ஜாக்சனால் உண்டான எரிமலை.

இண்டெர்நெட்டில் ஏற்பட்ட எரிமலை. மைக்கேல் ஜாக்சன் தொடர்பான தேடலை கூகுல் இப்படித்தான் வர்ணித்துள்ளது.

பாப் மன்னன் ஜாக்சன் மரணத்தை தொடர்ந்து அவரை பற்றிய தகவலகளை அறிய ரசிகர்கள் இண்டெர்நெட்டை முற்றுகையிட்டனர். இப்படி அளவுக்கதிகமான ரசிகர்கள் ஒரே நேரத்தில் வந்து குவிந்ததையடுத்து இண்டெர்நெட்டின் வேகம் முடங்கிப்போனது.

ஜாகசன் மரணத்தை அடுத்து இண்டெர்நெட்டில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி அடுத்த்டுத்து செய்தி வந்த நிலையில் இப்போது கூகுல் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளது.

ஜாக்சன் மரண செய்தி வெளியான உடன் இணையவாசிகள் பெரும் எண்ணிக்கையில் படையெடுத்ததை நிலையில் தேடியந்திரமான கூகுலுக்கு வருகை தந்து தேடியவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்ததாம்.கூகுல் இணையபக்கத்தின் மீது யாரோ திட்ட‌மிட்டு தாக்குத‌ல் ந‌ட‌த்தியுள்ள‌ன‌ர் என்று அச்சம் ஏற்ப‌டும் அள‌வுக்கு இணைய‌வாசிக‌ளின் வ‌ர‌வு இருந்த‌தாதாக‌ கூகுல் சார்பில் ந‌ட‌த்த‌ப்ப‌டும் வ‌லைப்ப‌திவில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஒரே நேர‌த்தில் ல‌டச‌க்க‌ண‌க்கான‌வ‌ர் ஒரே இணைய‌ ப‌க்க‌த்தை அணுகுவ‌து போல‌ ஏற்பாடு செய்து அந்த‌ ப‌க்க‌த்தை முட‌ங்க‌ச்செய்ய‌ முடியும்.இதர்கு டினையல் ஆப் சர்வீஸ் அட்டாக் என பெயர். இப்ப‌டிப்ப‌ட்ட‌ தாக்குத‌ல் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌தாக‌ கூகுல் நினைத்துவிட்ட‌து.

ஜாக்ச‌ன்தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ள் தேட‌ப்ப‌ட்ட‌ திவிர‌த்தை வ‌ர்ணிக்க‌வேண்டும் என்றால் இண்டடெர்நெட்டில் ஏற்ப‌ட்ட‌ எரிம‌லை என்றே கூற‌ வேண்டும் என‌ கூகுல் கூறியுள்ள‌து.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஜாக்சனால் உண்டான எரிமலை.

  1. // டினையல் ஆப் சர்வீஸ் அட்டாக் //

    ஒரு புதிய term தெரிந்து கொண்டேன்… நன்றி…

    Reply

Leave a Comment

Your email address will not be published.