டெஸ்க்டாப்பே என்னைப்பற்றி சொல்;புதுமையான வால்பேப்பர் சேவை

உங்கள் டெஸ்க்டாப் உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு சொல்லாமல் சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் வால்காஸ்ட் சேவையை பயன்படுத்தி பார்க்கலாம்.அதோடு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தங்களது தனித்த‌ன்மையை பிரதிபலிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வால்காஸ்ட் உற்சாகத்தை தரக்கூடும்.

வால்காஸ்ட் அடிப்படையில் எளிமையான சேவை.ஆனால் கொஞ்சம் புதுமையாது.

கம்ப்யூட்டர் பயனாளிகள் நன்கறிந்த வால்பேப்பர் வசதியை தனிப்பட்ட தன்மையை உணர்த்தும் சுவாரஸ்யமான சேவையாக வால்காஸ்ட் மாற்றித்தருகிறது.

கம்ப்யூட்டர் திரை வெறுமையாக இல்லாமால் கண்ணுக்கு இனிய வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல அழகிய காட்சிகளை கம்ப்யூட்டர் திரையில் தோன்றும் வ‌கையில் வால்பேப்பராக (ஸ்கிரின்சேவர்)பயன்படுத்துகிறோம் அல்லவா?இத்தகைய வால்பேப்பர்கள் இண்டெர்நெட்டில் கொட்டிக்கிடக்கின்றன.

நம்மிடம் உள்ள புகைப்படத்தை இப்படி வால்பேப்பராக அமைத்து கொள்ளலாம்.

இந்த வசதியை இன்னும் மேம்படுத்தி ஒரு புகைப்பட கேலரியாக நம் கம்ப்யூட்ட‌ரின் வால்பேப்பராக பயன்படுத்திக்கொள்ளும் வசதியை தான் வால்காஸ்ட் வழங்குகிறது.

வால்காஸ்ட்டில் உறுப்பினராகி உங்கள் வசம் உள்ள புகைப்படங்களை சம்ர்பித்தீர்கள் என்றால் வால்காஸ்ட் அவற்றை அழகான வால்பேப்பராக மாற்றி உங்கள் கம்ப்யூட்டரில் உலாவ விடுகிற‌து.அதன் பிறகு உங்கள் கம்ப்யூட்ட்ரை பார்த்தால் வரிசையாக புகைப்படங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.

எதோ ஒரு பெயர் தெரியாத கடற்கரை காட்சி அல்லது இயற்கை வெளியை வால்பேப்பராக வைப்பதை விட இப்படி நீங்கள் எடுத்த சமீபத்திய புகைப்படங்களை கம்ப்யூட்டரில் பேச வைத்தால் மற்றவர்களுக்கு உங்களை பற்றி எடுத்து சொன்னதாக இருக்கும் அல்லவா?

போன வாரம் தான நீங்கள் விடுமுறைக்கு ஊட்டியோ கோவாவோ போய் வந்தீர்கள் என்றால் அந்த பயணம் பற்றி ஒவ்வொருவராக சொல்லிகொண்டிருக்க வேண்டும் என்றில்லை நண்பர்கள் உங்கள் டெஸ்க்டாப்பை பார்த்தே தெரிந்து கொள்ள வைக்கலாம்.

வால்காஸ்ட்டில் என்ன விஷேசம் என்றால் இதில் புதிய படங்களை பதிவேற்றும் போது உடனே அவற்றை வால்பேப்பராக மாற்றி விடுகிறது.எனவே கம்ப்யூட்டரின் திரை எப்போதுமே புதிப்பிக்கப்பட்டதாக இருக்கும்.

உதாரணத்திற்கு புதிதாக தந்தை ஆனவர்கள் குழந்தையின் படத்தை பதிவேற்றியதுமே அந்த மழலை கம்ப்யூட்டரில் சிரித்துக்கொண்டிருக்கும்.

புகைப்படங்களை பெரிதாக்குவதோ,டெலிட் செய்வதோ  இகவும் சுலபம்.அதோ போல் உங்கள் நண்பர்கள் அனுப்பி வைக்கும் படங்களையும் இடம் பெற வைக்கலாம்.உங்களுக்கான பக்கம் மை வால்பேப்பராக உருவாக்கி தரப்படும்.அதன் மூலம் உங்கள் ப‌டங்களை விருப்பம் போல நிர்வகித்து கொள்ளலாம்.

படங்களை முழுவதுமாக பகிர்ந்து கொள்ளலாம்.நண்பர்கள் பார்வைக்கு என்று சுருக்கியும் கொள்ளலாம்.ஐபோன் போன்றவற்றில் இருந்து படம் எடுத்த கையோடு படங்களை பதிவேற்றும் வசதியும் உண்டு.எமெயில் மூலமும் படங்களை இணைக்கலாம்.

எப்படியும் பேஸ்புக் யுகத்தில் புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் பழக்கம் பலருக்கு இருக்கிற‌து.பேஸ்புக்கில் புகைப்படங்களை நண்பர்கள் பார்க்க பகிர்ந்து கொள்வது போல டெஸ்க்டாப் மூலமே படங்களை பகிர்ந்து கொள்ள வால்காஸ்ட் வழி செய்கிற‌து.

அப்படியே நம் கம்ப்யூட்டர் நம்மை பற்றிய தகவல்களை சொல்லிக்கொண்டிருக்கவும் வழி செய்கிற‌து.உங்கள் வால்பேப்பருக்கு உயிர் கொடுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதனை அழகாக செய்து காட்டுகிறது.

இலவசமான சேவை தான்.பயன்படுத்தி பாருங்கள் பிடித்து போகலாம்.

இனையதள முகவரி;http://wallcast.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டெஸ்க்டாப்பே என்னைப்பற்றி சொல்;புதுமையான வால்பேப்பர் சேவை

  1. மிக புதுமையாக உள்ளது! மிக்க நன்றிங்க!

    Reply
    1. cybersimman

      மகிழ்ச்சி நண்பரே

      Reply
  2. ravindran

    Will this work in my windows 7 starter which does not allow any change to its default wall paper

    Reply
    1. cybersimman

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *