சச்சினுக்கு டிவிட்டரில் குவிந்த‌ பாராட்டு

கிரிக்கெட் விளையாட்டை அறியாதவர்கள் கூட யார் இந்த சச்சின் என்று கேட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு டிவிட்டரில் சச்சின் அதிக்கம் செலுத்தியிருக்கிறார்.

குவாலியர் ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்ததை தொடர்ந்து டிவிட்டர் முழுவதும் சச்சின் புராணம் தான்.

பாலிவுட் பிரபலங்களில் தொடங்கி சாமன்யர்கள் வரை டிவிட்ட்ரில் சச்சின் புகழ் பாடியிருந்தனர். ரசிகர்கள் சச்சின் சாதனையை கொண்டாடி கொண்டிருந்த வேளையில் இவர்கள் டிவிட்டர் பதிவு மூலம் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் சச்சின் த கிரேட் என வர்ணித்து தனது மகள் சச்சினுக்காக கவிதை ஒன்றை எழுதியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அமிதாப் ப‌ச்ச‌ன் த‌ன‌து வ‌லைப்ப‌திவில் ச‌ச்சினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவ‌ர் ம‌க‌ன் அபிஷேக் த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌திவில் ச‌ச்சினை நாட்டிஒன் பெருமை என்று வ‌ர்னித்திருந்தார்.

 ந‌டிகை பிரிய‌ங்கா சோப்ரா ப‌ட‌பிடிப்பு தள‌த்திலிருந்து ச‌ச்சின் ஆட்ட‌த்தை பார்க்க‌வில்லை ஆனால் அவர‌து சாத‌னை ப‌ற்றி கேள்விப‌ட்டேன் மிக்க‌ ம‌கிழ்ச்சி ,ச‌ச்சின் வாழும் கால‌த்தில் நானும் வாழ்வ‌தை நினைத்து பெருமைப‌டுகிறேன் என்று கூறியிருந்தார். இய‌க்குன‌ர் க‌ர‌ண் ஜோக‌ர் வ‌ர் பெய‌ர் டெண்டுல்க‌ர் அவ‌ர் ஒரு மாவீர‌ர் என‌ பாராட்டியிருந்தார்.

மேலும் ப‌ல‌ பிர‌ப‌ல‌ங்க‌ளும் டிவிட்ட‌டில் ச‌ச்சினுக்கு வாழ்த்து தெரிவித்த‌ன‌ர். இத‌னிடையே முன்னாள் ஆஸ்திரேலிய‌ வீர‌ர் ஷேன் வார்னேவும் டிவிட்ட‌ரில் வாழ்த்து தெரிவித்தார்.

இன்னெரு ப‌க்க‌ம் சராசரி ர‌சிக‌ர்க‌ள் டிவிட்ட‌ரில் த‌ங்க‌ள் ம‌கிழ்ச்சியை வெளிப்ப‌டுத்திக்கொண்டிருந்த‌ன‌ர். ஒரு ர‌சிக‌ர் சச்சின் 300 ர‌ன்க‌ள் எடுப்பார் என்று கூறியிருந்தார். இன்னெரு ர‌சிக‌ர் ச‌ச்சின் எத‌னையும் விட‌ பெரிய‌வ‌ர் என்றும் ச‌ச்சின் யுக‌த்திற்கு க‌ட‌வுளுக்கு ந‌ன்றி என‌ கூறியிருந்தார். ம‌ற்றொரு ர‌சிக‌ர் ச‌ச்சினுக்கு பார‌த் ர‌த்னா வ‌ழ‌ங்க‌ வேண்டும் என‌ தெரிவித்தார்.

 ஆக‌ தொலைகாட்சிக‌ளில் எப்ப‌டி கிரிக்கெட் வீர‌ர்க‌ளும் நிபுண‌ர்க‌ளும் ச‌ச்சின் சாத‌னையை அல‌சி அவ‌ர் புக‌ழ் பாடிகொண்டிருந்த‌ன‌ரோ அதே போல‌ டிவிட்ட‌ரில் இந்திய‌ர்க‌ள் ச‌ச்சின் சாத‌னை கொண்டாடி ம‌கிழ்ந்த‌ன‌ர்.

ச‌ச்சின் தொட‌ர்பான‌ ப‌திவுக‌ளை குறிக்க‌ உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ச்சின் க‌ட‌வுல் என்னும் ப‌த‌மே டிவிட்ட‌ரில் முன்னிலை வ‌கித்த‌து என்றால் பார்த்துக்கொள்ளுங்க‌ள்.

ந‌ட‌ப்பு நிக‌ழ்வுக‌ள் குறித்த‌ எண்ண‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌ டிவிட்ட‌ர் எத்த‌னை வ‌சதியாக‌ உள்ள‌து என்ப‌த‌ற்கான‌ சமீப‌த்திய‌ உதார‌ண‌ம் இந்த‌ ச‌ச்சின் புராண‌ம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சச்சினுக்கு டிவிட்டரில் குவிந்த‌ பாராட்டு

  1. நாட்டுக்கு பெருமை சேர்பதில் சச்சினுக்கு நிகர் சச்சின் தான்

    மேலும் ஒரு சந்தேகம் – http://twitter.com/cybersimman இந்த ட்விட்டர் முகவரி உங்களுடையது தானா?

    Reply
    1. cybersimman

      ஆம் என்னுடையது தான் நண்பரே

      Reply
  2. சச்சின் எப்போதுமே சச்சின் தான்.
    ட்விட்டரில் அவரைப் பற்றி இவ்வளவு விசயம் நடந்தது குறித்து மகிழ்வு.

    Thanks and Regards,
    டெக்‌ஷங்கர் @ TechShankar

    சச்சின் டெண்டுல்கரின் அறிய படங்களைப் பார்வையிட :
    Sachin Tendulkar’s Rare Picture Collections

    Reply
  3. நல்ல பகிர்வு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    Reply
  4. Ameer

    Whats his twiiter id ? please send me

    Reply
    1. cybersimman

      this is unverified account in the name of tendulkar;
      http://twitter.com/Sachintendulkar

      Reply
  5. East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin.
    Congrats to Sachin Dear Little Master.

    Have a look at here too..

    Sachin Tendulkar’s Rare Photos, Sachin’s Kids pictures, Videos

    Reply

Leave a Comment

Your email address will not be published.