பாத‌ங்க‌ளுக்காக‌ ஒரு இணைய‌த‌ள‌‌ம்.

shoebox_superஇண்டெர்நெட்டிற்கு என்று சில அபூர்வ ஆற்றல்களும் அருங்குணங்களும் இருக்கின்றன.அவற்றின் அடையாளமாக அமிந்திருக்கிறது ‘அன் ஈவன் ஃபீட்’இணையதளம்.

பெரும்பாலனோருக்கு இந்த இணையதளம் பயன் படாது என்றாலும் முதல் பார்வையிலேயே இதன் சிறப்பை எவரும் உணர முடியும்.99 சதவீதம் பேர் இதனை பயன்படுத்த வாய்ப்பில்லை எனறாலும் இந்த தளத்தை காண்பவர்கள் ‘அட அற்புதமான தளமாக இருக்கிறதே என்று வியக்கலாம்.

அதெப்படி பலருக்கு பயன் தராத ஒரு தளம் அற்புதமானதாக இருக்க முடியும்.காரணம் இல்லாமல் இல்லை.பெரும்பாலோனேரிடம் இருந்து வேறுபட்டு நிற்பவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டு தங்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனைக்கு பரஸ்பரம் தீர்வு காண உதவுகிறது இந்த தளம்.அது தான் இத‌ன் சிற‌ப்பு.

உங்க‌ளில் யாருக்காவ‌து சாராச‌ரியை விட‌ உய‌ர‌மான‌ ந‌ண்ப‌ர்க‌ள் இருக்க‌லாம்.அசாத‌ர‌ண‌ உய‌ர‌ம் கொண்ட‌ அத்த‌கைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் கால‌ணியை வாங்க‌ ப‌டாத‌ பாடு ப‌டுவ‌தை நீங்க‌ள் க‌வ‌னித்திருக்க‌லாம்.வ‌ழ‌க்க‌மாக‌ கிடைக்கும் அள‌விலான‌ கால‌ணிக‌ளை காட்டிலும் அதிக‌ அள‌வு கொண்ட‌ கால‌ணிக‌ளை ப‌ட்டுமே இவ‌ர்க‌ள் அணிய‌ முடியும் என்ப‌தால் அத‌ற்காக‌ க‌டை க‌டையாக‌ ஏறி இற‌ங்க‌ வேண்டியிருக்கும்.இல்லை என்றால் த‌னியே ஆர்ட‌ர் செய்து வாங்க‌ வேண்டும்.

ந‌டைமுறையில் இது மாபெரும் சோத‌னையாக‌ அமைய‌லாம்.ம‌ற்ற‌வ‌ர்க‌ளைப்போல் க‌டைக்கு போனோமா பிடித்த‌ கால‌ணியை வாங்கினோமா என்று இருக்க‌ முடியாம‌ல் அசாத‌ர‌ன‌மான‌ அள‌வு கால‌ணி எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவ‌து வேத‌னையான‌து தான்.

இத்த‌கைய‌ ந‌ப‌ர்க‌ள் ஒன்று சேரும் போது த‌ங்க‌ள் பிர‌ச்ச‌னையை ப‌கிர்ந்து கொள்வ‌தில் ஒருவித‌ மன நிம்ம‌தி அடைவார்க‌ள் அல்ல‌வா?அதோடு பிர‌த்யேக‌ அள‌வு கொண்ட‌ கால‌ணி கிடைக்கும் க‌டைக‌ள் ப‌ற்றிய‌ குறிப்புகளையும் ம‌கிழ்ச்சியோடு ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.

கூட்ட‌த்தில் சேராம‌ல் த‌னித்து நிற்ப‌வ‌ர்க‌ளுக்கு தான் இத‌ன் அருமை முழுமையாக‌ தெரியும். ஆனால் இத்த‌கைய‌ ச‌ந்திப்புக‌ள் அபூர்வ‌மான‌வை.பெரும்பாலும் த‌ற்செய‌லாக‌ நிக‌ழ்ப‌வை.

ம‌ற்ற‌வ‌ர்க‌ளில் இருந்து மாறுபட்ட‌ குணாதிசிய‌த்தை பெற்ற‌ ப‌ல‌ பிரிவின‌ர் உள்ள‌ன‌ர்.அவ‌ர்க‌ளுக்குள் தொட‌ர்பு ஏற்ப‌டுத்திக்கொள்ளும்போது ப‌ல‌ அதிச‌ய‌ங்க‌ள் நிக‌ழ‌லாம்.இந்த‌ இட‌த்தில் தான் இண்டெர்நெட் வ‌ருகிற‌து.

