ஒபாமாவிடம் பணியாற்ற வாய்ப்பு

 டிவிட்டர்காரர் என்பது சரியா?இல்லை டிவிட்டராளர் என்பது பொருத்தமாக இருக்குமா?

அதாவது டிவிட்டரெர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பதத்திற்கு இந்த இரண்டு சொற்களீல் எது மிகவும் பொருத்தாமாக‌ இருக்கும்?

இரண்டில் எது சரியாக இருந்தாலும் சரி ,அமெரிக்கர்களுக்கு இந்த பொறுப்பை ஏற்கும் பொன்னான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதிபரின் டிவிட்டராளாராக விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம்

 என்று அதிபர் மாளீகை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறும்பதிவு சேவையான டிவிட்டரை ஒருவர் சொந்தமாகவும் பயன்படுத்தலாம்.இல்லை த‌னது சார்பில் டிவிட்டர் செய்யும் பொருப்பை யாரிடமாவது ஒப்படைக்கலாம்.

இப்ப‌டி டிவிட்ட‌ர் செய்யும் பொருப்பை ஏற்ப‌வ‌ர்க‌ள் டிவிட்டெரெர் என‌ அழைக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். பொதுவாக பெரிய‌ ப‌த‌வியில் இருப்ப‌வ‌ர்க‌ள் இவ்வாறு டிவிட்ட‌ர் செய்ய‌ ஒருவ‌ரை அம‌ர்த்திக்கொள்கின்ற‌ன‌ர்.அரசியல் தலைவர்களூக்கு உரை எழுதி த‌ருவ‌து போல் என்று வைத்துக்கொள்ளுங்க‌ளேன்.

 அமெரிக்க‌ அதிப‌ர் ஒபாமா சார்பிலும் ஒருவ‌ர் டிவிட்ட‌ர் செய்து வ‌ருகிறார்.மியா காம்பிர‌னாரோ என்னும் அந்த‌ டிவிட்டெரெர் ப‌த‌வியில் இருந்து வில‌கி கொள்வ‌தை அடுத்து அந்த‌ இட‌த்தில் புதிதாக‌ ஒருவ‌ரை நிய‌மிக்க‌ வெள்ளை மாளிகை முடிவு செய்துள்ள‌து.இத‌ற்கான‌ அறிவிப்பும் வெள்ளை மாளைகை இணைய‌த‌ள‌த்தில் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

அதிப‌ரின் ம‌ற்ற‌ மீடியா குழுவோடு இணைந்து செய‌ல்ப‌ட‌ வேண்டும் என்றும் உட‌ன‌டியாக‌ ப‌ணிக்கு சேர‌ வேண்டும் என்றும் கூற‌ப்ப‌ட்டுள்ள‌து. அதிப‌ர் டிவிட்ட‌ர் செய்யாமால் இருக்க‌ முடியாத‌ல்ல‌வா?
அமெரிக்கர்களுக்கு மட்டும் தானே இந்த வாய்ப்பு என்று கவலைப்பட வேண்டாம். எதிர்காலத்தில் நம்மூரில் கூட டிவிட்டராள‌ர்களை நியமிக்க பிரபலங்களூம் அரசியல் தலைவர்களும் முன்வரலாம்.அதற்கு தயாராக இருங்கள்.

ஒபாமா தேர்த‌ல் பிர‌ச்ச‌ர‌த்தின் போதே டிவிட்ட‌ர் உள்ளிட்ட‌ வ‌லைப்பின்ன‌ல் சேவைக‌ளை திற‌ம்பட‌ பிர‌ச்சார‌க்குழு ப‌ய‌ன்ப‌டுத்தி பார‌ட்டை பெற்ற‌து.ஒபாமாவே டிவிட்ட‌ர் செய்வ‌தாக் முத‌லில் க‌ருத‌ப்ப‌ட்ட‌து. ஆனால் பின்ன‌ர் அவ‌ர‌து சார்பில் டிவிட்ட‌ர் செய்வ‌து தெரிய‌ வ‌ந்த‌து.

இது தொட‌ர்பான‌ முந்தைய‌ ப‌திவை பார்க்க‌வும்.

http://cybersimman.wordpress.com/2010/01/19/twitter-46/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஒபாமாவிடம் பணியாற்ற வாய்ப்பு

  1. Abiramii

    U.S.A is going down country .Soon they will like african countries so guys if you join they will give their salary an xchange offers like their stano,x wifes,x lovers,x gril freinds .
    This is not a joke

    Reply

Leave a Comment to Abiramii Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *