ஆப்பிளின் ஐபேட்; புதிய தகவல்கள்

லேப் டாப் கம்ப்யூட்டரும் இல்லை;செல்போனும்(ஸ்மார்ட்போன்) இல்லை;இரண்டுக்கும் இடைப்பட்ட புதிய‌தொரு மொபைல் சாதனம்.

 ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய சாதனாமான ஐபேடை அதன் தலைமை அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் இப்படி தான் வர்ணித்துள்ளார்.இது மாய‌த்த‌ன்மை மிக்க‌ புர‌ட்சிக‌ர‌மான‌ தாயாரிப்பு என்றும் புக‌ழ்ந்து த‌ள்ளியுள்ளார் ஜாப்ஸ். ஐபேட் பெய‌ரே அச‌த்தாலாக‌ தான் உள்ள‌து.

ஐபாட் ம‌ற்றும் ஐபோன் ஆகிய‌வ‌ற்றின் தொட‌ர்ச்சியாக‌ ஆப்பிள் அறிமுக‌ம் செய்துள்ள‌ புதிய சாத‌ன‌ம் இது.பெரும் எதிர்பார்ப்பு ம‌ற்றும் ப‌ர‌ப்புக்கு இடையே இந்த‌ சாத‌ன்ம் அறிமுக‌மாகியுள்ள‌து.

பொதுவாக‌வே ஆப்பிளின் புதிய‌ அறிமுக‌ம் என்றாலே ஒரு மித‌மிஞ்சிய‌ எதிர‌பார்ப்பு இருக்க‌த்தான் செய்யும்.சில ஆண்டுகளூக்கு முன் ஐபோன் அறிமுக‌மான‌ போது திருவிழாவிக்கு நிக‌ரான் கோல‌க‌ல‌ நிகழ்வாக‌ அமைந்த‌து.

ஐபோட் வெற்றியை தொட‌ர்ந்து ஆப்பிள் செல்போன் ச‌ந்தையிலும் நுழைய‌லாம் என்று ஆருட‌ம் கூற‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ நிலையில் ஆப்பிள் ஐபோனை க‌ள‌மிற‌க்கி அச‌த்திய‌து. ஐபோனின் வெற்றி இன்று மாபெரும் தொழில்நுட்ப‌ ச‌காப்த‌மாக‌ திக‌ழ்கிற‌து.ஐபோனின் வ‌ருகை செல்போன் ச‌ந்தையையே மாற்றி அமைத்து விட்ட‌து.

 இந்த‌ பின்ன‌னியில் தான் கொஞ்ச‌ கால‌மாக‌வே ஆப்பிள் புதிய‌தொரு சாஅத‌ன‌த்தை அறிமுகம் செய்ய‌ உத்தேசித்திருப்ப‌தாக‌ செய்திக‌ள் வெளியாயின‌.ந‌ம்மூரில் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளின் காத‌ல் க‌தை ப‌ற்றிய‌ அனுமான‌ங்க‌ளை வெளியிடும் உற்சாக‌த்தோடு ஆப்பிளின் புதிய‌ சாத‌ன்ம் ப‌ற்றி ர‌க‌சிய‌ த‌க‌வ‌ல்க‌ளும் யூக‌ங்க‌ளும் வெளியாகி வ‌ந்த‌ன‌.

இத‌னிடையே ஆப்பிள் 27 ம் தேதி இந்த‌ சாத‌ன‌ம் வெளியாகும் என்று அதிகார‌பூர்வ‌மாக‌ அறிவித்த‌ நிலையில் இந்த‌ யூக‌ங்க‌ள் வ‌லுப்பெற்ற‌ன‌.புதிய‌ வகை டேப்ல‌ர் க‌ம்ப்யூட்ட‌ராக‌ இது இருக்கும் என்ப‌தை பெரும்பாலான‌ யூக‌ங்க‌ள் உறுதி செய்த‌ன‌.

இந்த‌ டேப்லெட் க‌ம்ப்யூட்ட‌ர் ஈ புக் வ‌ச‌தி கொன்ட‌தாக‌ இருக்கும்,வீடியோ கேம் ம‌ற்றும் செய‌லிக‌ளில் புதிய‌ பாய்ச்ச‌லாக‌ அமையும் என்றெல்லாம் பேச‌ப்ப‌ட்ட‌து. அதைவிட‌ முக்கிய‌மாக‌ நாளித‌ழ்க‌ள் மாறு ப‌த்திரிக்கைக‌ளுக்கான‌ புதிய‌ வ‌ழியாக‌வும் விள‌ங்கும் என்றும் க‌ணிக்க‌ப்பட்ட‌து.