ஒத்த‌ க‌ருத்துள்ள‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தொட‌ர்பு கொள்ள‌ இண்டெர்நெட் சிற‌ந்த‌ வ‌ழி அல்லவா?அதிலும் ந‌டைமுறை உல‌கில் தொட‌ர்பு கொள்ள‌ முடியாத‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் இணைப்பு பால‌த்தை உருவாக்கி கொள்ள‌ இண்டெர்நெட்டை விட்டால் வேறு வ‌ழி இல்லை.

அதை தான் ‘அன் ஈவ‌ன் ஃபீட’ த‌ள‌ம் செய்கிற‌து.

உய‌ர‌மான‌ ம‌னித‌ர்க‌ள் இருப்ப‌து போல‌ மிக‌வும் விநோத‌மான‌ குறைபாடான‌ இரு கால்க‌ளும்(பாத்ங்கள்) இருவேறு அள‌வு கொண்ட‌வ‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌ர் தெரியுமா?இவ‌ர்க‌ள் ஒரே கோடி கால‌ணியை வாங்கி ப‌ய‌ன்ப‌டுத்த‌ முடியாது.ஒவ்வொரு கால் பாதமும் ஒரு அள‌வு கொண்டிருப்ப‌தால் வேறு வேறு கால‌ணியை வாங்கி ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும்.இத‌னால் எப்ப‌டியும் ஒரு கால‌ணி வீணாகும்.வேறு வ‌ழி கிடையாது.

ஆனால் இதே போன்ற‌ குறைபாடு கொண்ட‌ இருவ‌ர் த‌ங்க‌ளுக்குள் கால‌ணியை மாற்றிக்கொள்ள முடிந்தால் இருவ‌ருமே ப‌ய‌ன் பெற‌லாம் அல்ல‌வா?அப்போது இருவ‌ருமே கால‌ணி வீணாவ‌தை த‌டுக்க‌ முடியும்.ச‌ரி தான் .ஆனால் ஒரே மாதிரியான‌ கால் அள‌வு இல்லாத‌ ஒருவ‌ரை எப்ப‌டி க‌ண்டுபிடிப்ப‌து.இந்த‌ குறைபாடு கொன்ட‌வ‌ர்க‌ள் அபூர்வ‌ம் என்னும் போது எப்ப‌டி இது சாத்திய‌ம்.

இத்த‌கைய‌ குறைபாடு கொன்ட‌வ‌ர்க‌ள் எங்கெங்கோ இருக்க‌லாம்.அனால் அவ‌ர்க‌ள் ப‌ரஸ்ப‌ர‌ம் தொட‌ர்பு கொள்வ‌த‌ற்கான‌ வாய்ப்பு மிக‌ மிக‌ குறைவு.உண்மையில் அற்ப‌ சொற்ப‌மே.

அன் ஈவ‌ன் ஃபீட் இணைய‌த‌ள‌ம் இத்த‌கைய‌ ந‌ப‌ர்க‌ள் ச‌ங்க‌மிக்கும் இட‌மாக உருவாக்க‌ப்ப‌டுள்ள‌து.

இந்த‌ த‌ள‌த்தில் வேறு வேறு அள‌வு கொண்ட‌ பாத‌ங்க‌ளை கொன்ட‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளை ப‌திவு செய்து கொள்ள் வேண்டும்.அத‌ன் பிற‌கு யார் யாரின் பாத‌ அள‌வுக‌ள் பொருந்துகின்ற‌ன‌வோ அவ‌ர்க‌ள் கால‌ணிக‌ளை வாங்கி மாற்றிக்கொள்ள‌லாம்.இந்த‌ முறையிலும் ந‌டைமுறை சிக்க‌ல் உண்டு. ஆனால் அவ‌ற்றை வெற்றி கொள்ள‌க்கூடிய‌ வ‌கையில் அதிக‌ அள‌வில் உறுப்பின‌ர்க‌ள் ப‌திவு செய்து கொண்டால் எல்லோரும் ப‌ய‌ன்பெற‌ முடியுமென்று இந்த‌ த‌ள‌த்தில் குறிப்பிட‌ப்ப‌ட்டூள்ள‌து.

ஒருவ‌ரின் உய‌ர‌ம் ,பாத‌ அள‌வுக‌ள் ஆகிய‌வ‌ற்றை குறிப்பிட்டு ப‌திவு செய்து கொள்ளும் வ‌ச‌தி அளிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
——-

link;
http://www.unevenfeet.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.