இடம் பொருள் வலைப்பின்னல்

இடங்களின் மீது காதல் கொண்டவரா நீங்கள்? இடம் சார்ந்த நினைவுகளையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் விருப்பம் உங்களிடம் இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுக்காக என்று ஒரு இணையதளம் இருக்கிறது.

பிளேஸ்கனெக்ட் என்னும் அந்த தளத்தின் இடம் சார்ந்த வலைப்பின்னல் சேவை என்று கூறலாம்.
இண்டெர்நெட்டில் இப்போது வலைப்பின்னல் சேவை தளங்களுக்கு குறைவில்லை என்றாலும் பிளேஸ்கனெக்ட் சற்றே வித்தியாசமானது.

இங்கு இடம் தான் எல்லாமும். உங்களுக்கு பிடித்த அல்லது உங்களை பாதித்த இடங்களை இந்த தளத்தி வழியே பகிர்ந்து கொள்ளலாம். இப்படி பகிர்வதன் மூலம் உங்கள் பழைய நண்பர்கள் அல்லது தற்செயலாக சந்தித்தவர்களை தேடிக்கண்டு பிடிக்கலாம் என்பதே விஷயம்.

ஆம் எப்போதோ வெளியூர் பயணத்தின் போது ஓட்டலிலோ அல்லது பார்க்கிலோ வேறு எந்த பொது இடத்திலோ புதிதாக ஒருவரை சந்தித்து நண்பர்களாகி இருப்பீர்கள்.

முதல் சந்திப்பிலேயே நெருக்கமாகி முகவரி செல்வோன் எண் போன்றவற்றை எல்லாம் வாங்கி வைத்துக் கொள்வது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. எனவே ரெயில் ஸ்நேகம் போல இந்த சந்திப்புகள் இட ஸ்நேகாமாகவே நின்று விடும்.

பின்னர் எப்போதாவது பழைய புகைப்படங்களை பார்க்கும் போது இந்த பழைய நண்பர்களும் நினைவு வரலாம். அவர்களை மீண்டும் சந்திக்க முடிந்தால் அல்லது தொடர்பு கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் என்ற உணர்வும் ஏற்படலாம்.

அதே போல உங்களையும் கூட உலகின் ஏதோ ஒரு மூளையில் யாரோ ஒருவர் தேடிக் கொண்டிருக்கலாம்.
ஆனால் தொடர்பு முகவரி இல்லாத பட்சத்தில் இத்தகைய தற்செயல் நண்பர்களை மீண்டும் சந்திக்க முடிவது சாத்தியமில்லை.

இந்த இடத்தில் தான் பிளேஸ்கனெக்ட் வருகிறது. இடம் மூலமே என்றோ பார்த்த நண்பர்களோடு தொடர்பு கொள்ள இந்த தளம் உதவி செய்கிறது. நீங்கள் எந் இடத்தில் நண்பரை சந்தித்தீர்களோ அந்த இடத்தை இந்த தளத்தில் குறிப்பிட வேண்டும்.

சந்தித்த காலத்தையும் குறிப்பிட வேண்டும். உங்களது நண்பர் இந்த தளத்திற்கு வருகை தந்து இந்த குறிப்பினை பார்க்கும் பட்சத்தில் தானும் அந்த சந்திப்பின் கிளர்ச்சியான அனுபவத்தை நினைவு கூர்ந்து உங்களை தொடர்பு கொள்ளலாம்.

அந்தநண்பரின் பெயரை மறந்து விட்டிருந்தால் கூட பிரச்சனையில்லை. பார்த்த இடத்தை வைத்தே அவரை மீண்டும் தொடர்பு  கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இப்படி ரெஸ்டாரெண்ட், பள்ளி, கல்லூரி, பூங்கா என்று எந்த இடம் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் சர்வேலோக சஞ்சாரி என்றால் இப்போதே கூட அந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள இடங்களை பார்த்து உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்கின்றனரா என்று பார்க்கலாம்.

பார், கிளப், பள்ளி, கல்லூரி, ரெஸ்டாரண்ட்கள், வழிபாட்டு தளங்கள், சுற்றுலா மையங்கள், திருமண கூடங்கள் என தனித்தனி தலைப்புகளின் கீழ் இடங்கள் பற்றிய பதிவுகள் இடம் பெற்றுள்ளன. நீங்களும் அதில் சேர்ந்து கொள்ளலாம்.

ஒரே இடத்தில் சந்தித்தவர்கள் இந்த தளத்தின் மூலம் மீண்டும் தொடர்பு கொள்ள முடிவது சந்தோஷமான விஷயம் தான்.
இந்த தளத்திற்கு இன்னொரு பகுதியும் உள்ளது. பார்த்த இடம் மட்டுமல்ல பார்க்க போகும் இடத்தையும் இதன் மூலம் பகிர்ந்து கொள்வதோடு இடத்தை குறிப்பிட்டு அங்கு நண்பர்களை அழைக்கவும் செய்யலாம்.

நகரில் நடக்கும்புதிய நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்ளவும் இது கை கொடுக்கும். நண்பர்கள் எங்கே செல்ல உள்ளனர் என்பதை தெரிந்து கொள்வதோடு பிடித்தமான நிகழ்ச்சியின் அடிப்படையில் புதிய நண்பர்களையும் தேடிக் கொள்ளலாம்.

சுவாரஸ்யமான சேவைதான். ஆனால் இந்த தளத்தை அதிகமானோர் பயன்படுத்த துவங்கினால் தான் ஒருவருடைய பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு அதிகம்.

அதற்கேற்ப இந்த தளமும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. பத்து லட்சம் உறுப்பினர் என்னும் இலக்கை நிர்ணயித்துக் கொள்ள இந்த தளம் முதலில் உறுப்பினர்களாக சேருபவர்களை பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகவும் ஆசை காட்டுகிறது.

-=————–]

http://www.placeconnect.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “இடம் பொருள் வலைப்பின்னல்

  1. நல்லதொரு கட்டுரை சகோதரா வாழ்த்துக்கள்

    Reply
    1. cybersimman

      பாராட்டுக்கு மிக்க நன்றி.

      Reply

Leave a Comment

Your email address will not be published.