02/17/twitter.surgery/index.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.