இந்நிலையில் ஆப்பிள் வ‌ழ‌க்க‌ப்ப‌டி அத‌ன் நட்ச‌த்திர‌ த‌லைமை அதிகாரியான‌ ஸ்டீவ் ஜாப்ஸ் ப‌ர‌ப்புக்கு ஈடுகொடுக்கும் வ‌கையில் புதிய‌ சாத‌னாமான‌ ஐபேடை அறிமுக‌ம் செய்துள்ளார். ஐபேட் டேப்லெட் வ‌கையை சேர்ந்த‌தாக‌ அமைந்துள்ள‌து.

ஐபோனை விட‌ ச‌ற்றே பெரிதாக‌ இருந்தாலும் தோற்ற‌த்திலும் வ‌டிவ‌மைப்பிலும் அத‌னை ஒத்திருக்கிற‌து.அரை இன்ச் அக‌ல‌ம் கொண்ட‌ ஐபேட் லேப்டாப்பை விட‌ எடை குறைந்த‌தாக‌ உள்ள‌து.வை பீ ம்ற்றும் ப்ளுடூத் வ‌ச‌தி கோன்டுள்ள‌து. அத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம் என்று பார்த்தால் பத்து ம‌ணி நீடிக்க‌ கூடிய‌ பேட்ட‌ரி,அழகான‌ தொடு திரை,ஐபுக் என்னும் புத்த‌க‌ வாசிப்பு வ‌ச‌தி என‌ அடுக்கி கொண்டே போக‌லாம்.

இதில் வீடியோ கேம் ஆட‌லாம். ப்ட‌ம் பார்க்க‌லாம். விடியோ கேமை பொருத்த‌வ‌ரை வேக‌த்தை கூட்டும் வ‌ச‌தி கூடுத‌லாக‌ உள்ள‌து.ப‌ட‌ம் பார்க்க‌ ஏற்ற‌ பெரிய‌ திரை கூடுத‌ல் சிற‌ப்ப‌ம‌ச‌ம். புத‌த‌க‌ வ‌ச‌தியை பொருத்த‌வ‌ரை புத்த‌க‌ அல‌மாரி போன்ற‌ அமைப்பிலிருந்து புத்த‌கத்தை உருவும் வ‌ச‌தியும் ப‌க்க‌ங்க‌ளை தொட்டு திருப்பும் வ‌ச‌தியும் குறிப்பிட‌த்த‌க்க‌து,

எல்லாவ‌ற்றையும் விட‌ ஆச்ச‌ர்ய‌ம் இத‌ன் விலை தான். ஆயிர‌ம் டால‌ராவ‌து இருக்கும் என்று கூற‌ப்ப‌ட்ட‌ நிலையில் 499 டால்ர் முத‌ல் கிடைக்க‌ உள்ள‌து.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஆப்பிளின் ஐபேட்; புதிய தகவல்கள்

  1. nanrasitha

    ஆனால் இது flash applicationஐ சப்போர்ட் செய்யது.

    Reply
  2. அடோப் நிறுவனம் அதை செய்ய முயற்சித்து கொண்டிருக்கிறது

    Reply
  3. எப்போதுமே தொழில்நுட்ப செய்திகளை முந்திக்கொண்டு முதலில் சொல்லிவிடுகிறீர்கள், ரொம்ப அருமை சிம்மன்

    மேலும் தகவல்களுக்கு http://forums.axleration.com/viewtopic.php?f=64&t=379

    Reply
  4. ஆப்பிள் தகவலுக்கு நன்றி நண்பரே

    Reply
  5. \லேப் டாப் கம்ப்யூட்டரும் இல்லை;செல்போனும்(ஸ்மார்ட்போன்) இல்லை;இரண்டுக்கும் இடைப்பட்ட புதிய‌தொரு மொபைல் சாதனம்.\
    தமது இலாபத்தை அதிகரிபதற்கு

    I PAD பற்றி அதிகமாக நல்ல விமசனகள் இல்லை. தகவலுக்கு நன்றி

    Reply

Leave a Comment

Your email address will not be published.