பசுமை வேலைக்கான தேடியந்திரம்.

பசுமை தேடியந்திரங்கள் பல இருக்கின்றன.பசுமை செய்திகளுக்கான இணையதளங்களும் இருக்கின்றன.இப்போது பசுமை வேலைவாய்ப்பை தேடிதரும் தேடியந்திரம் ஒன்று உதயமாகியுள்ளது.

கிரீன் ஜாப் பாங்க் என்னும் இந்த தேடியந்திரம் பசுமை தன்மை கொண்ட வேலைகளை தேடித்தருகிறது.

சுற்றுச்சூழல் கொள்கையை மதிக்கும் நிறுவனங்களில் தான் வேலை பார்ப்பேன் என்ற லட்சிய நோக்கம் கொண்டவர்கள் இதன் மூலம்  பசுமை வேலை வாய்ப்புகளை தேடிக்கொள்ளலாம்.அதாவது நோக்கத்திலும் செயல்பாட்டிலும் பசுமையை பின்பற்றும் வர்த்தக நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

வேலை தேடுபவர்களில் கொள்கை பிடிப்பு கொண்டவர்கள் வேலை வாய்ப்பு தளங்களில் தேடும் போதே தங்கள் கொள்கைக்கு உகந்த நிறுவங்களாக தேடிப்பார்த்து விண்ணப்பிக்கும் வழக்கம் கொண்டிருக்கலாம்.அந்த வகையில் பசுமை நம்பிக்கை கொண்டவர்கள் பசுமை நிறுவங்களில் மட்டும் பணியாற்ற விரும்பலாம்.

இத்தகையை நோக்கம் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த தளம் பல்வேரு வேலை வாய்ப்பு தளங்களில் வெளியாகும் வேலை வாய்ப்புகளில் எவை எல்லாம் பசுமை நிறுவனம் சார்ந்ததோ அவற்றை தேர்வு செய்து பட்டியலிடுகிறது.

பசுமை நிறுவனங்களிலும் எந்த எந்த வகை உள்ளனவோ அவையெல்லாமும் வகைபடுத்தப்பட்டுள்ளன.சூர்ய மின்சக்தி,உயிரி எரிபொருள்,காற்றாலை என பல்வேறு வகையான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தேடியந்திர முகவரி;http://www.thegreenjobbank.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *