நோய் அறிய ஒரு தேடியந்திரம்.

இணைய யுகத்தில் தலைவலியோ காய்ச்சலோ வந்தால் டாக்டரை பார்பதற்கு முன்னர் பலரும் கூகுலையே நாடுகின்றனர்.கூகுலில் நோய் தொடர்பான தகவல்களை தேடிப்பார்த்து அலசி ஆராய்ந்து அதன் பின்னரே டாகடரிடம் செல்கின்றனர்.

இன்னும் சிலர் கூகுல் உதவியுடன் சுயவைத்தியம் பார்த்து கொள்வதும் உண்டு.சிலர் நோயை முழுமையாக புரிந்து கொள்ளவும் கூகுலில் தகவல்களை தேடுகின்றனர்.

இப்படி இணையத்தில் மருத்துவ தகவல்களை தேடுபவர்களின் வசதிக்காக என்றே புதிய தேடியந்திரம் அட்ரிசியா உதயமாகியுள்ளது.

நோய் அறிவதற்கான தேடியந்திரம் என்றும் இதனை சொல்லலாம்.அதாவது இந்த தேடியந்திரத்தில் நோய்க்கூறுகளை குறிப்பிட்டு தேடினால் அவற்றை குறிக்கும் நோய் என்ன என்பதை முடிவுகளாக பட்டியலிடுகிறது.

எந்த நோய் தொடர்பான தகவல் தேவை என்றாலும் இந்த தேடியந்திரத்தை பயன்படுத்தலாம்.கூகுல் போலவே எளிமையாக உள்ள இதன் முகப்பு பக்க தேட்ல கட்டத்தில் நோய்க்கூறுகளை டைப் செய்துவிட்டு காத்திருந்தால் போதும் நோய் என்ன நோய் என்று சொல்லி விடுகிறது.

ஆனால் இது பட்டியலிடுவது சொந்த முடிவுகள் அல்ல;இரவல் முடிவுகள் தான்.அதாவது முடிவுகளை பட்டியலிட இதற்கென்று தனி வழியோ அதற்கான தேடல் தொழில்நுட்பமோ கிடையாது.பல தேடியந்திரங்கள் கூகுலின் தேடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முடிவுகளை பட்டியலிட்டு தருவது உண்டு அல்லவா?அதே போல இந்த தேடியந்திரம் கூகுலின் பிரதான போட்டியாளரான மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திரத்தை பயன்படுத்தி மருத்துவ தகவல்களை தேடி தருகிறது.

பிங்கில் தேட இன்னொரு தேடியந்திரம் எதற்கு?நேரிடியாக பிங்கிலேயே தேடிவிடலாமே என்று கேட்கலாம்.

விஷயம் என்னவென்றால் பிங்கில் தேடினாலும் கிடைக்க வாய்ப்பில்லாத தகவல்களை இந்த தேடியந்திரம் தேடித்தருவதாக சொல்கிறது.அதாவது பிங்கில் தேடலுக்கான குறிச்சொற்களை சமர்பிப்பதற்கு முன்னர் இந்த தேடியந்திரம் நோய்க்குறிகள் முலம் இணையவாசிகள் மனதில் உள்ளது என்னவென்று யூகித்து அறிந்து அதற்கேற்ப குறிச்சொற்களில் மாற்றங்களை செய்து பிங்கில் சமர்பிப்பதாக சொல்கிறது.

இதன் காரணமாக தேடல் முடிவுகள் பொருத்தமானதாக அமைவதாகவும் அட்ரிசியா உறுதி அளிக்கிறது.மருத்துவ களைஞ்சியத்தில் உள்ள சொற்களை கொண்டு தேடலை பட்டை தீட்டக்கூடிய குறிச்சொற்களை தேர்வு செய்து பிங்கிடம் தேடல் கோரிக்கையை மாற்றி சமர்பிப்பதன் மூலம் இது சாத்தியமாவதாக அட்ரிசியா விளக்கம் தருகிறது.

அது மட்டும் அல்ல மருத்துவ தேடலில் ஈடுபடும் போது தொடர்புடைய நோய்க்கூறுகளையும் அருகே பட்டியலிட்டு காட்டுகிறது.அவற்றில் எந்த நோய்க்கூறுகள் எல்லாம் இருக்கிறதோ அவற்றை சேர்த்து கொள்ளலாம்.இல்லாத நோய்க்கூறுகளை விலக்கி கொள்ளலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் உடலை பாதித்துள்ள நோய் என்ன என்பதை சரியாக கண்டு கொள்ளலாம்.அதே போல நோய்க்கூறுகள் தொடர்பான நோய்கள் பட்டியலும் இடம் பெறுகிறது.எந்த நோய் என்று தோன்றுகிறதோ அதனை கிளிக் செய்தால் அந்த நோய் தொடர்பான விவரங்களையும் சிகிச்சை முறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

நோய்களுக்கான சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ள விரும்பினாலோ அல்லது நோய்கள் பற்றி மேலும் தகவல் அறிய விரும்பினாலே இந்த தேடியந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .

தேடியந்திர முகவரி;http://www.attricia.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “நோய் அறிய ஒரு தேடியந்திரம்.

  1. நல்ல தகவல் பகிர்தமைக்கு நன்றி

    Reply

Leave a Comment

Your email address will not be published.