ஒரு நாள் திரைப்படம்;அழைக்கிறது யூடியூப்

உங்கள் வாழ்க்கையின் ஒரு அபூர்வ தருணத்தை பதிவு செய்து வைப்பதிலோ, அல்லது வரலாற்றில் (சிறு) இடம் பிடிப்பதிலோ உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அதற்கான வாய்ப்பை யூடியுப் உருவாக்கி தந்துள்ளது. அப்படியே நீங்களும் கூட நானும் ஒரு படத்தை இயக்கி இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியலாம்! ஒரு படத்தை இல்லை, ஒரு காட்சியை இயக்கியதாக நீங்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்.

இதற்காக ஒரு நாளில் வாழ்க்கை (லைப் இன் எ டே) எனும் இணைய திட்டத்தை யூடியுப் அறிவித்திருக்கிறது. இந்த திட்டத்தின்படி யூடியுப் பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான காட்சியை படம் பிடித்து அதனை சமர்ப்பிக்கலாம். அந்த காட்சி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வாறு இணையவாசிகள் சமர்ப்பிக்கும் காட்சிகளை ஒன்று திரட்டி ஒரு முழு நீள திரைப்படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் கெவின் மெக்டொனால்டு இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார். தி லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இவர்.

கிளேடியேட்டர் உள்ளிட்ட ஆஸ்கர் விருது வென்ற படங்களை இயக்கிய ரிட்லி ஸ்காட் இந்த திரைப்படத்திற்கான தயாரிப்பாளராக தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

வரும் 24ம் தேதி இந்த ஒரு நாள் திரைப்படத்திற்கான தினமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இணையவாசிகள் அன்றைய தினம் தாங்கள் எடுக்கும் வீடியோ காட்சியை சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே சொன்னது போல எதைப் பற்றி வேண்டுமானாலும் வீடியோ காட்சியை எடுத்து சமர்ப்பிக்கலாம். அபூர்வமான சூரியோதயம், மழலையின் சிரிப்பு, இயற்கை காட்சி என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் வீடியோ எடுக்கலாம். விருப்பப்பட்டால் தங்கள் வாழ்க்கையின் ஒரு சம்பவத்தை கூட படம் பிடித்து அனுப்பலாம்.
இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் காட்சிகளில் பொருத்தமானவற்றை தேர்வு செய்து திரைப்படமாக்குவது கெவின் மெக்டொனால்டின் பொறுப்பு. தேர்ந்தெடுக்கப்படும் காட்சிகளை அளித்தவர்களின் பெயர், திரைப்பட பெயர் பட்டியலில் இடம்பெறும். உங்கள் பெயர் வந்தால் நீங்களும் இயக்குனர்தான் அல்லவா! அமெரிக்காவில் ஜனவரியில் நடைபெறும் புகழ்பெற்ற சன் டான்ஸ் திரைப்பட விழாவில் இந்த படம் காண்பிக்கப்படும்.

யூடியுப்பில் இந்த திட்டத்திற்காக லைப் இன் எ டே எனும் பெயரில் தனிப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தில் உள்ள 670 கோடி பேர் தினந்தோறும் தங்கள் கண்கள் எனும் லென்ஸ் வழியே உலகத்தை ஒவ்வொருவிதமாக பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இத்தகைய விதவிதமான பார்வைகளையெல்லாம் சேகரித்து ஒரே கதையாக சொன்னால் பூமியில் ஒரு நாள் வாழ்க்கையை விவரித்ததாக இருக்காதா? எனும் கேள்வியோடு யூடியுப் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 24ம் தேதி 24 மணி நேரத்துக்குள் எடுக்கப்படும் காட்சிகளை இந்த திட்டத்திற்காக ஏற்றுக்கொள்ள உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் யூடியுப்பில் சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

ஊர் கூடி தேர் இழுப்பது போல இணையவாசிகளை ஒன்று திரட்டி அவர்களின் கூட்டு முயற்சியால் ஒரு படைப்பை உருவாக்குவது,இணையத்தில் தற்போது பிரபலமாக உள்ளது. அதன் தொடர்ச்சியாகவே யூடியுப் இந்த ஒரு நாள் திரைப்பட திட்டத்தை அறிவித்துள்ளது.  ஏற்கனவே யூடியுப் இசைப் பிரியர்களின் பங்களிப்போடு சிம்பொனி இசையை இதேபோல உருவாக்கி காட்டியது நினைவிருக்கலாம்.
———

http://googleblog.blogspot.com/2010/07/life-in-day.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஒரு நாள் திரைப்படம்;அழைக்கிறது யூடியூப்

  1. c.p.senthilkumar

    நல்ல ஐடியாதான்.ஆனால் அசாத்திய உழைப்பு வேணும் யூ டியூப் நிர்வாகத்திற்கு

    Reply
    1. cybersimman

      உண்மை தான்.ஆனால் இண்டெர்நெட் உருவாக்கித்தரும் சாத்தியங்களை பயன்படுத்தி பார்க்க வேண்டாமா?அதற்காக உழைக்க வேண்டும்.

      Reply
  2. Pingback: ஒரு நாள் திரைப்படம்;அழைக்கிறது யூடியூப் : வலைச்சரம்

  3. Pingback: ஒரு நாள் திரைப்படம்;அழைக்கிறது யூடியூப்

Leave a Comment

Your email address will not be published.