காட்ஃபாதராக,கட்டபொம்மனாக நீங்கள்…

yuகடற்கரையில் நடிகர்களின் கடஅவுட் மீது கை போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்வத‌ற்கே அகமகிழ்ந்து போகிறவர்கள் நாம். அப்படியிருக்க திரைப்படத்தில் அபிமான நடிகர்கள் இருக்கும் இடத்தில் ரசிகர்கள் தங்களை பொருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிஅடைத்தால் எப்படி இருக்கும்.

யூஸ்டார் இணைய‌த‌ள‌ம் இந்த‌ அற்புத்தை தான் சாத்திய‌மாக்குகிறது. அதாவ‌து ஹாலிவுட் ர‌சிக‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு பிட‌த்த‌ ப‌டத்தில் பிடித்த‌மான‌ பாத்திர‌த்தில் தாங்க‌ளே ந‌டித்து அதை ப‌ட‌த்தில் இட‌ம்பெற‌வும் செய்ய‌ முடியும்.

ஒரு திரைப்ப‌ட‌த்தில் ர‌சிக‌ர்க‌ள் இட‌ம்பெறுவ‌து எப்ப‌டி சாத்திய‌ம் என‌ அதிச‌யித்துப்போக‌ வேண்டாம். இது திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கான் கரோக்கி என‌ வைத்துக்கொள்ளுங்க‌ளேன்.

க‌ரோக்கி ம‌கிமை ப‌ற்றி நீங்க‌ள் அறிந்திருக்க‌லாம்.ஜாப்பானில் தோன்றிய‌ இசை புதுமை இது. குளிய‌லறை பாட‌க‌ர்க‌ளுக்கான‌ க‌ண்டுபிடிப்பு என‌ வைத்துக்க்கொள்ளலாம்.

ஒருவ‌ருக்கு எந்த‌ பாட‌ல் மிக‌வும் பிடித்திருக்கிற‌தோ அந்த‌ பாட‌லை அவ‌ர் தேர்வு செய்து பாட‌லாம் . அப்போது பாட‌லின் பின்ன‌ணி இசை அப்ப‌டியே இருக்கும் ஆனால் பாட‌க‌ரின் குர‌லுக்கு ப‌திலாக‌ பாடுப‌வ‌ரின் குர‌ல் ஒலிக்கும். கரோக்கி சாதனாம் இதை சாத்தியாமாக்குகிற‌து.

ஜ‌ப்பானில் இத்த‌கைய‌ க‌ரோக்கி மைய‌ங்க‌ள் மிக‌வும் பிர‌ப‌ல‌ம்.
இதே போல‌ இப்போது திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கான‌ க‌ரோக்கி சாப்ட்வேரை யூஸ்டார் இணைய‌த‌ல‌ம் உருவாக்கியுள்ள‌து.

இந்த‌ சாப்ட்வேர் ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ளில் எதாவ‌து ஒரு மைய‌ பாத்திர‌த்தை நீக்கிவிட்டு அந்த‌ இட‌த்தில் ர‌சிகர்க‌ள் த‌ங்க‌ளை இட‌ம்பெற‌ வைக்க‌ வாய்ப்ப‌ளிக்கிற‌து.அதாவ‌து ர‌சிக‌ர்க‌ள் அந்த‌ வேட‌த்தில் ந‌டிக்க‌ முடியும்.

இதை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து மிக‌வும் சுல‌ப‌மான‌து. யூஸ்டார் இணைய‌த‌ள‌த்திற்கு சென்று அந்த‌ சாப்ட்வேரை ட‌வுண்லோடு செய்துவிட்டு திரைப்ப‌ட‌த்தையும் அதில் ந‌டிக்க‌ விரும்பும் வேட‌த்தையும் தேர்வு செய்து ந‌டிக்க‌ வேண்டும். அத‌ன் பிற‌கு நிங்க‌ள் ந‌டித்த‌ அந்த‌ ப‌ட‌த்தை பார்த்து ம‌கிழ‌லாம். ந‌ண்ப‌ர்க‌ளுக்கு அனுப்பி ம‌கிழ‌லாம்.

நின‌த்துப்பாருங்க‌ள் புக‌ழ்பெற்ற‌ காட்பாதர் போன்ற‌ ப‌ட‌ங்களில் ம‌ர்ல‌ன் பிராண்டோ இட‌த்தில் உங்க‌ளை வைத்துப்பார்த்தால் எப்ப‌டி இருக்கும். அதிலும் திரைப்படத்திலும் ந‌டிப்பிலும் ஆர்வ‌ம் கொண்ட‌ ர‌சிக‌ர்க‌ளுக்கு இந்த‌ சேவை எத்த‌கைய‌ ம‌கிழ்ச்சியை த‌ர‌க்கூடும் .

ந‌ம்முர் பாணியில் யோசித்துப்பார்த்தால் இனி புது முக‌ங்க‌ள் வாய்ப்பு கேட்டுச்செல்லும் போது க‌ட்ட‌பொம்ம‌ன் வ‌ச‌ன‌த்தை பேசிக்காட்டுவத‌ற‌கு ப‌தில் ப‌ட‌த்தில் க‌ட்ட‌பொம்ம‌ன்னாக‌ ச‌வாஜிக்கு ப‌தில் ந‌டித்திஅகாட்டி அந்த‌ வீடியோவை இய‌க்குன‌ரிட‌ம் காட்டலாம்.

ஆனால் சிவாஜி இட‌த்தில் ந‌டிக்க‌ அசாத்திய‌மான‌ துணிச்ச‌ல் தேவை.

—–
link;
www.yoostar.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.