வருங்கால எழுத்தாளர்களுக்கான இணையதளம்

நீங்களும் எழுத்தாளர்கள் தான் என்று ஊக்கம் அளித்து எழுதும் ஆர்வம் கொண்ட எவரும் தங்கள் எழுத்துக்களை வெளியிட வழி செய்த இணையதளங்கள் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தன.

நீங்களும் அவற்றை அறிந்திருக்கலாம்.இண்டெர்நெட் அளித்த எல்லையில்லா சுதந்திரத்தை பயன்படுத்தி படைப்புக்களை பதிப்பிக்கும் வாய்ப்பை எழுத்தாளராக விரும்பும் அனைவருக்கும் ஏற்படுத்தி தந்த இந்த தளங்கள் சுயபதிப்பு என்னும் கருத்தாக்கத்தையும் பிரபலமாக்கின‌.

இந்தியாவில் கூட லைம்சோடா (இப்போது காணவில்லை)போன்ற தளங்கள் அறிமுகமாகி இணையவாசிகளை கவர்ந்தன.

ஆரம்பத்தில் புரட்சிகரமானதாக கருதப்பட்டாலும் வலைப்பதிவுகள் என்னும் கருத்தாக்கம் அறிமுகமான பிறகு இந்த வகை தளங்கள் முக்கியத்துவத்தை இழக்கத்துவங்கின.இவற்றின் தேவையும் குறைந்துவிட்டது.

நினைத்தவுடன் வலைப்பதிவு ஒன்றை துவங்கி தனக்கான வாசகர்களை தேடிக்கொள்ள முடியும் என்னும் போது படைப்புகளை வெளியிடுவதற்காக தனியே ஒரு தளத்தை ஏன் தேடிச்செல்ல வேண்டும்?

இருப்பினும் வலைப்பதிவுகளை காட்டிலும் எழுத்தாளர்களுக்கான இரு இணையமேடை பலவிதங்களில் சாதகமானது என்றே தோன்றுகிறது.குறைந்தபட்சம் லிட்சே இணையதளம் இந்த நம்பிக்கையில் தான் துவக்கப்பட்டுள்ளது.

வலைப்பதிவு மூலம் எழுதுவதை வெளியிடுவது சுலபம் தான்.ஆனால் அதற்கான வாசகர்களை பெறுவது எப்படி?எழுத்தில் உள்ள குறை நிறைகளை சுட்டிக்காட்டி ஊக்குவிக்க யாராவது வேண்டாமா?

இவை எல்லாமே வலைப்பதிவுகளில் உண்டு என்றாலும் இதற்காக என்றே ஒரு இணைய சமூகம் உருவாக்கப்பட்டு அதன் ஒரு அங்கமாக செய்லப்டும் வாய்ப்பு கிடைப்பது கூடுதல் ஊக்கத்தை அளிக்க கூடும் அல்லவா?அதிலும் பார்த்தலும் பகிர்தலும் என்பதே இணையவாசிகளின் கொள்கையாக இருக்கும் பேஸ்புக்+டிவிட்டர் யுகத்தில் எழுதும் ஆர்வம் கொண்டவர்கள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஒரு இடம் இருப்பது பொருத்தமானது தானே.

இப்படி எழுத்தாளர்களையும் வாசக‌ர்களையும் இணைக்கும் படைப்பாற்றலுக்கான இணைய சமூகமாக உருவாகும் நோக்கத்தோடு லிட்சே அமைக்கப்பட்டுள்ளது.

படைப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த தளத்தில் தங்கள் எழுத்துக்களை வெளியிடலாம்.அவை புதிய எழுத்துக்கள் என்னும் தலைப்பின் கீழ் வெளியாகும்.கதை,கவிதை,கட்டுரை என எல்லா வகையான எழுத்துக்களையும் வெளியிடலாம்.

அதே நேரத்தில் வாசிப்பு ஆர்வம் கொண்டவர்கள் இந்த எழுத்துக்களை படித்து பார்த்து கருத்து கூறலாம்.விமர்சிக்கலாம்.மேலும் மெருகேற்ற ஆலோசனை கூறலாம்.

இது இரு தரப்பினருக்குமே பயன் தரக்கூடியது.வாசக‌ர்கள் தங்களை பரவசத்தில் ஆழ்த்தக்கூடிய புதிய திற‌மையை அடையாளம் க‌ண்டு மகிழும் வாய்ப்பிருக்கிறது.ஒரு நல்ல வாசக‌னுக்கு இதைவிட ஆனந்தம் வேறு இருக்க முடியுமா?இதற்காகவே இளம் எழுத்தாளர்களை கருத்துக்களால பட்டை தீட்டும் முயற்சியில் ஈடுபடலாம்.

வளர் நினைக்கும் எழுத்தாளருக்கு இப்படி பட்ட வாசகர்களை விட வேறு என்ன வரம் கிடைத்து விடப்போகிற‌து.

அதே போல குறிப்பிட்ட வகையான எழுத்துக்களை விரும்பும் நபர்கள் ஒத்த கருத்துள்ளவர்களை தொடர்பு கொண்டு தங்களுக்கான சமூகத்தையும் உருவாக்கி கொள்ளலாம்.ஒரு எழுத்தாளரை மையமாக கொண்டும் இந்த சமூகம் உருவாக‌லாம்.இந்த சமூகத்தின் வழிகாட்டுதலோடு புதிய எழுத்தாளர்களும் உருவாகலாம்.

அவர்வர் தங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப படைப்புகளை தேர்வு செய்து கொள்ள பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுத்துக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.சமீபத்தில் படிக்கப்பட்ட எழுத்துக்கள் மற்றும் தற்போது இணையத்தில் உள்ள பயனாளிகள் மூலமும் படைப்புகளையும் வாசக நண்பர்களையும் நாடலாம்.
முழுக்க ஆங்கிலத்தில் இருக்கிறது என்பது மட்டுமே இந்த தளத்தின் பலவீனம்.ஆங்கிலத்தில் வாசிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் மற்றும் சர்வதேச எழுத்துக்களை வாசிக்க விரும்புகிற‌வர்கள் இந்த தலத்தை பெரிதும் விரும்பலாம்..

மற்றபடி அன்னை தமிழிலும் இது போன்ற தளம் இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கத்தை யாராவது போக்கினால் நன்றாக இருக்கும்.

இணையதள‌ முகவரி;http://litsay.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.