நலம் நலமறிய டிவிட்டர்

Macy's Passport Fashion Showஎலிஸிபெத் டெய்ல‌ர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.அறுவை சிகைச்சை வெற்றி பெற்று அவர் ப‌ரிபூர்ண நலத்துடன் இருக்கிறார்.இத‌னை அவ‌ரே டிவிட்டர் மூலம் தனது ரசிகர்களுக்கு ‘தெள்ளத்தெளிவாக’ தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் தனது சிகிச்சையில் ஊகங்களுக்கோ வதந்திகளுக்கோ இடம் கொடுக்காமல் தவிர்த்திருக்கிறார்.அதே நேரத்தில் ரசிகர்களுக்கு தேவையான தகவலை தானே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

நிமிடத்திற்கு நிமிடமான தகவல்களை பகிர்ந்து கொள்ள வழி வகுக்கும் டிவிட்டர் சேவையை பயன்படுத்துவதால் என்ன பயன் என்று எழக்கூடிய கேள்விக்கு சரியான பதிலாக இதனை கருதலாம்.

கணவன்மார்களை கழட்டி விட்டதற்காக மட்டும் அல்லாமல் நடிப்பாற்றலுக்காகவும் பெயர் பெற்ற டெய்லருக்கு 73 வயதாகிறது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இன்னமும் செல்வாக்கு இருக்கிறது.அவரைப்பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர்.

அப்படியிருக்க டெய்லர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டார் என்றால் பரபர்ப்பு ஏற்படத்தானே செய்யும்.பரபர்ப்பை விடுங்கள் வதந்திகளுக்கும் பஞ்சமிருக்காது தானே.ஆனால் டெய்லர் விஷயத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

காரணம் டெய்லரே தனது டிவிட்டர் பக்கத்தில் தான் அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதை தெரிவித்திருந்தார்.அதன் பிறகு அறுவை சிகிச்சை முடிந்து விட்டது தான் நலமுடன் இருக்கிறேன் என்ற தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

அதோடு தனக்காக பிராத்தனை செய்த உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

டெய்லர் மருத்துவமனியிலிருந்து எப்போது வீடு திரும்புகிறார், வீட்டில் என்ன செய்கிறார் எனபது பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.எப்படியும் அவரே அதனை டிவிட்டரில் வெளியிடப்போகிறார்.

டெய்லரை பற்றி அறிய விரும்பும் ரசிகர்கள் பத்திரிக்கை செய்தி மற்றும் பேட்டிகளுக்காக தவம் கிடக்க வேண்டும் என்றில்லை.அவரை டிவிட்டரில் பின் தொடர்ந்தாலே போதும்.

டெய்லரும் தான் சொல்ல நினைப்பதை அழகாக 140 எழுத்துக்களில் பகிர்ந்துகொள்ளலாம்.

பிரபலங்களும் நட்சத்திரங்களும் டிவிட்டரை பயன்படுத்துவதில் உள்ள அணுகூலங்கள் இவை, இன்னும் எண்ணற்றவை இருக்கின்றன.

சிங்கத்தின் கூகையிலேயே அதனை சந்திப்பது போல பிரபலங்களிடமிருந்தே அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள அவர்களின் டிவிட்டர் பதிவுகள் உதவும்.

குணம் மணம் நிறைந்த தேநீரைப்போல அந்த பதிவுகள் பாசங்கற்றதாக பிரபலங்களின் மனப்போக்கு ,உள்ளக்கிடக்கையை உணர்த்தக்கூடியதாக இருக்கும்.

டெய்லரைபொருத்தவரை அவரது டிவிட்டர் பதிவுகள் மைக்கேல் ஜாக்சன் மரனமடைந்த போது ஜாக்சன் மீது அவரெத்தனை அபிமானம் கொண்டிருந்தார் என்பதை உணர்த்தியது.ஜாக்சனுக்காக உருகி வழிந்து அவர் எழுதிய டிவிட்டர் செய்திகள் இழப்பின் துயரத்தை துல்லியமாகவே தெரிவித்தன.

அதே போல தனது பெயரில் அறிமுகமாகும் புதிய வாசனை திரவத்தின் புதிய பெயரை குறிப்பிட்டு இனி இது உங்கள் திடவியம் என அவர் தெரிவித்திருந்தது ரசிகர்களை நெருக்கமாக உணர வைத்திருக்கும்.

டெய்லர் பதிவுகளில் எனக்கு பிடித்தவை இவை.

காதணீகள் இல்லத வாழ்க்கை வெறுமையானது.

நகைச்சுவையே வாழ்க்கையை காப்பாற்றுகிறது.

——–

link;
http://twitter.com/DameElizabeth

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “நலம் நலமறிய டிவிட்டர்

  1. அர டிக்கெட்டு !

    நல்ல செய்தி

    Reply

Leave a Comment

Your email address will not be published.